தொடர்கள்
பொது
தங்கப் பதக்கத்தைப் பார்க்காமல் சென்ற தந்தை - காமென்வெல்த் வெற்றியில் ஒரு சோகம். - மாலா ஶ்ரீ

20221102174255441.jpeg

தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், இந்தியா சார்பில் லோகபிரியா 52 கிலோ எடை பிரிவில் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்.

தங்கம் வென்ற கையோடு ஊருக்கு வாட்சப் காலில் அழைத்தவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தனது தந்தை இறந்த இடி போன்ற செய்தி தான் அது.

இந்த செய்தியை லோகபிரியாவுக்கு உடனடியாக தெரிவித்தால், அவர் சிரமப்படுவதோடு, ₹3 லட்சம் வரை வரை ஸ்பான்சர் வாங்கி நியூசிலாந்துக்கு சென்று பதக்கம் வெல்வது வீணாகிவிடுமே என்ற எண்ணத்தில் லோகபிரியாவுக்கு உறவினர்கள் தகவல் தெரிவிக்காமல் மறைத்துவிட்டனர். பின்னர் போட்டி முடிந்ததும், தந்தை செல்வமுத்து இறந்த தகவலை வீடியோகாலில் சித்தப்பா செல்வகுமார் கூறியுள்ளார்.

20221102174335914.jpeg

‘‘நான் தங்கப்பதக்கம் வாங்கிய சந்தோஷம் 5 நிமிடம்கூட இல்லையே… நான் நியூசிலாந்து செல்வதை தந்தையிடம் கூறவில்லை. வீடியோகாலில் பதக்கத்தை அப்பாவிடம் காட்டி, சமாதானம் செய்து ஆசி வாங்கலாம் என ஆசையுடன் காத்திருந்தேன். இனி நான் எப்படி குடும்பத்தை காப்பாற்ற போகிறேன்? விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டில், மத்திய-மாநில அரசுகள் எனக்கு வேலைவாய்ப்பு கொடுத்தால் மட்டுமே எனது குடும்பத்தை காப்பாற்ற முடியும்…’’ என கதறுகிறார் லோக பிரியா.