ஐ.பி.எல் துளிகள்
1. சதத்தை தியாகம் செய்த ஸ்ரேயாஸ்
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டம் இழக்காமல் 97 ரன்களில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும், 'எனது சதத்தை பார்க்காதே நீ விளையாடு 'என தன்னிடம் கூறியதாக ஷஷாங்சிங் தெரிவித்திருக்கிறார். இதற்காக ஸ்ரேயாசை நெட்டிசன்கள் பாராட்டுகிறார்கள்.
2. மோசமான சாதனை படைத்த மேக்ஸ்வெல்
பஞ்சாப் அணியில் விளையாடி வரும் மேக்ஸ்வெல் இந்த வாரம் போட்டியில் கோல்டன் டக் அவுட் ஆகி ஐபிஎல் தொடரில் அதிக முறை அதாவது 19 முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.
3. குஜராத் அணியில் நான்கு தமிழக வீரர்கள்
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய குஜராத் அணியில் சாய் கிஷோர், சாய் சுதர்சன், ஷாருக்கான் இது தவிர இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்படுபவர்களின் பட்டியலில் வாஷிங்டன் சுந்தர் என்று நான்கு தமிழக வீரர்கள் இடம் பெற்றனர்.
4. இதுதான் ரியல் ஐபிஎல் மேட்ச்
ஐபிஎல் ரசிகர்கள் இதுதான் ரியல் ஐபிஎல் மேட்ச் என்று கொண்டாடும் அளவுக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் டெல்லி கேப்பிடல் அணி இந்த வாரம் வழங்கியது. இந்த மேட்ச்சில் ஹீரோ அஷீதோஷ் ஷர்மா அவருடைய விஸ்வரூபம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து.
5. ரோஹித், பாண்டியா எதிர்ப்பு
ஐபிஎல்லில் Impact. Player விதி முதலில் அமுல் செய்யப்பட்டபோது அது தேவையில்லாதது என்று முதலில் தோனி தெரிவித்திருந்தார். ஆனால் அது தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடவும் இந்த விதி ஊக்குவிப்பதாகவும் தற்சமயம் தோனி தெரிவித்து இருக்கிறார். ஆனால் இந்த விதியை ரோஹித் மற்றும் பாண்டியா எதிர்த்து விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
6. சிறையில் விராட் கோலி ரசிகர்
கே கே ஆர் க்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது ஆர் சி பி வீரர் விராட் கோலியின் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் புகுந்து அவரது காலில் விழுந்தார் .கோலியும் அந்த ரசிகரை கட்டியணைத்து வாழ்த்தி அனுப்பினார். ஆனால் காவல்துறை இது பாதுகாப்பு மீறல் என்று அவரை கைது செய்து சிறைக்கு அனுப்பிவிட்டது. தற்சமயம் இந்த வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களை இப்படி தண்டிக்கலாமா என்று விமர்சிக்கிறார்கள்.
7. வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து இர்ஃபான் நீக்கம் .
ஐபிஎல் 2025-இன் வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து இர்ஃபான் பதான் நீக்கப்பட்டிருக்கிறார். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் இந்தி மொழி வர்ணனையாளராக இருந்தார். இவரது வர்ணனை சில வீரர்களுக்கு எதிராகவும் ஒரு சார்புடையதாகவும் இருப்பதாக விமர்சனம் வந்ததால் தற்சமயம் வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
8.ஹர்பஜன் சிங்கை திட்டுகிறார்கள்
எஸ் ஆர் எச் க்கு எதிரான ஆட்டத்தில் 18-வது ஓவரில் ஆர்ஆர் வீரர் ஆர்ச்சர் வீசிய பந்துகளை கிளாசன் பவுண்டரிகளாக பறக்க விட்டார். இந்த நிகழ்வை வர்ணனையாளர் ஹர்பஜன் சிங் லண்டனில் பிளாக் டாக்சி மீட்டர் போல் ஆர்ச்சரின் மீட்டரும் ஏறிக்கொண்டே செல்கிறது என்று நிறத்தை கேலி செய்யும் வகையில் அவர் பேசினார் என்று அவருக்கு கண்டனங்கள் குவிகிறது.
9.ஸ்டெம்பிங் தோனி சாதனை
இந்த வாரம் நடந்த போட்டியில் தோனி சூரியகுமாரை 0.12 வினாடிகளில் ஸ்டம்பிங் செய்ததை ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் இது அவரது மூணாவது அதி வேக ஸ்டம்பிங் என்கிறார்கள். அவரது அதிவேக ஸ்டம்பிங் 0.08 வினாடிகள். 2018-ல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீமா பாலை கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்தார். அதேபோல் 2023- ஆம் ஆண்டு பைனலில் சுப்மன்கில்லை 0.10 நொடிகளில் ஸ்டம்பிங் செய்தார் தோனி.
10.ட்ரெண்டிங்கில் காவ்யா மாறன் !
எஸ் ஆர் எச் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தான் தற்போது டாப் ட்ரெண்டிங். மைதானத்தில் அவரை காணவே ஒரு ரசிகர் கூட்டம் படையெடுக்கிறது.
Leave a comment
Upload