தொடர்கள்
கதை
இரு தேவதைகள் - ஆனந்த் ஶ்ரீநிவாசன்
20250215004616608.jpeg
ஶ்ரீநாத் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.தன் முகத்தில் வியப்பை கண்ட சுதா என்ன ஆச்சு ஶ்ரீ. என்றாள்.
இங்கே வாயேன். பாரு. அந்த குழந்தையை பார்த்ததும்
அவளும் அதிர்ச்சியாகவும் இரண்டு பேருக்குமே ஒன்றும் புரியவில்லை.
எப்படி இது சாத்தியம் ? கடவுளின் படைப்பில் இப்படியொரு அதிசயமா ?
அதெப்படி கண் காது மூக்கு தலை மயிர் புஸ்சென்று கன்னம்.எல்லாவற்றுக்கும் மேலாக தாங்கள் குழந்தையின் வலது மணிக்கட்டில் இருக்கும் அதே மச்சம்?
. அந்த்குழந்தையை காப்பகத்தில் கண்ட காட்சிபற்றிய விவாதம் ன் தான் இது.
“ஆனால் எதுவும் தெரியாமல் அந்த நாலு வயசு குழந்தை நீங்க என்னை ஒங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போகப்போறீங்களா.?”
“என்னைப்பாருங்க ஒங்களுக்கு பிடிச்சு இருக்கா? “
நீங்க கொஞ்சம் பெரிசா குண்டா இருக்கிங்க அப்பா அம்மா.மட்டும் எவ்வளவு அழகா இருக்காங்க.
இப்படி அந்த குழந்தைச் சொன்னதும் இருவருக்கும் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
இதே வார்த்தை அஞ்சாறு வருஷம் முன்பு கேட்ட வார்த்தை.
அது அந்த காப்பகத்தின் பிளையிங் எரியா .அங்கு தான் நாங்க பார்த்த குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது.
இந்த குழந்தைக்கு நாலு அல்லது நாலரை வயது தான் இருக்கும். ஆனால் இவள் மட்டும் வித்தியாசமா தெரிந்தாள்.
மற்ற குழந்தைகள் அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை.
நான் puzzle விளையாட்டில் எக்ஸ்பர்ட். ஒங்களுக்கு தெரியுமா ? சொல்லிக்கொண்டே
அந்த விளையாட்டை அப்படியே போட்டு விட்டு பிளாக் ஃபோர்ட் பக்கம் போனது.
நாங்கள் தெரியும் என்று சொல்வதற்குள் குழந்தை போர்டில் இடது கையால்
யுனி கார்ன் படத்தை வரைந்து காட்டியது. அந்த குதிரை ஒற்றை கொம்புடன் இருந்தது. 17ம் நூற்றாண்டு விலங்கு. இந்த குழந்தைக்கு எப்படி வரைய முடிந்தது.?
அந்த குழந்தையின் மழலைப் பேச்சு கண்ணன் வாசிக்கும் புல்லாங்குழல் சங்கீதத்தை விட ரம்யமாக இருந்து.
அட செல்லம் ஒன்னை யாருக்கதாண்டா பிடிக்குமா போகும். நீ தேவதைடா .வாரி அணைத்து இருவரும் முத்த மழை பொழிந்து கையில் வைத்து இருந்த பெரிய சால்கலட்டை கொடுத்தான் ஶ்ரீ.
மத்த குழந்தைகளுக்கு சுதா கொடுத்துக் கொண்டிருந்தாள்
என்ன ஶ்ரீ ? காப்பகத் தில் உள்ள குழந்தைகளை பாத்தீங்களா. யாரைப் பிடிச்சிருக்கு?
காப்பகத்தின் தலைமை நிர்வாகி விஜயலட்சுமி .வயது 50க்குள் இருக்கும். கோல்டன் ஃப்ரேம் கண்ணாடி நேர்த்தியான புடவைக்கட்டு கை முழுவதும் ஜாக்கெட்.தூக்கி வாரப்பட்ட கூந்திலில் கொண்டை: பார்க்கும் போதே அதிகார தோரணை மாதிரி தெரிந்தாலும் கனிவான பேச்சு.
“வாங்க என் சேம்பரில் உக்கார்ந்து பேசலாம்.”
மூவரும் உள்ளே உட்கார்ந்து பேசும் போது மூவருக்கும் டீ வந்தது.
குடித்துக் கொண்டிருக்கும் போதே சேம்பர் சைடில் உள்ள கண்ணாடி வழியாக அந்த குழந்தை குறு குறுப்பாய் ஶ்ரீ யைப் பார்த்துக்கொண்டிருந்தது.கையை ஆட்டியது.
“வாடா செல்லம் உள்ளே வா. அது துள்ளிக்குதித்து உள்ளே வந்து ஶ்ரீநாத் அருகில் வந்து நின்றது.
அந்த குழந்தையை தன் மடியில் வைத்துக்கொண்டான்.
யாரிடமும் ஒட்டாத இவ ஒங்க கிட்ட மட்டும் இப்படி இருப்பது ஆச்சர்யமா இருக்கு என்றார் நிர்வாகி.
பட் ஷீ இஸ் வெரி க்யு ட்
எஸ் மேடம் அப்சுல்ட்லி ரைட்.
அந்த குழந்தையா பிடிச்சு இருக்கா
அஃப் கோர்ஸ் !
அந்த சுட்டிதனம்,குறும்பு பார்வை முகத்தில் தேஜஸ் புத்திசாலி தனம்.கொஞ்சம் மழலையோடு புன் சிரிப்போடு பேசும் பேச்சு. விளையாடும் போது முகத்தில் காட்டும் பொய் கோபம்.
என்னை பிடிச்சிருக்கா கியூட் கேட்ட கேள்வி ஓங்கிளை அப்பா அம்மான்னு கூப்பிடலாமா. நீங்க தான் ஒங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போக போறீங்களா என்று ஆர்வத்துடன் கேட்டட கேள்வி
அதுவும் இந்த வயசில புத்திசாலி தனமான கேள்வி. யாருக்கு மேடம் இந்த தேவதையை பிடிக்குமா போகும்.?”
இந்த குழந்தை கடவுளின் குழந்தை. EXtraordinary Brilliant.
ஆமாம் மேடம் இந்த குழந்தை பேரு என்ன?
அவளுக்கு நாங்க வைச்ச பேரு ஏஞ்சல்.
சுதாவிடம் தாவிற்று அந்த ஏஞ்சல்.
நான் இந்த தேவதையை அழைச்சிட்டு விளையாட போறேன். நீங்க பேசிக்கிட்டு இருங்க என்று சுதா சொன்னது.தனக்கு ஒரு சாதகமான சூழ்நிலை தான்.என நினைத்து மேல விசாரித்தான்.
நாலு வருஷத்துக்கு முன்னாடி இவ அம்மா ரோஸ்மேரி தன்னால் இந்த குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலை என்று இங்கே கொண்டு விட்டு போயிட்டா.
அந்த பேரைக் கேட்டதும் ஷாக் ஆனான்.. ஶ்ரீ
என்ன சொன்னீங்க மேடம்?
“ரோஸ்மேரி”
“அவங்க தூத்துக்குடியா ?
அவங்க காண்டாக்ட் நம்பர் இருக்கா மேடம்.
தன் ஸ்மார்ட் போனில் குறித்து கொண்டான்.
சுதாவை பார்த்தான். அவள் முகத்தில் நீண்ட நாளைக்கு பிறகு சந்தோஷம் பரப்பியிருந்த்த்து.
அவள் குழந்தையோடு விளையாடி க் கொண்டு இருந்தாள்.
வருவதற்கு எப்படியும் பத்து நிமிஷம் ஆகும்
வெளியே வந்தவன் பத்து அடி தள்ளி உள்ள மரத்தின் அடியில் யார் தொந்திரவு இல்லாத இடத்தில் அந்த நம்பரை அழைத்தான்.
“ஹலோ ரோஸ்மேரி”
“எஸ் ஸ்பீகிங்”
“நா நான்தான் ஶ்ரீ “
வார்த்தையில் பதட்டமும் சந்தோசமும் ஒன்று சேர வந்து மோதியது.
.
“ஹை ஶ்ரீ நீ பேசுவேன்னு கனவில் கூட நினைககல . வாட் எ சர்ப்ரைஸ்
“எப்படி இருக்கே ரோஸ்?
.
“நான் இப்ப ஜெர்மனியில் இருக்கேன். லீவுக்கு இங்கே வந்துருக்கேன் ஶ்ரீ”.
“ஒன் அதிர்ஷ்டம் நான் இன்னிக்கு கிடைச்சேன்.” இன்னி ராத்திரி கிளம்பறேன்.”
ஆமாம் நீ உன் ஒய்ஃப் குழந்தை நல்லா இருக்காங்களா?
ரோஸ் என் ஒய்ஃப் இன்னொரு குழந்தைக்கு தாயாக முடியாது என்பது ஒனக்கு தெரியும்
அதனால் தான் உமாவை நான் வளர்க்கிறேன்.
சுதா உன் குழந்தை என்று தெரியாமல் தன் சொந்தக் குழந்தையைப் போலவே நேசித்து வருகிறாள் , ஆனால் ஆரம்பத்தில் இருந்தே அவளை "அம்மா" என்று அழைக்கும் இன்னொரு குழந்தையை அவள் விரும்புகிறாள் என்பதும் எனக்குத் தெரியும்.
இன்னொரு குழந்தை வேணும் தத்து எடுப்போம் என்று சுதா ஆசைப்பட்டதால் பல காப்பகங்கள் பாத்துட்டு
இந்த காப்பகம் வந்தோம்.”
காப்பகத்தின் பெயரைச் சொன்னான்.ஶ்ரீ.
அந்த பெயரை கேட்டதும் கொஞ்ச நேரம் அவள் அழததை ஶ்ரீ உணர்ந்தான்.
“என்னை மன்னிச்சிடு ஶ்ரீ. நான் உன்னைவிட்டு போகும் போது நான் கர்ப்பமாக இருந்தது ஒனக்கு தெரியும்”.
நம்ம காதல் கல்யாணம் வரைக்கும் வரும் என்று நினைத்த நாம் இந்த சாதிக் கொடுமையால் பிரிய நேர்ந்தது
நீயும் நானும் பிரிந்த நிலையில் எனக்கு சார்லஸ் என்பவருடன் திருமணம் ஆனது.
“அவர் அப்ப துபாயில் இருந்தது எனக்கு சௌகரியமாக போச்சு”.
குழந்தை பிறந்ததும் இதுக்கு நீ தான் bioligical அப்பா என்று உன்னிடம் கொடுத்தேன்.
உன் மனைவிக்கு குழந்தை பேறு பாக்கியம் கிடைக்க வாய்ப்பில்லை என்று அன்னிக்கு நீ சொன்னதால் கொஞ்சம் நிம்மதியா தான் இருந்தது.
“இதெல்லாம் தெரியும் ரோஸ் ஆனா உமாவுக்கு இருக்கிற மாதிரி அதே கண் மூக்கு வலது கையில் மச்சம் இருக்கே நாங்க பாத்த குழந்தைக்கு எப்படி சாத்தியம். நீ இடது கை பழக்கத்தில் வேலை செய்யற மாதிரி போர்டில் இடது கையால் வரையறா “
“மறுபடியும் மன்னிச்சிடு ஶ்ரீ அந்த பிரசவத்திலே எனக்கு டிவின்ஸ். ஒன்னை தான் உன்கிட்ட கொடுத்தேன்.
இன்னொரு குழந்தையை ஓங்கிட்ட கொடுத்து அதை வளர்க்க சிரமபடுவே என்று நினைத்து நான் அந்த ஆஷ்ரம்ல குடுத்து விட்டு ஊருக்கு போயிட்டேன். “இந்த உண்மையை அன்னிக்கு ஒங்கிட்ட மறைச்சுட்டேன். சொல்லிருக்கணும். என் தப்பு தான்.
நான் ஒரு பாவி ஶ்ரீ. பெத்த குழந்தையை பார்த்து கொஞ்ச முடியாத வளர்க்க முடியாத துர்பாக்கிசாலி.
ஆனா இப்ப எனக்கு ஒரு வழியில சந்தோசம். யார்கிட்ட சேரணுமோ அவங்க கிட்ட தான் குழந்தை சேர்ந்து இருக்கு. அதான் கடவுளின் கட்டளை. என நினைக்கிறேன்.
“இன்னிக்கு நான் கிளம்ப வேண்டிய கட்டாயம். ஆறு மாசம் கழிச்சு வருவேன். குழந்தைகளை பார்க்க அனுமதிப்பாயா ஶ்ரீ.”
“விடியோ எடுத்து அனுபட்டுமா?”
“அதைப் பார்த்தா இன்னும் துக்கம் தானே பீறிடும். ஆறு மாசம் தானே ஆசைகளை கட்டுப்படுத்தி வைக்கிறேன்.”
ஃபோனில் பேசிவிட்டு திரும்பிய போது சுதா உணர்ச்சிப் பெருக்கில் பேச முடியாமல்
இருந்தாள் .
ஆண்டவன் கணக்கு என்னிக்கும் தப்பாது ஶ்ரீ. உங்க உசிர் உங்ககிட்டயே வந்தது மனசுக்கு நிம்மதி.
அடி பைத்தியம். நம்ம உசிருன்னு சொல்லு.
அணைத்துக் கொண்டான்.