தொடர்கள்
நொறுக்ஸ்
கொற்றவை சிலை கண்டுபிடிப்பு... - செல்வரங்கம்

20201019204304406.jpg

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே செங்காடு கிராமத்தில் எறும்பூர் பாஞ்சாலியம்மன் கோயில் மதில்சுவரின் அருகே வண்ண சுண்ணாம்பு பூசப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சோழர் கால கொற்றவை சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளரும் ஆசிரியருமான செல்வகுமார் கூறுகையில், ‘பண்டைய தமிழகத்தில் கொற்றவை எனும் துர்க்கை வழிபாடு இருந்ததற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. கொற்றவை சிலையை துர்க்கை, பாஞ்சாலி, காளியம்மன் என அழைக்கின்றனர். இந்த சிலை கி.பி.9-ம் நூற்றாண்டு முதல் கி.பி.11-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், சோழர் காலத்தில் செதுக்கப்பட்டு இருக்கலாம். இதே காலகட்டத்தில் செதுக்கப்பட்ட கொற்றவை சிலை ஒன்று, தற்போது எறும்பூர் பாஞ்சாலியம்மன் கோயில் அருகே திறந்தவெளியில் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.

தமிழில் கொற்றவையே தொன்மையான தெய்வம். இதே காலகட்டத்தில் ஆயிரமாண்டு ஒரே பெயரில் இருக்கும் ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டடு, சோழர் காலத்தில் அருள்மிகு பட்டீஸ்வரர் கோயிலில் கட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, சோழர் காலத்து கொற்றவை சிலையாக இது இருக்குமோ என கருதவேண்டியுள்ளது’ என செல்வகுமார் தெரிவித்துள்ளார்.