தொடர்கள்
சினிமா ஸ்பெஷல்
சினிமா சினிமா சினிமா 3-லைட் பாய்

சல்மான் கான்

20250228174024231.jpeg

நடிகை ராஷ்மிகாவுடன் ஜோடி சேர்த்து நடிக்கும் சிக்கந்தர் பட விழாவில் சல்மான் கான் பேசும்போது "கதாநாயகிக்கும் எனக்கும் இடையே 31 வயசு வயது வித்தியாசம் உள்ளது என்று பேசுகிறார்கள். வயது வித்தியாசத்தால் ஹீரோயினிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் அப்பாவுக்கும் எந்த பிரச்சனை இல்லை. அப்படி இருக்கும் போது உங்களுக்கு என்ன பிரச்சனை. ராஷ்மிகாவுக்கு மகள் பிறந்து அவர் நடிக்க வந்தால் அவருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பேன் "என்று சல்மான் கான் பேசியது தான் தற்போதைய ட்ரெண்டிங்.

தமன்னா

20250228174414836.jpeg

நடிகை தமன்னா தற்சமயம் ஹிந்தியில் படு பிசி. நடிகை ஸ்ரீதேவியின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசை என விருப்பம் தெரிவித்திருக்கிறார் தமன்னா.

அமீர்கான்

ஏற்கனவே இரண்டு பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்த நடிகர் அமீர்கான் மூன்றாவதாக கவுரி ஸ்பார்ட் என்பவரை காதலித்து வருகிறார் விரைவில் இவருடன் திருமணம் கவுரியின் தந்தை பிரிட்டனைச் சேர்ந்த தமிழர் தாயார் பஞ்சாப்பை சேர்ந்தவர். கவுரியும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்.

தீபிகா படுகோன்

20250228175439444.jpg

ஆஸ்கரில் இந்தியா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக நடிகை தீபிகா படுகோன் குற்றம் சாட்டியுள்ளார்.

சன்னி தியோல்

20250228180017984.jpeg

இந்தி இயக்குனர்கள் மேற்கத்திய தாக்கத்தில் தங்கள் வேர்களை மறந்து விட்டார்கள். நமது சொந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள். தென்னிந்திய சினிமா அந்த விஷயங்களை தக்க வைத்துக் கொள்கிறது. அதனால் தான் அவர்கள் உருவாக்கும் படங்கள் இந்தியா முழுவதும் வரவேற்பை பெறுகின்றன என்று ஒரு விழாவில் பேசியிருக்கிறார் நடிகர் சன்னி தியோல்.

20250228191844262.jpeg