தொடர்கள்
அரசியல்
நிர்மலா சீதாராமன் எனும் ஆளுமை - சத்யபாமா ஒப்பிலி

20250229071431131.jpeg

கடந்த வாரத்தில் ஒரு நாள் சென்னை சிட்டிசன் ஃபோரம் எம். ஓ. பி. மகளிர் கல்லூரியுடன் இணைந்து 2025 பட்ஜெட் பற்றிய ஒரு கருத்தரங்கு எம்.ஓ.பி. கல்லூரி வளாகத்தில் நடத்தியது. நமது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இக் கருத்தரங்கம் நடந்ததால், அவரே சில திட்டங்களைப் பற்றி மறுபடியும் பேசினார். . தன்னால் அத்தனையும் சொல்லமுடியாது என்பதால், தன் மனதுக்கு நெருக்கமான சில திட்டங்களைப் பற்றிச் சொன்னார். அதில் முதன்மையாக அவர் சொன்னது, நாடு முழுதும் அமைக்கப்படும் 200 மாவட்ட மருத்துவமனைகளும் கேன்சர் டே கேர் மையங்களும். கான்செர் டே கேர் மையங்கள் என்பது நோயாளிகளுக்கு மட்டும் அன்றி அவர்களை பார்த்துக் கொள்ளும் உறவினர்களுக்கும் உண்டானதாகும்.
இரண்டாவதாக நாம் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கும் திட்டம். ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய் வரை பெறுவோர் வரி செலுத்தத் தேவை இல்லை என்பது. மூன்றாவதாக, கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புத்திட்டம் (அண்டர் எம்பிளாய்மென்ட் திட்டம்). மேலும், எப்படி அமெரிக்காவின் வர்த்தக தொடர்பும், சீனாவின் அதிக உற்பத்தியும் நம் பொருளாதாரத்தை பாதிக்கலாமென்று கணக்கில் கொண்டு பட்ஜெட் திட்டமிடப்பட்டதைச் சுட்டிக் காட்டினார். GST ஐ பற்றி தவறான புரிதல் இருப்பதையும், அதை சிலர் மத்திய அரசுக்கு எதிராக திருப்பி விடுவதைப் பற்றியும் சொல்லிக் காட்டினார். எந்த ஒரு அரசியல்வாதியும் தானிருக்கும் மேடையை அரசியலுக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்ள யோசிப்பதில்லை. நம் மத்திய அமைச்சரும் இதற்கு விதி விலக்கல்ல. பட்ஜெட் பேசிக்கொண்டே, மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கு கொடுத்திருக்கும் நிதி உதவியைப் பட்டியலிட்டார். மிக நீளமான பட்டியல் தான். இத்தனை கோடிகளா என்று என்னுடன் அமர்ந்திருந்த மாணவி ஆச்சர்யத்துடன் கேட்டாள். "இருக்கலாம்" என்றேன்.

20250229071525635.jpeg

அவர் பேசி முடித்தவுடன் ஒரிரெண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒன்று அரசியலில் பெண்கள் ஏன் பெரும்பாலும் வருவதில்லை என்பது. வந்தால் அரசியல் சுத்தமாகும் என்று சிரித்துக் கொண்டே பதில் கூறினார்.
ஒரு மிகப் பெரிய ஆளுமை. தெளிவு, நிதானம், எதையும் சமாளிக்கும் திறன். அவரிடம் எந்த கேள்வி கேட்டிருந்தாலும் சமாளித்திருப்பார். இன்னும் சில கேள்விகள் கேட்டிருக்கலாம் என்று தோன்றியது. அவரைப் பற்றிய ஒரு வீடியோ தொகுப்பு ஒன்று தயாராக இருந்த நிலையில், அதை போடக் கூடாதென்று தடை செய்து விட்டார் என்று சென்னை சிட்டிசன் ஃபோரத்தின் தலைவர் கே.டி ராகவன் கூறினார்.
நிதி அமைச்சர் என் கல்லூரிக்கு வரப்போகிறரர் என்றதும், விகடகவியார் ஒரு செல்ஃபீ கொடுங்கள் என்றார். அவர் கூட ஒரு கூட்டமே வர, ஒன்றும் செய்யமுடியாது என்று புரிந்து விட்டது. அவர் வரும் வழியில் ஒரு ஸ்ட்ராட்டஜிக் பாயிண்ட் இல் நின்று கொண்டு என் உடன் பணி புரியும் மகேஷிடம் , "மேடம் என் பக்கம் வரும் போது ஒரு போட்டோ எடுத்துருங்க சார்" என்று கூறினேன். எல்லாம் முடிந்த பின் மகேஷ் என்னிடம், "சாரி மேடம், அவங்கள பாத்த உடனே அவங்கள மட்டும் தான் எடுக்க தோணிச்சு" என்று கூறினார். கடுப்பாகி வெளியே வந்தேன். ஆனாலும் அது தான் உண்மை. அந்த ஆளுமை அப்படி.