அகவை ஆறு என்று
அறிந்ததில் மகிழ்ச்சி...!
முகவை தேவையில்லை
வளர்வை அறிவதற்கு ...!
பதித்த வழித்தடங்கள்
பயணித்த வழிசொல்லும்...!
எழுத்துலகில் விண்மீன்திரள்
உருவாகிய நாள் அன்று...!
பத்திரிகை பிரபஞ்சத்தின்
நட்சத்திரங்கள் கிரகங்கள்
மேகங்கள் நெபுலாக்கள்
ஈர்ப்பில் ஒன்றிணைந்து,
விகடகவி குழுமம் ஆகி
ஒளிர்ந்த நாள் அன்று...!
அச்சு ஊடகங்கள் அன்று
அச்சம் தரும் நிலையில்...
விகடகவி குழுவினரோ
விழித்திரை மூடவில்லை ...!
விடா முயற்சியும் உழைப்பும்
வெளிட்டது மின்னிதழை...!
கலை இலக்கியம் விளையாட்டு,
ஆன்மீகம் அரசியல் சினிமாஎன
நடுநிலை நோக்கோடு செயற்பட்டு,
அன்றாட வாழ்வை தொட்டுவிடும்
அத்தனை செய்தியும் இணைத்து,
விட்டு வைக்காது தந்துவிடும் ...!
வெற்றியில் நடை போட்டு
சுற்றி வரும் மின்னஞ்சல்..
பற்று கொண்ட வாசகர்கள்
பெற்றுத் தந்த நம்பிக்கையில்,
அடி யெடுத்து வைக்கிறது
ஆறாம் ஆண்டில் இன்று...!
வெற்றிக்கு வித்திட்ட வித்தகர்கள்
விருட்சக வளர்ச்சிக்கு வழிசெய்ய,
இராமனுக்கு உதவிய அணில்போல
வாசகனாய் இணைந்த என்னை
கவிஞனாய் ஆக்கியப் பெருமை
விகடகவியைச் சேரும் என்பேன்...!
இனிதான ஆரம்ப நாளை
இறைவன் திருவடி நினைந்து,
வழிகாட்டியாய் உடன் வந்ததற்கு
நன்றி சொல்லும் நேரத்தில்,
மேன்மேலும் சிறக்க வளர்ந்திட
வாழ்த்திடுவோம் விகடகவியை...!
பாலா
கோவை
Leave a comment
Upload