தொடர்கள்
நொறுக்ஸ்
கட்டிலில் படுத்து கடன் வசூல் அடவடி... - பத்மஜா கிருஷ்ணன்

20201019203731404.jpg

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே தங்கமாபட்டி அடுத்த காக்காயன்குளத்துப் பட்டியை சேர்ந்தவர் மதுநிஷா (37), கூலித் தொழிலாளி. இவர், வையம்பட்டியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனை மதுநிஷா முறையாக செலுத்தி வந்துள்ளார். தற்போது கொரோனா பரவலால் கூலிவேலை இல்லாததால், இவரது கணவர் வெளியூரில் வேலை தேடி சென்றுள்ளார். இதனால் கடந்த 6 மாதங்களாக நிதி நிறுவனத்துக்கு கடன் தவணை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடன் தவணையை திருப்பி செலுத்தும்படி கடந்த 17-ம் தேதி மதுநிஷாவின் வீட்டுக்கு நிதி நிறுவன பணம் வசூலிக்கும் ஊழியரான மணிமுத்து (32) என்பவர் வந்திருந்தார். அவர் மதுநிஷாவிடம் தகாத வார்த்தைகளில் பேசியதுடன், அவரை அசிங்கப்படுத்தி, பணம் தராமல் இங்கிருந்து போக மாட்டேன் என அடாவடியாக கூறி, அங்கிருந்த கட்டிலில் கால் மேல் கால் போட்டு ஹாயாக படுத்துk கொண்டார் மணிமுத்து.

இதை கண்டு மதுநிஷா அவமானத்தில் கூனிக்குறுகி நின்றிருக்கும் வீடியோ காட்சிகள், தற்போது வலைதளப் பக்கங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதையடுத்து அடாவடியாக பணம் வசூலிக்கும் அந்த தனியார் நிதி நிறுவனத்தின்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.