தொடர்கள்
அழகு
சினிமா சினிமா சினிமா -பொடியன்

சினிமா சினிமா சினிமா

பொடியன்

குழந்தைகள் படம்

20220602081426966.jpg

மை டியர் பூதம் இந்தப் படத்தில் பிரபுதேவா ரம்யா நம்பீசன் ஜோடி நடிக்கிறார்கள் இதுதவிர குழந்தை நட்சத்திரங்கள் நிறைய பேர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இயக்குனர் மஞ்சப்பை படத்தை இயக்கிய என் ராகவன். தயாரிப்பு ரமேஷ்.பி பிள்ளை.

இந்த படத்தின் கதை பற்றி கேட்டபோது ஒரு பூதத்துக்கும் 10 வயது குழந்தைக்கு ஏற்பட்ட பிணைப்பு அதுதான் கதை. எல்லா இயக்குனர்களும் கனவு குழந்தைகளுக்கு என்று ஒரு படம் இயக்க வேண்டும் என்பதாக இருக்கும் எனக்கும் அந்த கனவு இருந்தது நான் ஆசைப்பட்டபடி அந்த கனவு இப்போது நிறைவேறி விட்டது மை டியர் பூதம். குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர்.

படப்பிடிப்புக்கு வந்தாச்சு

20220602081447517.jpg

ஹனிமூன் எல்லாம் முடிந்த கையோடு கடமை அழைக்கிறது என்று பயபக்தியுடன் படப்பிடிப்புக்கு வந்து விட்டார் புதுமணப்பெண் நயன்தாரா. இந்தியில் ஜவான் என்ற படத்தில் ஷாருக்கான் ஜோடி நயன்தாரா இயக்கம் அட்லி தாய்லாந்தில் இருந்து மும்பை வந்த நயன்தாரா படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். ஜூலை 15 வரை படப்பிடிப்பு உண்டாம்.

வாரிசு

20220602081600819.jpg

இப்போது அரசியல் மாதிரி சினிமாவிலும் வாரிசுகள் உள்ளே வரத் தொடங்கி இருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் இப்போது அந்த படத்தில் ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அடுத்த புதுவரவு நடிகர் செந்தில் மகன் மணிகண்டபிரபு இவரும் நடிகராக அறிமுகமாக இருக்கிறார். பாபி சிம்ஹா நடிக்கும் படம் தடை உடை இந்தப்படத்தில் செந்தில் மகன் மணிகண்ட பிரபு நடிக்க இருக்கிறார். அவரை வரவேற்று சமூகவலைத்தளத்தில் பதிவு செய்தார் பாபிசிம்ஹா.

மாதவனுக்கு சிம்ரன் பாராட்டு

20220602081511621.jpg

நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் ராக்கெட்ரீதி நம்பி எஃபெக்ட் இந்தப்படத்தில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இதில் நம்பி நாராயணன் ஆக நடித்திருக்கிறார் மாதவன் அவருடைய ஜோடி சிம்ரன் இந்த படம் தற்போது திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுபற்றி தனது வலைத்தளத்தில் பதிவு செய்த நடிகை சிம்ரன் நடிகர் மாதவனை புகழ் பாடி நீங்க எப்போதும் சிறந்தவர் என்று கருத்து சொல்லியிருக்கிறார்.

வேண்டாம் சாய் பல்லவி

2022060208153489.jpg

சந்திரமுகி இரண்டாம் பாகம் இதோ அதோ என்று இழுத்தடித்து கடைசியில் நிச்சயம் சந்திரமுகி இரண்டாம் பாகம் வெளியாகும். இந்த படத்தில் என்னுடன் ஏற்கனவே சந்திரமுகியில் நடித்த அண்ணன் வடிவேலு இணைந்திருக்கிறார் என்றெல்லாம் வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் இந்தப் படத்தில் நடிக்க சாய் பல்லவி என்று முடிவு செய்து இயக்குனர் வாசு அவருக்கு கதை சொன்னபோது கதையை இப்படி மாற்றங்கள் அப்படி மாற்றங்கள் என்று சாய்பல்லவி கருத்து சொன்னாராம். கடுப்பான இயக்குனர் வாசு சாய்பல்லவி வேண்டாமென்று இப்போது வேறு ஒரு நாயகியை தேடிக் கொண்டிருக்கிறார்.