தொடர்கள்
நொறுக்ஸ்
தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்... - அம்பிகாபதி

20201020155313786.jpg

ஸ்பெயின் நாட்டின் மலாகா பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் நள்ளிரவில் ஒரு பெண் சாலையில் காரை சுமார் 150 கிமீ வேகத்தில் தாறுமாறாக ஓட்டி வந்தார். அப்போது சாலை காலியாக இருந்ததால், அவருக்கு குஷி பிறந்தது.

அடுத்து, போதையில் அந்தப் பெண் ‘ரயில் தண்டவாளத்தில்’ காரை ஓட்டத் துவங்கிவிட்டார்.

ஒவ்வொரு ஸ்டேஷனையும் கார் கடந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசில் ஊதி எச்சரிக்கை விடுத்தனர். எனினும் அப்பெண், அவர்களுக்கு ‘டாட்டா’ காட்டியபடி காரை வேகப்படுத்தினாள். இதனால் அனைத்து ரயில் நிலையங்களும் உஷாராகி, ஆங்காங்கே மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டன.

இப்படியே 2 மணி நேரத்துக்கு மேல் அங்கு பரபரப்பு நிலவியது. இந்நிலையில், அங்குள்ள சுரங்க ரயில்பாதைக்குள் அப்பெண் காரை இன்னும் சற்று வேகமாக ஓட்டினாள். இதில் ரயில் தண்டவாள பல் சக்கரங்களில், காரின் டயர்கள் சிக்கி பஞ்சரானது. இதனால் அப்பெண் காரிலிருந்து தள்ளாடியபடி கீழே இறங்கினாள்.

அதே சமயம், அப்பெண்ணை ரயில்வே போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அப்பெண்ணை சோதனை செய்ததில், அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, போதையில் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிக்கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.

அங்குள்ள சிசிடிவி காமிராக்களில் இச்சம்பவம் தெளிவாக பதிவாகி, தற்போது பல்வேறு வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.மலாகா போலீசார் தீவிரமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.