தொடர்கள்
தொடர்கள்
கருத்து கதிர்வேலன்

20221025165053114.jpeg

மத்திய அரசு அங்கீகரித்துள்ளது ! பழனிச்சாமி தரப்பு மகிழ்ச்சி.

ஆட்சியில் அமர மக்கள் அங்கீகாரம் அவசியம் தலைவரே அதை மறந்துடாதீங்க.

ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம் செய்வது முடியாத காரியம் அமைச்சர் மா.சுப்பிரமணியம்.

அதெல்லாம் தேர்தல் அறிக்கையில் தான் தோதுபடும் அப்படித்தானே அமைச்சர்.

உழைத்தவர்களை ஓரம் கட்டிக்விட்டு உழைக்காதவர்களுக்கு பதவிக் கொடுக்கிறார்கள் திமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி

பதவித் தந்தாலாவது அவர்கள் உழைக்கிறார்களா என்று ஒரு முயற்சி தான் இது திராவிட மாடல் ஸ்டைல் நீங்க பழைய ஆசாமி உங்களுக்கு புரியாது.

நீதிமன்றங்களில் மாநில மொழி பயன்பாடு மத்திய சட்ட அமைச்சர் வலியுறுத்தல்.

எல்லாம் மறுஒளிபரப்பு போன மாசம் வந்த அமித்ஷா கூட இது தான் சொன்னார் ஆனா ஒன்னு நடக்கலையே.

நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு மொழி, இனம், மதம் பெயரில் தொந்தரவுகள் வரக்கூடும் ஆளுநர் ஆர்.என்.ரவி.

மொத்த தொந்தரவுமே நீங்கதான் அப்படின்னு அறிவாலயம் சொல்லுது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் 16 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யத் திட்டம்.

அப்போ எதிர்க்கட்சிகள் 16 முறை வெளிநடப்புக் கண்டனம் அமளி செய்யணும் கணக்கு கரெக்ட்டா?

உயர்நீதிமன்ற உத்தரவை திருத்தியதாக திமுகவை சேர்ந்த பெண் கவுன்சிலர் கணவர் கைது.

தீர்ப்புகள் திருத்தப்படலாம் சொன்னது தப்பாப் புரிஞ்சுகிட்ட தம்பதிங்க இவங்க.

ஆளுநருக்கு மரியாதை தர வேண்டும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

அது எங்க கிடைக்கும் மேடம்.

திராவிட கோட்டைக்குள் ஆரியர் ஆர் எஸ் எஸ் உள்ளே நுழைய முடியாது திராவிடர் கழக தலைவர் வீரமணி.

இந்த சமூக நீதி காத்த வீராங்கனை ஒரு பட்டம் தந்தீங்களே அவங்க யாரு ஆசிரியரே?

தேர்தல் வாக்குறுதி பலவற்றை திமுக அரசு நிறைவேற்ற வில்லை இரா முத்தரசன்.

ஓட்டு போட்ட மக்களே மறந்து போயிட்டாங்க ஆனா தோழர் மறக்காமல் ஞாபகத்துல வச்சிருக்கார்.

கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் மட்டும் நாம் இல்லை புதுவை முன்னாள் அமைச்சர் நாராயணசாமி.

அப்பப்ப கோஷ்டி சண்டையும் போடணும் சொல்றாரு தலைவர்.

தமிழக அரசை விமர்சிப்பவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை அமைச்சர் மா சுப்பிரமணியம்.

தேர்தல் போது மட்டும்தான் எங்கள் கவலை அது.