காக்கையின் அளவுள்ள ஒரு அழகான பறவை இந்த கருந்தோள் பருந்து. மை தீட்டியது போல கண்களை சுற்றி கருமை வண்ணம், தோள்களிலும் அதே கருமை பட்டைகள், இந்த பறவையின் அழகை மேலும் கூட்டும்.
பகல் நேரத்திலும், அந்தி பொழுதுகளிலும் மிக சுறுசுறுப்பாக காணப்படும் இந்த பறவை. மரங்கள் அடர்ந்த பகுதிகள், மற்றும் விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில், மற்றும் சிறிய காடுகள், புல்வெளிகள் நிறைந்த பகுதிகளிலும் காணப்படும். அடர்ந்த காடுகள் மற்றும் சமவெளிகளை தவிர்த்திடும் இந்த பருந்து வகை என பதிவிட்டிருக்கிறார் பறவையின ஆராய்ச்சியின் தந்தை சலீம் அலி.
தினமும் ஒரே மரத்தின் கிளையிலோ அல்லது கம்பத்தின் உச்சியிலோ அமர்ந்து கண்காணித்து கொண்டிருக்கும். சரியான இரை வகைகள் ஊர்ந்து செல்வதை கண்டால் பறந்து சென்று பிடித்து உண்ணும். அதே போல வானத்தில் வட்டமிட்டுக்கொண்டே தரையில் இரை தேடும் பழக்கமும் கொண்டது. இரையை கண்டுவிட்டால், வானத்தில் இருந்து இறக்கைகளை அசைக்காமல், பாராசூட்டில் இறங்குவது போல சரிந்து வந்து, தரையில் உள்ள இரையை லாவகமாக தன் கூரிய கால் நகங்களால் பற்றிக்கொண்டு பறந்து விடும் திறன் கொண்டது இந்த பருந்து வகை.
வெட்டுக்கிளிகள், வயல் எலிகள், மற்றும் ஓணான்கள் இந்த பருந்துகளின் முக்கிய உணவாகும். பொதுவாகவே பொறுமையாக பறக்கும் இந்த பருந்து வகைகள் நம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காணப்படும் ஒரு பறவை என பதிவிட்டிருக்கிறார் சலீம் அலி.
தொடர்கள்
தொடர்கள்
Leave a comment
Upload