தொடர்கள்
பொது
தாராவி தயாராகுது 20 ஆயிரம் கோடியில் ! - மாலா ஶ்ரீ

20221102180446556.jpeg

மும்பைக்கு போயிருக்கிறீர்களா ??

அட்லீஸ்ட் நாயகன் படம் பார்த்திருக்கிறீர்களா ?? தாராவி.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பையின் தாராவி , இங்கு தமிழர்கள் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏழை-எளிய மக்கள் வசிக்கின்றனர். மும்பையில் வேலை தேடி வருபவர்களும் தாராவியில்தான் அடைக்கலமாகி வருகின்றனர். இங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை உருவாக்கும் வகையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ‘தாராவி சீரமைப்பு திட்டம்’ கொண்டு வரப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே-பாஜ கூட்டணி அரசு பொறுப்பேற்றது. அடுத்த சில வாரங்களில் தாராவி சீரமைப்பு திட்டத்துக்கான ரயில்வே நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ₹20 ஆயிரம் கோடி மதிப்பில் தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை விரைவில் மாநில அரசு துவங்கவிருக்கிறது.

இதற்கான முதல்கட்ட டெண்டரை அதானி குழும் ₹5,069 கோடிக்கு எடுத்துள்ளது. தாராவி மறுசீரமைப்பு திட்டம் விரைவில் துவங்கப்படும் என கூறப்பட்டாலும், இப்பகுதி மக்கள் சீரமைப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ‘அனைவருக்கும் மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ் வீடு கிடைக்குமா?’ என அப்பகுதி மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

ஒரு வேளை வழங்கப்பட்டால், சீரமைப்பு செய்யப்பட்டால் அது மும்பையின் புகழக்கு மேலும் அழகு சேர்க்கும்.

என்ன நாயகன் மாதிரி இனி சினிமா எடுக்க முடியாது !!!