இனமானத்தை அடகு வைத்து வெகுமானம் பெறமாட்டோம் ஸ்டாலின் திட்டவட்டம்.
இப்ப இதெல்லாம் வாங்கற அடகு கடையே இல்லையே !!
டெல்லியில் அமித்ஷாவுடன் பழனிச்சாமி ஆலோசனை.
இவருக்கு இந்தி தெரியாது அவருக்கு தமிழ் தெரியாது அப்புறம் எப்படி ஆலோசனை இருக்கும் ?
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் ஆட்சியாளர்கள் தூங்குவது போல் நடிக்கிறார்கள் மருத்துவர் ராமதாஸ்.
நீங்கதான் டாக்டர் ஆச்சே இதுக்கு ஏதாவது மாத்திரை இருந்தா தாங்க !!
என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் எடப்பாடி பழனிச்சாமி.
அண்ணாமலையை சொல்றாரோ !!
உணர்வுகளை தூண்டும் வகையில் அரசியல் செய்கின்றனர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு.
அதானே அதெல்லாம் உங்க இலாகா மேடம்!!
அமைச்சர் பதவியில் தொடர விரும்புகிறாரா செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றம் கேள்வி.
இது என்ன கேள்வி ஜாமீன் கொடுத்ததே நீங்கதான் !!
எம்பிக்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு.
ஆமா வெளிநடப்பு சபை முடக்கம் என்று கடுமையாக உழைக்கிறார்கள் அதுக்கு தான் இந்த சம்பளம் !!
சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப கூட்டணி அமைக்கப்படும் எடப்பாடி அறிவிப்பு.
அப்படி தான் சொல்லணும்னு சொல்லி அனுப்பி இருப்பாங்க !!
கொலைகள் அதிகரித்துள்ளதை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும் கார்த்திக் சிதம்பரம்.
ஆமா ஒரு நாளைக்கு இரண்டு இல்ல மூணு கொலை அவ்ளோதான் முதல்வர் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடனும் !!
கனிம வளங்கள் கொள்ளை போகிறது என இனி யாரும் சொல்ல முடியாது அமைச்சர் துரைமுருகன்.
ஆமாம் மொத்தம் கொள்ளையடிச்சு முடிச்சாச்சு !!
பாஜக மீதான விமர்சனத்தை விஜய் தவிர்க்க வேண்டும் தமிழிசை சௌந்தரராஜன்.
அப்படித் தவிர்த்தால் தான் வருமான வரி சோதனையை நீங்கள் தவிர்க்க முடியும் !!
Leave a comment
Upload