தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 19 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250225113107573.jpg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஓலைச்சுவடிகளை பாதுகாக்கும் பல்கலைக்கழகம்

காஞ்சிபுரத்தில் கஞ்சி மடத்தின் முயற்சியில் ஸ்ரீ மகா பெரியவாளின் அனுகிரஹத்தில் இயங்கிவரும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடிகள் பற்றியும் அது பாதுகாக்கப்படும் விதத்தையும் விளக்கும் பதிவு இது. ஸ்ரீ மகா பெரியவா அவர்கள் வேதமும் அந்த கால படைப்புகளும் அழியாமல் இருக்க வழிவகை செய்துள்ளார் என்று தன சொல்ல வேண்டும்.