ஓம்
இந்த ரெண்டு எழுத்தை என் உதடுகள் எப்போதும் உச்சரிக்கும் .
இதற்கு அடுத்த ரெண்டு எழுத்து ராஜா
நமசிவாய
இந்த ஐந்து எழுத்தை பக்தியோடு சொல்வேன் .
அதே பக்தியோடு என் அடுத்த ஐந்து எழுத்து மந்திரம் இளையராஜா
பள்ளிப்பருவம் / கல்லூரி பருவம் / மண வாழ்க்கை என்று என் வாழ்வில் ஒன்றோடு ஒன்றாக கலந்த பண்ணைபுர ப்ரம்மம்.
சப்த ஸ்வரங்களை தன் சந்தத்தில் சுவீகாரம் எடுத்துக்கொண்ட ஆண் சரஸ்வதி .
ஐயனின் பாடல்களில் எல்லா வாத்தியங்களும் இடம் பெறும். அவரின் பிரம்மாஸ்திரம் வயலின் & புல்லாங்குழல்.
சோகமே வடிவான ஷெனாய் குழந்தைக்கு உற்சாக அமுது ஓட்டி , கம்பீரமாக வலம் வர வைத்தவர்.
ப்ரியா / மகாநதி - என்று பல பாடல்களில் ஷெனாய்க்கு உயிர் கொடுத்து இருப்பார்.
கோரஸ் - பாடல்களின் இடை இசையில் இவரை போல கோரஸை புகுத்தியவர்கள் எனக்கு தெரிந்து யாரும் இல்லை.
லா லா லா - அடேயப்பா !!!! எத்தனை விதங்களில் நமக்கு அளித்து பிரமிப்பு அடையச்செய்த மஹாபிரபு .
மொத்த படத்தையும் முடித்து விட்டு , சில சிக்கல்கள் காரணமாய் பிரிந்து, ராஜா சாரிடம் வந்து திரும்பவும் ஷூட் பண்ணமுமா என்று அச்சத்தோடு கமல் கேட்க, ஒண்ணும் வேண்டாம் நான் பாத்துக்கறேன் என்று ஹே ராம் படத்தை இசையில் தூக்கி நிறுத்திய நுட்பம்- வேறு யாரும் செய்ய முடியாது.
15-17 வருடங்கள் சாம்ராஜ்யம். ஒவ்வொரு தீபாவளிக்கும் 14 படங்கள். அதில் 8-10 இவரோட இசை.
20-30 பாடல்கள் மெகா ஹிட். இவரோட வேகத்திற்கும் - ஞானத்திற்கும் இனிமேல் யாரும் பிறக்க போவதில்லை.
எனக்கு படம் பிடிக்கல, அதுக்காக என் தொழிலுக்கு துரோகம் பண்ண மாட்டேன் என்று சொல்லி முதல் மரியாதை படத்தை இசையால் தூக்கி நிறுத்தி, படம் பார்த்த தோழன் பாரதிராஜாவை நெகிழ்ச்சியில் அழ வைத்தவர்.
6/8 - இந்த தாளக்கட்டில் - அட ராமா - இத்தனை variation பண்ண முடியுமா என்று வியக்க வைத்தவர்.
மென்னியை பிடித்து காசு இருந்தாதான் வேலை என்ற சினிமா தொழிலில் - இலவசமாய் பல படங்களுக்கு இசை அமைத்து கொடுத்தவர்.
industry ல யாரும் இதை பற்றி யாரும் பாராட்ட மாட்டார்கள்.
இந்த 81 அகவையில் சிம்பொனி அமைத்து., இன்னும் இருக்குடா , என்று உலகுக்கு சொல்லாமல் சொல்லிவிட்டார்.
ராஜா சார் , ஒரு இசை சித்தர் . இசை கடவுள் .
ஆர்மோனியம் - கி போர்ட் - பக்கத்தில் இல்லாமலேயே typewritting அடிப்பது போல இசைக்கோர்வை 32 பார்கள் வரை எழுதி என்னை
ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார் என்று அவரது பிரபாகர் வியந்து சொல்வார்.
ஒன்றே ஒன்று சொல்ல விழைகிறேன் .
பிரபஞ்சத்திற்கு பல சூரியனாம் பல நிலாக்களும் இருக்கலாமாம்.
ஆனால் இந்த பிரபஞ்சத்திற்கு
இசையென்றால்…
ஒரே ஓரு ராஜா தான் !!!!
Leave a comment
Upload