தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

சிலம்பம் கற்கும் நடிகை

20221109154254642.jpg

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் தங்கலான் இது கோலார் தங்க வயல் பின்னணியில் உருவாகும் ஒரு பீரியட் படம். இதன் படப்பிடிப்பு இப்போதுப் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பார்வதி பசுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்காகக் மாளவிகா மோகனன் சிலம்பம் கற்கிறார். மாளவிகா மோகனன் சிலம்பம் கற்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இது என் முதல் முயற்சி என்று பதிவிட்டு இருக்கிறார் நடிகை.

தேஜுஅஸ்வினி

20221109154410223.jpg

உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கும் படம் பிளாக்மெயில். இந்தப் படத்தில் ஹீரோ ஜிவி பிரகாஷ் இவருக்கு ஜோடியாக தேஜு அஸ்வினி நடிக்கிறார். இவர் என்ன சொல்லப் போகிறாய், பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களில் நடித்தவர்.

ரஷ்யாவில் ராஷ்மிகா

2022110917181536.jpg

அல்லு அர்ஜுனா ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா படம் சக்கை போடு போட்டது. இப்போது அது ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் டிரெய்லர் ரஷ்ய ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்துள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்காக ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் ரஷ்யா போயிருக்கிறார்கள்.

தெலுங்கில் பிசி

20221109154839825.jpg

தமிழ் சினிமாவிற்கு கிட்டத்தட்ட டாட்டா காட்டிக்விட்டார் நிவேதா பெத்துராஜ், இப்போது அவர் மார்க்கெட் தெலுங்கில் படுஜோர். ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். நிவேதா பெத்துராஜ் தாஸ் கா தாம்கி என்று ஒரு தெலுங்கு படம் இயக்குனரும் நடிகருமான விஷ்வக்சென் நடித்து இயக்கும் இது அவருக்கு ஜோடி நிவேதா பெத்துராஜ் இந்த படம் பிப்ரவரி ரிலீஸ்.

வில்லி வேடம் ரொம்ப கஷ்டம்

20221109155005816.jpg

தமிழில் போடா-போடி படத்தில் அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார் அவர் சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை 45 படங்களில் நடித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். வில்லி வேடம் என்றால் இயக்குனர்களுக்கு உடனே நினைவு வருபவர் வரலட்சுமி சரத்குமார் தான். ஆனால் வரலட்சுமி சரத்குமார் வில்லி வேடம் என்பது அவ்வளவு சுலபம் அல்ல அதற்கும் கடின உழைப்பு தேவை என்கிறார்.