நேபாள நாட்டின் பனிமலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன், தியான நிலையில் 196 வயதான திபெத்திய புத்த மதத் துறவியை அந்நாட்டு ராணுவத்தினர் உயிருடன் மீட்டனர். அவரது உடல் எவ்வித சேதாரமும் இன்றி காட்சியளித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதுகுறித்து மலையேற்ற குழுவை சேர்ந்த சிலர் கூறுகையில், “அந்த புத்தமத துறவியின் உடலில் ஒருசில நிமிடங்கள் அசைவு காணப்படுகிறது. அவர் உயிரோடு இருப்பது உறுதியானால், உலகிலேயே மிக அதிக வயதில் உயிர் வாழும் நபராக போற்றப்படுவார்!” என மகிழ்ச்சி தெரிவித்தனர்.
எனினும் ஒருசில தொல்லியல் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள், “அவர் பனிமலையில் தியான நிலையில் நின்றபடி இறந்து பல வருடங்களாகி இருக்கலாம். அவரது உடல் பனி அடர்ந்த பகுதியில் இருந்ததால், உருக்குலையவில்லை. அவர் இறந்த நிலையில் உள்ள ‘மம்மி’தான்!” என உறுதியாக கூறுகின்றனர்.
அங்குள்ள ஒரு கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் இந்த புத்த துறவியின் உடலை ஏராளமான நேபாள மக்கள் கண்டு, பக்திப் பரவசத்துடன் வணங்கி, வழிபட்டு வருகின்றனர். புத்தமத துறவி உயிருடன் ஆழ்நிலை தியானத்தில் இருக்கிறாரா அல்லது இது இறந்த துறவியின் சடலமா என பல்வேறு கோணங்களில் பல்துறை நிபுணர்கள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னொரு பக்கம் ஒரு கும்பல், இந்த துறவி மீட்பு புகைப்படத்தினை வெளியிட்டு சமூக வலைதளங்களின் புருடா என கேலியடித்து வருகிறது !
Leave a comment
Upload