தொடர்கள்
நொறுக்ஸ்
சுவர் ஓட்டையில் சிக்கிய நாய் மீட்பு... - சகுந்தலா ராமன்

20201020151858160.jpg

ஆவடி அருகே சேக்காடு, ராஜீவ்காந்தி நகரில் ஒரு வீட்டில் மழைநீர் வெளியேறுவதற்காக, பக்கவாட்டு மதில்சுவரில் ஒரு ஓட்டை போட்டிருந்தனர். அதன் வழியே தற்காலிகமாக பிவிசி பைப் பொருத்தி, மழைநீரை வெளியேற்ற வீட்டின் உரிமையாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த பக்கவாட்டு சுவரின் ஓட்டையில் நேற்று (20-ம் தேதி) வீட்டுக்குள் இருந்து வெளியேறிய ஒரு நாயின் கழுத்து சிக்கிக்கொண்டது. அதிலிருந்து கழுத்தை வெளியே எடுக்க முடியாமல் நாய் அலறி ஓலமிட்டது.

20201020151929173.jpg

இதுகுறித்து சென்னை மாநகர தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராகவன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள், பக்கவாட்டு சுவரின் ஓட்டையை கடப்பாரையால் பெரிதாக்கினர். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி, நாயை உயிருடன் மீட்டனர்.
சுவரின் ஓட்டையில் இருந்து கழுத்து விடுபட்ட சந்தோஷத்தில் தெருவின் இருபக்கங்களிலும் நாய் துள்ளிக் குதித்து ஓடியது. இதை கண்டு தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.