தமிழக முதல்வர் மு .கா .ஸ்டாலின் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி மற்றும் 6 ஆம் தேதி ஊட்டிக்கு வருகைபுரிகிறார் என்ற தகவல் வந்தவுடன் மாவட்ட நிர்வாகம் பம்பரமாக சுழல ஆரம்பித்துவிட்டது .
மேட்டுப்பாளையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை முழுவதும் பளிச் என்று மாறிக்கொண்டிருக்கிறது .
சாலை ஓரங்களில் உள்ள செடிகள் பல வருடங்களாக தொங்கிக்கொண்டிருக்கும் மர கிளைகள் வெட்டப்பட்டு ஒழுங்குப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது .
சாலை முழுவதும் தார் ஓட்டுபோடப்பட்டிருக்கிறது .
முதல்வர் மக்களை சந்திப்பதால் ஸ்லொவ் மோஷனில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் ஒரு யானை குடும்பம் செட்டிலாகியுள்ளனர் அந்த குடும்பம் முதல்வரை வழியில் மறித்து சந்தித்தாலும் ஆசிரியப்படுவதற்கில்லை .
குன்னூரில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு பல கடைகள் உருகுலைந்துவிட்டன அதில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பார் என்று தெரிகிறது.
முதல்வரின் ஊட்டி விசிட் மக்களை சந்தித்து நலத்திட்டங்கள் வந்து சேருகிறதா என்று நேரடியாக கேட்கவும் மேலும் நல திட்டங்களை அறிவிக்கவும் வருகிறார் .
அதே சமயம் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையையும் திறந்து வைக்கிறார் .
முதல்வரின் விசிட்டால் கிறிஸ்தவர்களின் ஏசுவின் பாடுகளை தியானித்து நடத்தும் பரிகார பவானிக்கு காவல் துறை அனுமதியை மறுத்துள்ளதால் 6 ஆம் தேதி நடக்கவிருந்த பரிகார பவனி 30 ஆம் தேதி ஞாயிற்று கிழமை முன்னதாக நடத்த படுகிறது .
வழக்கமாக ஈஸ்டர் பண்டிகைக்கு முன் ஏசுவின் பாடுகளை தியானித்து நாற்பது நாள் தவம் உபவாசம் இருந்து ஐந்தாவது வாரம் ஞாயிற்று கிழமை ஊட்டி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் இருந்து சிலுவையை சுமந்து குருசடி சிலுவை திருத்தலத்திற்கு பரிகார பவனி நடந்துவந்த சூழலில் முதல்வரின் விசிட்டை குறித்து இந்த பரிகார பவனிக்கு அனுமதி வழங்காமல் மறுத்த காவல் துறையின் நடவடிக்கை கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தியுள்ளது .
ஏற்கனவே 2023 ஆம் வருடம் பிரதமர் மோடி காணொளிமூலம் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுடன் சேர்த்து ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையையும் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஊட்டி இந்து நகர் பகுதியில் 40 ஏக்கர் நில பரப்பளவில் அமைந்துள்ளது . மருத்துவமனை இந்து நகரிலும் மருத்துவ கல்லூரி பட் பயர் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது .
இந்த மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ கல்லூரி நீலகிரியின் முதல் வரப்பிரசாதம் என்று கூறலாம் .
149.23 கோடி பட்ஜட்டில் 700 படுக்கை வசதி கொண்டு கட்டப்பட்டுள்ளது .
நாட்டிலேயே முதல் முறையாக பழங்குடியினர்களுக்கான 50 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது .
இனி நீலகிரி வாசிகள் மேல் சிகிச்சைக்காக கோவை , மைசூர் மற்றும் சுல்த்தான் பத்தேரிக்கு செல்லவேண்டாம் என்று கூறப்படுகிறது .
மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமானம் துவங்கும் போது இங்கு ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு தற்போது ஊட்டி காற்றில் பறந்து மறைந்துவிட்டது .
அதே போல எதிர் எதிர் மலையில் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை இணைக்க ஊட்டி கூடலூர் தேசிய நெடுஞ்சாலை மேல் உயர் மேம்பாலம் கட்டப்படும் என்ற ஐடியாவும் கைவிடப்பட்டுள்ளது !.
கடந்த வாரம் தமிழக சுகாதார அமைச்சர் மா .சுப்பிரமணி நேரில் வந்து ஆய்வு செய்து சென்றுள்ளார் .
முதல்வர் 6 ஆம் தேதி மருத்துவ கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தவுடன் சிகிச்சை பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் ஏகப்பட்ட வேலைகள் இருக்கிறது என்று முணு முணுக்கின்றனர் அதிகாரிகள் .
தமிழக மாளிகையில் தங்கும் முதல்வர் 5 ஆம் தேதி மாலை ஜெம் பார்க் ஹோட்டலில் முக்கிய கட்சி பிரமுகர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்துகிறார் .
6 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நேரடியாக இந்து நகர் சென்று புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து விட்டு
பின் அரசு கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுவரும் பிரமாண்ட அரங்கிற்கு சென்று அரசு நல திட்டங்களை வழங்கி உரையாற்றிவிட்டு சென்னை திரும்புகிறார் என்ற தகவல் .
ஊட்டி வாசிகள் முதல்வருக்கு ரொம்பவே நன்றி கடன்பட்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் .
அவரின் வருகையால் மிகவும் மோசமாக கேவலமாக கவனிப்பாரற்று இருந்த ஊட்டி தலையாட்டு மந்து நுழைவு சாலை அவசர கதியில் புதுப்பிக்க பட்டுவருகிறது .
அதே போல சேரிங் கிராஸ் பகுதி தார் போடப்பட்டு சாலை பளிச் என்று இருக்கிறது .
மொத்தத்தில் மாவட்ட நிர்வாகம் கலெக்டர் , எஸ் .பி தலைமையில் நகராட்சி இணைந்து ஊட்டி நகரை போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் .
" எதோ நம் முதல்வர் ஊட்டி வருவதால் குண்டும் குழியுமாக கேவலமாக இருந்த சாலைகள் சரி செய்யப்பட்டு .செடிகள் வெட்டப்பட்டு சூப்பராக மாறுவது ஆச்சிரியம் தான் " என்கின்றனர் ஊட்டி வாசிகள் .
வருடத்தில் ஒரு முறையாவது முதல்வர் ஊட்டிக்கு வர வேண்டும் என்ற குரல் கேட்டுக்கொண்டிருக்கிறது ....
Leave a comment
Upload