தொடர்கள்
விகடகவியார்
எடப்பாடி அமித்ஷா சந்திப்பு-விகடகவியார்

20250228073406431.jpg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் நுங்கு இளநீர்கொண்டு வந்து வைத்தார் ஆபீஸ் பையன், "இந்த வெயிலுக்கு நல்லது சாப்பிடுங்கள்" என்றார்.

'பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று தீர்மானம் எல்லாம் போட்டார் இப்போது திடீரென அமித்ஷாவை சந்தித்திருக்கிறாரே ?' என்று நாம் நேரடியாக விஷயத்துக்கு வந்தோம்.

'இப்போது சில மாதங்களாக திமுக தான் எங்கள் எதிரி என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே அதை நீங்கள் கவனிக்கவில்லையா ? 'என்ற விகடகவியார்

. 'அமித்ஷாவை சந்தித்தார் , சந்திப்பு சுமுகம் தான். ஆனால், இதை வைத்து கூட்டணி இறுதி என்று சொல்ல முடியாது. அதனால தான் தேர்தல் வரும் போது அன்றைய சூழலுக்கு ஏற்ப கூட்டணி முடிவு செய்யப்படும் என்று சொல்லி இருக்கிறார் எடப்பாடி 'என்றார

அமித்ஷா எடப்பாடி சந்திப்பு செய்திக்கு வாரும் 'என்றோம்.

எடப்பாடி இது ஏதோ ரகசிய சந்திப்பு என்று நினைத்துக் கொண்டிருந்தார். அதனால்தான் டெல்லியில் நிருபர்களிடம் புதிய கட்சி அலுவலகத்தை பார்க்க வந்தேன் என்றார்

காலையிலேயே சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் டெல்லிக்கு சென்று இருக்கிறார். அங்கு முக்கிய தலைவரை சந்திக்க இருக்கிறார் தமிழகப் பிரச்சனை, மும்மொழிப் பிரச்சனை, தொகுதி குறைப்பு இது பற்றியெல்லாம் பேசுவார் என்று எதிர்பார்க்கிறேன் என்றார். முதல்வர் சட்டசபையில் உளவுத்துறை எடப்பாடி டெல்லி விஜயம் பற்றி நோட்டமிட்டு முந்தினமே முதல்வருக்கு தகவல் சொல்லிவிட்டது.

.அதைத்தான் போட்டு உடைத்து விட்டார் முதல்வர் சட்டசபையில் ' என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்

கூட்டணி பற்றி பேசினார்களா இல்லையா ? என்று நாம் கேட்டோம்.

அமித்ஷா நேரடியாக விஷயத்துக்கு வந்தார், சென்ற பாராளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தல் இவை இரண்டிலும் கூட்டணி கட்சிகளை நீங்கள் ஒருங்கிணைக்க தவறி விட்டீர்கள். அதனால் தான் படு தோல்வி அடைந்தீர்கள் இப்போதாவது நான் சொல்வதை கேளுங்கள்' என்றார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி இரண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஓபிஎஸ் சசிகலா உங்கள் விருப்பம் என்று சொல்லி இருக்கிறார்.

அப்போது எனக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்

எடப்பாடி. அப்போது திமுக அமைச்சர்களின் சொத்து குவிப்பு பற்றி சில விவரங்களை அமித்ஷாவிடம் தந்திருக்கிறார் அதை வாங்கிக் கொண்டவர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

வேலுமணி, கேபி முனுசாமி, சிவி சண்முகம், தம்பிதுரை இவர்களோடு சேர்ந்து பேசிய எடப்பாடி அமித்ஷாவிடம் சில நிமிடம் தனியாகவும் பேசினார்.

தான் தனியாக பேசியது என்ன என்பதை வேலுமணி உட்பட எல்லா தலைவர்களிடமும் சொல்லிவிட்டார்.

எடப்பாடி டெல்லிக்கு போவதற்கு முன்பு வேலுமணி, கே பி முனுசாமி, சிவி சண்முகம் இவர்கள் மூவரிடமும் ஆலோசனை செய்துவிட்டு தான் டெல்லிக்கு விமானம் ஏறினார் என்றார் விகடகவியார்.

விஜய் விஷயத்துக்கு வாரும்'' என்றோம்.

எடப்பாடி அமித்ஷா சந்திப்புக்கு முக்கிய காரணம் விஜய் என்கிறார்கள்.

கூட்டணி பற்றி விஜய்யிடம் எடப்பாடி தரப்பு பேசியிருக்கிறார்கள். அவர் நாங்கள் பெரிய அளவு மாநாடு எல்லாம் நடத்தி ஒரு எழுச்சியை ஏற்படுத்த இருக்கிறோம். ஆட்சியில் பங்கு பாதி தொகுதிகள் என்றெல்லாம் நிபந்தனை விதிக்க இது நமக்கு சரிப்பட்டு வராது என்று தான் அமித்ஷாவை சந்திக்க விமானம் ஏறினார் எடப்பாடி என்றார் விகடகவியார்.

.அதிமுக கூட்டணியை அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா? என்று கேட்டோம்.

உள்துறை அமைச்சரை வேண்டுமானாலும் சந்திக்கலாம், இதை வைத்து கூட்டணி என்றெல்லாம் சொல்ல முடியாது என்று சொல்லி இருக்கிறார்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று மார்ச் 18 ஆம் தேதி 2023-ஆம் வருஷம் அவர் பேசிய வீடியோ இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

டெல்லி தலைவர்களை சந்திக்க அண்ணாமலை டெல்லி சென்று இருக்கிறார் '

வக்பு வாரிய மசோதாவை எதிர்த்து திமுக நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தந்திருக்கிறது என்ற விகடகவியார் நுங்கு இளநீர் ஜூஸ் சூப்பர் என்று பாராட்டி விட்டு புறப்பட்டார்.