தொடர்கள்
கவிதை
காதல் பொது மறை - 17 - காவிரி மைந்தன்

20210001161116349.jpg

2020112522131725.jpg

காவிரி மைந்தன்

20210001161205345.jpg

சரியென்று இதழ்கடித்தாய்!

அன்பே!
உன் வசமாய் ஆனபின்பு.. எனக்குள் என்னை நான் தேடுவது முதல் எத்தனை எத்தனை மாற்றங்கள்?

கவிதைத் தேனலைகள் கன்னியுந்தன் புகழ்பாடும் பரவசத்தில் தினம் மூழ்கியெழுவதும்.. பகலா இரவா எதுவாய் இருந்தால் என்ன என எனக்குள் நானே சொல்லிக் கொள்வதும்.. காதல் என்னும் போதையில் வேற்று நினைவுகள் அகன்று விடுவதும் தொடர்கதையாகிறது தோழி!!

யார் இவள் என்று ஒருபோதும் எண்ணம் வருவதில்லை.. நீ வேறில்லை நான் வேறில்லை என்கிற ஸ்லோகம் ஸ்ருதியாய் மனதுக்குள் நிரம்பி வழிகிறது!

ஒட்டுமொத்தமாய் காதலை சுகக்கணக்கில் வரவு வைத்து விட முடியாது என்பது தெரிந்திருந்தும்.. அனலை விட சுடுகின்ற பிரிவும்கூட இதில் அங்கம் வகிக்கக்கூடும் என்பது அறிந்திருந்தும்..

ஆசையின் பிடியில் அகப்பட்ட நிலையில் மனம் மீள முடியாதிருப்பதும்.... பாசத்தின் வலையில் வீழ்ந்திட்ட நிலையில்.. இதயம் தாளாதிருப்பதும்.. வாழ்க்கைப் பக்கங்கள் என்பதில் மாற்றமில்லை என்பது புரிந்திருந்தும்.. காதல்.. வேண்டும் என்பது பிடிவாதமல்ல.. அது உயிர்களின் அடிநாதம்!!

என்னை நினைந்திருக்கும் உந்தன் மனதிலும் இப்படி அலைமோதும் எண்ணங்கள் அணி வகுத்திருக்கும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?

அன்பின் எல்லைகள் அளவிட முடியாதவை என்பதால்.. அந்த ஒரு சொல் கூட ஆயிரமாயிரம் பொருள் தந்து விடுகிறது!

உனைப்பற்றிய எனது அக்கறை.. உன் பார்வையில் நான் பெற்று விடுகிற பலம்.. நீ என்னிடம் காட்டுகிற கருணை..

இவை தவிர.. வேறென்ன இருக்கிறது இந்த உலகில் என்று காதல்மனம் சொல்லிக் கொண்டிருக்க.. ஓடிவரும் ஜீவநதிபோல் உற்சாகம் ஊற்றெடுக்க..

எனை நோக்கி விரைந்து வந்தாய்!

ஓங்கியெழுந்த அலை கடற்கரையில் ஓய்ந்து விடுவதுபோல் என்னில் சாய்ந்தாய்!

ஓரக்கண்ணால் ஏதோ ஒரு முன்னுரை தந்தாய்!

ஒய்யாரி உனக்கென்ன.. அழகின் அம்சங்கள் அத்தனையும் அத்துப்படி.. வாரி அணைத்துக்கொள்ள வஞ்சிமகள் வளைந்து கொடுக்க.. தேவைகள் ஆயிரமிருந்தும் தேவியுன் உத்தரவிற்காக.. மெளனம் காத்தேன்!

பாதியைப் பாதி தேடி வருகுது என்கிற கண்ணதாசன் வரிகளை முணுமுணுத்தேன்.. பெண் பட்ட பாட்டை அப்பாடல் சொல்கிறது என்றாய்!

வரிகளை நான் சொல்லட்டுமா என்றேன்.. ‘ம்’ என்றாய்!

‘கட்டில் தேடுது.. இதழ் காயமானது! நீ தொட்டால் ஆறுது! என் தூக்கம் போனது! அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ..’ சரியா என்றேன்..

சரி என்று இதழ் கடித்தாய்!!