தொடர்கள்
அரசியல்
பேப்பர் பாக்சிங்-ஆபீஸ் பையன்

-

அரசியல் தலைவர்கள் பதிலுக்கு பதில் என்று போடும் பாக்சிங் ஐபிஎல் போட்டியை தோற்கடிக்கும் போல் தெரிகிறது இந்த 'நீயா நானா'? ( சாம்பிளுக்கு சில படிச்சுக்கோங்க டைம் பாஸ் ஆகும் )

அண்ணாமலை vs சேகர்பாபு

20250228164350880.jpeg

ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு. திமுகவில் யாரும் படித்து அதிகாரத்திற்கு வரவில்லை. மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு கல்விக் கொள்கையை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். சேகர் பாபு போல் அமைச்சர்கள் இருந்தால் நாடு விளங்குமா ?

ஒருவர் மீது குற்றச்சாட்டு வைத்தால் அதற்கு ஆதாரம் வேண்டும். அண்ணாமலை டூப் போலீஸ் லஞ்சப் பேர்வழி என்று கூட நான் கூறுவேன். திமுகவினர் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள். ஊசி போன பண்டமாக இருக்கும் பாஜகவை 2026-இல் மக்கள் தூக்கி எறிவார்கள்.

எச் ராஜா vs சுப வீரபாண்டியன்

20250228164654993.jpeg

பாஜக பொதுக்கூட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் சென்று அனுமதி வாங்க வேண்டிய அளவிற்கு திமுக அரசு அராஜகமாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் 13 மாதத்தில் திமுக ஆட்சி அகற்றப்படும். சேகர் பாபு சிறை செல்லும் காலம் தூரம் இல்லை.

எச் ராஜாவுக்கு மனநலம் சரியில்லையோ என தோன்றுகிறது. அவர் நாகரிகமாக பேசினால் தான் ஆச்சரியம். அநாகரிகமாக பேசிப் பேசியே அழிந்து விட்டார். நானும் திருமாவளவன் தான் ஆணவ கொலைகளுக்கு காரணம் என்கிறார் எச். ராஜா. அவருக்கு மனநலம் சரியில்லை என்பதற்கு இதுதான் உதாரணம்.