தொடர்கள்
பொது
குட்டியானையின் பாசம்! – ஆர்.ராஜேஷ் கன்னா.

20201130170014739.jpg

ஜிம்பாப்பே அருகே இருக்கும் ஆற்றை கூட்டமாக வந்த யானைகள் கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்று வெள்ளம் பெருக்கெடுக்க, பிறந்து சில நாளே ஆன யானைக்குட்டி ஒன்று ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

தீடீரென வந்த ஆற்று வெள்ளத்தினை சமாளித்து யானைகளின் கூட்டம் மறுபுறம் கரையை அடைந்தது. தன் கூட்டத்தில் இருந்த தாய் யானையுடன் வந்த குட்டியானை ஒன்று மட்டும் நீரில் அடித்துச் செல்லப்படுவதை பார்த்த யானைகள், சிறிது நேரம் செய்வதறியாது பிளறிவிட்டு அங்கிருந்து வேறு வழியின்றி நகர்ந்தன.

ஆற்று வெள்ளத்தில் குட்டி யானை ஒரு வழியாக நீண்ட தூரம் வேகமாக அடித்துச் செல்லப்பட்டு, கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கிய குட்டி யானையை நோக்கி கூட்டமாக வந்த கழுதைப்புலிகள் சுற்றி வளைத்து அதனை தங்களுக்கு இரையாக்க காத்திருந்தன.

20201130170102159.jpg

குட்டியானையை கழுதைப்புலிகள் தாக்க தயாராக இருப்பதை பார்த்த ரோந்து பணியிலிருந்த காட்டிலாக்கா ரேஞ்சர் பெண்மணி, தன்னுடன் வந்த பணியாளர்களை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட கட்டளையிட, கழுதைப்புலிகள் அங்கிருந்து ஓட்டமெடுத்தன... இப்படியாக குட்டியானையை பத்திரமாக கழுதைப்புலிகளிடமிருந்து உயிருடன் மீட்டனர்.

மீட்கப்பட்ட ஆண் குட்டியானை, வனவிலங்கு சரணாலயம் ஜிம்பாப்பேவிற்கு கொண்டு வரப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. ரேஞ்சர் பெண்மணியின் மேற்பார்வையில், அவர் தங்கியிருக்கும் குவார்ட்டர்ஸ் அருகேயே அந்த யானைக்குட்டி வைத்து பராமரிக்கப்பட்டது.

20201130170143796.jpg

சில நாட்கள் மட்டும் சோர்வாக காணப்பட்ட குட்டியானை, தன்னை உயிருடன் மீட்ட ரேஞ்சர் பெண்மணியிடம் அன்பை பொழிய தொடங்கியது. ‘மயோ’ என பெயரிடப்பட்ட குட்டியானை, சர்வ சுதந்திரமாக ரேஞ்சர் பெண்மணி தங்கியிருக்கும் இல்லத்திற்குள் வந்து விளையாடிச் செல்கிறது. சில சமயங்களில், ரேஞ்சர் பெண்மணியுடன் குட்டியானை அவர் வீட்டு சோபாவிலேயே படுத்தும் தூங்கி விடுகிறது.

2020113017021729.jpg

குட்டியானை மயோ தற்போது 14 மாதங்கள் ஆன குட்டியாக இருந்தாலும், ரேஞ்சர் பெண்மணி வீட்டின் சமையல் முதல் டைனிங் ஹால் வரை புகுந்து புறப்பட்டு தனது சேட்டையை தொடர்கிறது. எவரது அனுமதிக்கும் காத்திராமல் அங்குள்ள காய்கறிகள், பழங்களை தனது துதிக்கையால் தானே எடுத்து உண்கிறது.

20201130170304259.jpg

குட்டியானை மயோவை தனது மகனைப் போல் வளர்த்து வருகிறார் காட்டிலாகா ரேஞ்சர் பெண்மணி ராக்சி. குட்டியானை மயோ தற்போதும் நீர் நிலைகளை பார்த்தால் மட்டும் பயத்துடன் பின் நோக்கி நகர்கிறது. தற்போது மயோ செய்யும் சேட்டைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்வையாளர்களை அசத்தி வருகிறது! இதனை தொலைத்த யானைக்கூட்டத்திற்கு தான் பாவம்...இது எதுவுமே தெரியாத சோகம்!