பூஜா ஹெக்டே
ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் பூஜா ஹெக்டே. இந்த முறை டப்பிங்கில் அவரே தமிழில் பேசி அசத்தி இருக்கிறார். இதற்காக அவர் கடுமையாக பயிற்சி எடுத்துக் கொண்டாராம்.
ஜெயிலர் 2
ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்கியது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
ஜோதிகா
தமிழ் சினிமாவில் ஆணாதிக்கம் பற்றி ஜோதிகா பேசியதை தமிழ் சினிமா பிரபலங்கள் ஜோதிகாக்கு என்ன ஆச்சு என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.
மூன்று நடிகைகள்
டிராகன் வெற்றியை தொடர்ந்து சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடி மமிதா பைஜூ. இது தவிர அனு இமானுவேல் மற்றும் ஐஸ்வர்யா இணைகிறார்கள்.
தான்யா ரவிச்சந்திரன்
நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி தான்யா ரவிச்சந்திரன் தற்சமயம் ரெட்டதல படத்தில் நடிக்கிறார். தற்போது புடவையில் ஒரு கவர்ச்சி போட்டோ சூட் வெளியிட்டு ரசிகர்களை அசத்தியிருக்கிறார் தான்யா.
சசிகுமார்
சசிகுமார், சத்யராஜ், பரத் கூட்டணியில் ஒரு படம் வர இருக்கிறது. இந்தப் படத்தில் மேகா ஷெட்டி மற்றும் மாளவிகா ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள்.
மதராஸி
சிவகார்த்திகேயன் தற்சமயம் நடிக்கும் மதராசி படம் படப்பிடிப்பு யாழ்ப்பாணத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் ஸ்ரீ லீலா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
Leave a comment
Upload