தொடர்கள்
கவர் ஸ்டோரி
விகடகவியார்  ஸ்பெஷல் ரிப்போர்ட் = குஜராத் இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் !  பிஜேபி உஷார் !

20221110010843977.jpeg

குஜராத் இமாச்சலப்பிரதேஷ் தேர்தல் இது கிட்டத்தட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் தொடர்பாக இரண்டு அரசியல் நிகழ்வுகளை நாம் கவனிக்க வேண்டும். முதலாவது ராகுல் காந்தி நடைப்பயணம், ராகுல்காந்தி பற்றிப் அவரது கட்சியினரே பரவலாக பேசிய கருத்து அவர் கட்சியில் முழு ஈடுபாடுடன் இல்லை அடிக்கடி காணாமல் போகிறார் மூத்தத்தலைவர்களை ஒதுக்குகிறார், இதெல்லாம் அவரைப் பற்றி சொல்லப்பட்ட விமர்சனம். ஆனால், இப்போது நான் அப்படியெல்லாம் இல்லை என்று தன்னை நிரூபிக்க ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதுவரை கிட்டத்தட்ட 3500 கிலோமீட்டர் ராகுல்காந்தி நடந்திருக்கிறார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா,ஆந்திரா, மகாராஷ்டிரம் தற்சமயம் மத்திய பிரதேசத்தில் அவரது நடைப்பயணம் நடக்கிறது. கட்சியைத் தாண்டி அவர் போகும் இடங்களெல்லாம் அவருக்கு ஆதரவு கூட்டம் மெல்ல பெருகுகிறது.

20221110010907776.jpeg

அவர் திருக்குறள் மாதிரி இரண்டு விஷயங்கள் தான் பேசுகிறார். இந்தியாவிற்கு பாஜக, ஆர்எஸ்எஸ் இரண்டுமே வேண்டாம் இதை ஒவ்வொரு முறை ஒவ்வொரு விதமாகச் சொல்லி வருகிறார். ராகுல்காந்தியின் நடைப் பயணம் பாஜகவை கொஞ்சம் தொந்தரவு செய்கிறது தான் போலும் அந்தக் கட்சியின் ஐ டி விங், ராகுல்காந்தி பற்றி போடும் மீம்ஸ் பாஜக தலைவர்கள் ராகுல்காந்தியின் நடைப்பயணத்தில் சின்ன சின்ன விஷயங்களை கண்டுபிடித்து சொல்லும் புகார்கள் உதாரணமாக நடைப்பயணத்தில் கலந்து கொள்ளும் சினிமா பிரபலங்களுக்கு பணம் கொடுக்கிறது காங்கிரஸ் நடைப்பயணத்தில் சிறுவர்களை பயன்படுத்துகிறார்கள் இப்படி அவர்கள் புகார் இன்று வரை சிறுபிள்ளைத்தனமாக தான் இருக்கிறது. ஆனால் இவற்றிற்கெல்லாம் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் பொறுப்பாக பதில் சொல்கிறார் என்பதும் கவனிக்க வேண்டும் நடைப்பயணத்தில் இடையிடையே சோனியா காந்தி பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டு ராகுல்காந்தியை உற்சாகப்படுத்துகிறார். இது தவிர கட்சித் தேர்தலில் காந்தி குடும்பத்தை சேராத ஒருவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்த காந்தி குடும்பம்.இதெல்லாம் குஜராத் இமாச்சலப்பிரதேஷ் தேர்தலில் மாற்றத்தைத் ஏற்படுத்தும் என்று நம்பியது காங்கிரஸ்.

2022111001093605.jpeg

இன்னொரு அரசியல் நடவடிக்கை ஆம் ஆத்மி கட்சி கெஜ்ரிவால் டெல்லியில் மாநில கட்சியாக தொடங்கிய தனது கட்சியை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த விரும்புகிறார். ஏற்கனவே பஞ்சாப் கோவா உத்திரபிரதேஷ் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிப் போட்டியிட்டது. பஞ்சாபில் பாஜக காங்கிரஸ் அகாலி தளம் எல்லாம் மக்கள் செல்வாக்கு இழந்த நிலையில் ஆம் ஆத்மி போட்டியிட்டது. வெற்றி பெற்றது ஆட்சியை கைப்பற்றியது. உத்திரபிரதேஷ் கோவா இரண்டு மாநிலத்திலும் எதிர்பார்த்து வெற்றி பெறவில்லை அடுத்து அவர் இலக்கு குஜராத் இமாச்சலப்பிரதேசம் என்று திட்டமிட்டு இந்த இரண்டு மாநிலங்களில் ஒரு ஆண்டுக்கு முன்பே கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம் செய்தார். குஜராத்தில் மோடி அமித்ஷா இரண்டு மிகப்பெரிய தேர்தல் சாம்பியன்களை எதிர் கொள்ள அதிக கவனம் செலுத்தினார் அடிக்கடி குஜராத்தில் பொதுக்கூட்டம் நடத்தினார் கெஜ்ரிவால். இந்த இரண்டு அரசியல் நிகழ்வுகளும் பிஜேபியை யோசிக்க வைத்தது. பிஜேபியை பொறுத்தவரை அவர்களது அரசியல் காய் நகர்த்தல் என்பது எப்போதும் வெற்றியை குறி வைத்து தான் இருக்கும். இந்த இரண்டு மாநில தேர்தலிலும் அவர்கள் நடவடிக்கை அப்படித்தான் இருந்தது.

20221110011001197.jpeg

குஜராத் இமாச்சலப்பிரதேஷ் பற்றி அமித்ஷா மோடி இருவரும் அடிக்கடி கூடி கூடி பேசினார்கள் மற்ற தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். குறிப்பாக குஜராத் அவர்களுக்கு கௌரவ பிரச்சினையாக இருந்தது பல நல திட்டங்களை குஜராத்துக்கு என்று பிரத்யோகமாக மோடி அறிவித்தார் மேலும் பல நல திட்டங்கள் அறிவிக்க திட்டமிட்டு தேர்தல் தேதியை தள்ளி வைக்கவும் செய்தார்கள் முதலில் தேர்தல் ஆணையம் இமாச்சலப்பிரதேஷ் குஜராத் இரண்டு மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பதாக இருந்தது கடைசி நிமிடம் மாற்றமாக இமாச்சலப்பிரதேசத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டு வாரம் சென்ற பிறகு குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது இந்த இடைப்பட்ட இரண்டு வாரத்தில் பிரதமர் மூன்று முறை குஜராத் சென்று புதிய நல திட்ட அறிவிப்புகளை அறிவித்தார்.

வேட்பாளர் தேர்வில் அமித்ஷா பங்களிப்பு அபாரமானது. அவரைப் பொறுத்தவரை வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை தேடித்தேடி தேர்ந்தெடுத்தார். சில வேட்பாளர்கள் மாற்றுக் கட்சியில் வெற்றி பெறும் செல்வாக்குடன் இருப்பதை பார்த்து அவர்களுடன் பேரம் பேசி அவர்களை பாஜகவை இணைத்து வேட்பாளராக அறிவித்தார். வேட்பாளர் அறிவிப்பின் போது குஜராத் பாஜகவில் ஏகப்பட்ட கூச்சல் குழப்பம் ஆனால் அமித்ஷா அது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 35 பேர் பாஜகவை சேர்ந்த வாய்ப்பிழந்த சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டி வேட்பாளர்களாக பாஜகவை எதிர்த்து போட்டியிட்டார்கள் அதேபோல் மாற்றுக் கட்சியை சேர்ந்த கிட்டத்தட்ட 30 பேருக்கு பாஜகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார் அமித்ஷா தேர்தல் ஏற்பாடு தேர்தல் பணி எல்லாமே அமித்ஷாவின் நேரடி கண்காணிப்பில் நடந்தது கிட்டத்தட்ட 23இடங்களில் அமித்ஷா தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசினார் பிரதமர் மோடி 16 இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசினார் இது தவிர பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி ஐந்திடங்களில் பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 50கிலோமீட்டர் 10 லட்சம் தொண்டர்கள் உடன் இந்தப் பேரணிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் எல்லாமே அமித்ஷா ஏற்பாடு தான். இலவசங்களை கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்து பிரதமர் மோடி பேசினார் இலவசம் சம்பந்தப்பட்ட பொதுநல வழக்கில் மத்திய அரசு இலவசங்களுக்கு எதிர்த்து மனு தாக்கல் செய்தது. ஆனால், குஜராத் தேர்தல் அறிக்கையில் அதிக இலவசங்களை வாரி வழங்கியது பாரதிய ஜனதா தான். இவை எல்லாமே அமித்ஷாவின் திட்டமிடல்.சென்ற தேர்தலை விட இந்த முறை வாக்கு சதவீதம் குறைந்தது நகர்புற வாக்கு சாவடிகளில் மந்தமான வாக்குப்பதிவு இதெல்லாம் பிஜேபியை சங்கடப்படுத்தியது. ஆனால், அமித்ஷா தெளிவாக இருந்தார் இந்த தேர்தலில் ஏற்கனவே பாஜக குஜராத்தில் ஏற்படுத்திய சாதனைகளை முறியடித்து புதிய சாதனை செய்யும் என்றார் உண்மையில் அதுதான் நடந்தது. ஏழாவது முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்தது 128 ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 41 காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தார்கள் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் தோல்வி அடைந்தார் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.

20221110011031880.jpeg

தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குஜராத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்தும் மிகப்பெரும் சாதனை வெற்றியை அளித்ததன் மூலம் பாஜக மீதான அன்பை மக்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.ஊழல் மற்றும் வாரிசு ஆட்சிகள் மீதான மக்கள் கோபம் வெளிப்பட்டுள்ளது என்று குஜராத் தேர்தல் பற்றி உணர்ச்சி பூர்வமாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் மோடி. அமித்ஷா இது பிரதமர் மோடி சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டிருக்கிறார். குஜராத்தை பொ றுத்தவரை அமித்ஷா நினைத்ததை முடித்து விட்டார்.

இமாச்சலப்பிரதேத்தில் இங்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை காங்கிரஸ் பாஜக மாறி மாறி ஆட்சி செய்திருக்கிறது. இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக பெரும் முயற்சி செய்தது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இமாச்சலப்பிரதேசத்தில் ராகுல் காந்தி சோனியா காந்தி ஆகியோர் பிரச்சாரம் செய்யவில்லை பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். வேட்பாளர் தேர்வில் பிரியங்கா காந்தி கவனம் செலுத்தினார் இதெல்லாம் காங்கிரஸ் வெற்றிக்கு காரணம் அதேசமயம் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் பல இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை எழுந்திருக்கிறார்கள் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் பெற்ற மொத்த வாக்குகள் 43.9% பிஜேபி பெற்ற வாக்குகள் 43 சதவீதம். பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் வாய்ப்பை 0.09 வாக்கு சதவீதத்தில் தான் ஆட்சியை இழந்துள்ளது. அதேசமயம் பாஜக அமைச்சர்கள் சிலரும் தோல்வி அடைந்திருக்கிறார்கள். ஏற்கனவே கருத்துக்கணிப்பு இமாச்சலப்பிரதேசத்தில் இழுப்பறி என்று வெளிவந்ததால் காங்கிரஸ் வேட்பாளர்களாக இருக்கும் போதே அவர்களை பத்திரமாக பாதுகாத்து அடை காத்தது. ஆட்சி அமைக்க குறைந்த அளவு வித்தியாசம் இருந்தால் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்கும் என்ற பயம் தான் ஒரு காரணம். பாஜகவின் தோல்விக்கு ஆப்பிள் விவசாயிகள் முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஆப்பிள் விவசாயிகள் ஆப்பிள் கொள்முதலுக்கான விலையை தனியார் நிறுவனங்கள் மிகக் குறைவாக நிர்ணயித்தது இதில் தலையிட சொல்லி ஆப்பிள் விவசாயிகள் பாஜக அரசிடம் பலமுறை முறையிட்டும் எந்த பலனும் அளிக்கவில்லை. காங்கிரஸ் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆப்பிளுக்கான குறைந்தபட்ச விலையை நாங்கள் நிர்ணயம் செய்வோம் என்று வாக்குறுதி தந்தார்கள் இதுவும் காங்கிரஸ் வெற்றிக்கு ஒரு காரணம்.

குஜராத்தில் பிஜேபி வரலாற்று சாதனைப்படுத்தி வெற்றி பெற்றாலும் பிஜேபி இமாச்சலப்பிரதேசத்தில் ஆட்சியை இழந்திருக்கிறது. டெல்லி மாநகராட்சி 15 ஆண்டுகளாக பிஜேபி வசம் இருந்தது இப்போது ஆம் ஆத்மி தட்டிப் பறித்து இருக்கிறது. ஆம் ஆத்மி பற்றி பிஜேபி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் வாக்கு வங்கியை தான் பங்கு போட்டுக் கொண்டது ஆம் ஆத்மி போட்டியிடாமல் இருந்திருந்தால் காங்கிரஸ் கூடுதலாக இன்னும் சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பாஜக பூமியில் நாங்கள் தடம் பதித்து இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார். அது உண்மைதான். ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் குஜராத்தில் தனது கணக்கை தொடங்கி இருக்கிறது. ஆம் ஆத்மியை பொருத்தவரை அது தனித்தே போட்டியிடும் யாருடன் கூட்டணி கிடையாது இப்போது தேசிய அந்தஸ்து பெற்ற கட் ஆகிவிட்டது எதிர்காலத்தில் ஆம் ஆத்மி தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருக்கலாம் என்பது உண்மை.

விலைவாசி உயர்வு பண வீக்கம் வேலையில்லா திண்டாட்டம் என்று எதிர்க்கட்சிகள் பாரதி ஜனதா மீது கடும் விமர்சனம் வைத்தாலும் பிரதமர் மோடி மீது மக்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் சொல்கின்றன.அதே சமயம் இமாச்சலப்பிரதேஷ் தோல்வி டெல்லி மாநகராட்சி தோல்வி இது எல்லாம் உன்னிப்பாக அமித்ஷா கவனித்து வருகிறார் அதற்கான கூட்டல் கழித்தல் கணக்கை இப்போதே போடத் துவங்கி விட்டார் அமித்ஷா கணக்கு இதுவரை தவறியதில்லை இது பாராளுமன்ற தேர்தலுக்கும் பொருந்தும்.