மார்ச் 9 அன்று துபாய் இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் ஆடப்ப்பட்ட சாம்பியன்ஸ் ட்ராஃபீ இறுதி போட்டியில் இந்தியா, எதிர்த்து ஆடிய நியூசீலாந்தை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை வென்றது.
சமீபத்தில் நியூசீலாந்திடம் நம் நாட்டிலேயே டெஸ்ட் சீரீஸ் மூன்றிலும் தோல்வி. பின்னர் இலங்கையிடம் 50 ஓவர் ஒரு நாள் தொடரிலும் தோல்வி. டெஸ்ட் போட்டிகளின் உலக போட்டி இறுதிப் போட்டி மற்றும் ஆஸ்த்ரேலியாவுடனான பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் போட்டியிலும் தோல்வி.. இவ்வளவு தோல்விகளுக்கிடையே இந்த சாம்பியன்ஸ் ட்ராஃபீ இந்திய கிரிக்கெட்டுக்கு. கோச் கௌதம் கம்பீருக்கும் ஒரு மிகப் பெரிய டானிக் தான் , இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும் தான். கூடவே விராட் கோலியின் வருங்காலம் எப்படி இருக்குமோ என்று வேறு சர்ச்சை.
ஃபைனல் மேட்ச்சில் ரோஹித் கரகட்டம் குத்துப் பாட்டு ஆடி போட்டு விட்டு போய்விட்டாலும், தக் தக் தருணங்கள் நிறைய இருந்தன.
கில் அடிச்ச ஷ்யூர் பவுண்டரியை லபக்குனு கில்லியாப் புடிச்சுப்போட்ட பிலிப்ஸ் ஸ்டேடியத்தில் மயான அமைதியைக் கொண்டு வந்தார். அந்த கில்லோட ஷாட்ட காமிக்கிறாங்க, கட், பேட்டிலிருந்து பந்து வாங்கின அடியில் ஐய்யோ ஐய்யோ என்று அலரி அடித்துக் கொண்டு பறக்க ஆரம்பிக்கிறது, கட், அப்பிடியே காமிரா லாங்க் ஆன் பவுண்டரியை நோக்கி அடி பட்ட பந்துக்கு முன்னால் ஓடி விட வேண்டும் என்று ஜூமிக்க, இடையில் ஒருவன், பிலிப்ஸ், செய்த அராஜக அட்டகாஸம் தான் முதல் தக் தருணம்.
ரஜினி மாறி எண்ட்ரி போட்ட கோலியும் அடுத்து அவிட்டானது அடுத்த தக் தருணம்.
பளார் பளார் என பொளந்து கொண்டிருந்த ரோஹித்தின் பொறுமை அவரது விக்கெட்டியும் காலி செய்தது, அடுத்த தக் தருணம்.
இந்த மாதிரியான தக் தக் தருணங்களில் ஆபத் பாந்தவர்களாக களத்தில் ஆடி கலர் அடித்த ஷ்ரேயாஸ், ராஹுல், ஆக்ஸர் படேல், ஜடேஜாவுக்கு ஒரு பில்லியன் இந்திய உள்ளங்களின் இதயத்துடிப்பை அடக்கியவர்கள்.
ஒரே மைதானத்தில் ஆடினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டாலும் துபாய் என்ன எங்க வீட்டு கிரௌண்டா என்ன?
இறுதிப் போட்டியில் கேப்டன் ரோஹித் தமது இயற்கையான டமால் டுமீல் ஆட்டத்தை காண்பித்து துவக்கி வைத்ததே பாதி மேட்ச் ஜெயிச்ச மாதிரியானது. ஸேன்ட்னர், ரோஹித் பந்து வீச்சாளர்களை பயத்திலேயே வைத்திருப்பார் என்று சொன்னது ரோஹித்தின் பவர்ஃபுல் பேட்டிங்கிற்கு ஒரு ஷொட்டு. அந்த காலத்து ஸ்ரீகாந்த் மாதிரி. எவ்வளவு ஓவர் நிக்கறாங்களோ அவ்வளவு ரன்கள் ஏறிவிடும் என்பார்கள்.
இருந்தாலும் நம்ம மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை மெச்சித் தான் ஆக வேண்டும். ஹார்திக் பாண்ட்யா, ராஹுல், ஆக்ஸர் படேல், ஜடேஜா இவர்கள் சைலன்டா எடுக்க வேண்டிய ரன்களை எடுத்து நம்து வெற்றிக்கு துணை போனார்கள் என்றால் மறுப்பு சொல்லவார் உண்டோ இங்கு.
கில், கோலி தத்தம் ஆட்டங்களின் மூலம் டீமின் ரன் தொகைக்கு மொய் கணிசமாக எழுதியது நல்ல அறிகுறி தான்.
நாலு ஸ்பின்னர்ஸ்களை வைத்து அதிலும் இந்த மாதிரியான கண்டிப்பான ரிசல்ட் வரக்கூடிய ஆட்டங்களின் சூதாட்டம் ஆடியதற்கு ரோஹித்துக்கு ஒரு சபாஷ் போடணும்.
ஆனால், ரோஹித் இந்த வெற்றிக்குப் பிறகு நிருபர்களை சந்தித்து முடிக்கையில், நாங்கள் ஒன்றும் இந்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை என்ற கேட்காத கேள்விக்கு கட் & ரைட்டாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
பின்ன என்னவாம்!!!
வெற்றி கொண்டாட்டங்களில் விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவின் டாண்டியா கோலாட்டம் கோலாகலத்தின் உயரம்.
அவிங்களை விடுங்கள். நம்ம கவாஸ்கர் ஆட்டம் தான் உலகம் முழுவதும் வைரல்.
Leave a comment
Upload