தொடர்கள்
சினிமா ஸ்பெஷல்
சினிமா சினிமா சினிமா 5-லைட் பாய்

.சிம்பு

20250228185234905.jpeg

விண்ணைத்தாண்டி வருவாய் படத்திற்குப் பிறகு தற்சமயம் தக்லைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

பட்டப் பெயர்கள் வேண்டாம்

20250228185029569.jpeg

படங்களில் அல்லது பட விளம்பரங்களில் பட்டப்பெயர் வேண்டாம் என்று கண்டிஷனாக சொல்லிவிட்டார்கள் நடிகர்கள் கமல் , அஜித் மற்றும் நடிகை நயன்தாரா.

சிவகார்த்திகேயன்

2025022818482656.jpeg

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் ஒரு படத்தில் அவருக்கு வில்லன் ஆர்யா.

திரிஷா

20250228184620174.jpeg

முன்பெல்லாம் சம்பள விஷயத்தில் திரிஷா ரொம்பவும் கரார் என்று சொல்ல முடியாது. இப்போது படப்பிடிப்பு முடிவதற்கு முன்பு தனது சம்பள பணத்தை செட்டில் பண்ண சொல்லி கரராக இருக்கிறார்.

நயன்தாரா

20250228184318172.jpeg

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் சுந்தர் சி இயக்குகிறார், நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா ஒரு பிரச்சனையில் உதவி இயக்குனர் ஒருவரை மோசமாக திட்டி விட்டாராம். இதனால் கோபமடைந்த சுந்தர் சி படப்பிடிப்பை நிறுத்திவிட்டார். நயன்தாரா வேண்டாம் தமன்னாவை நடிக்க வைக்கலாம் என்று கூட ஒரு கட்டத்தில் முடிவு செய்து விட்டார்கள். அதன் பிறகு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரிடமும் சமாதானமாக பேசி பிரச்சினையை முடித்தார். அதன் பிறகு தான் படப்பிடிப்பு தொடர்ந்தது.

20250228191653793.jpeg