விகடகவியார் உள்ளே நுழைந்ததும் சூடாக ஆனியன் பக்கோடா கொண்டு வந்து வைத்தார் ஆபீஸ் பையன். நாம் "திமுகவில் நிர்வாகிகள் மாற்றம் பற்றி செய்தி வருகிறதே" என்று ஆரம்பித்தோம். "நீர் திமுக மாணவர் அணி விஷயம் பற்றி கேட்கிறீர்கள் போலும் ஒரு கோஷ்டி மோதல்தான் காரணம். திமுக மாணவர் அணி தலைவராக ராஜீவ் காந்தி இருந்தார். மாணவரணி செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் இருந்தார், இருவருக்கும் ஏழாம் பொருத்தம். இவர் சொல்வதை அவர் கேட்பதில்லை அவர் சொல்வதை இவர் கேட்பதில்லை அதுதான் ராஜீவ் காந்தியை செயலாளராக பதவி இறக்கம் செய்திருக்கிறார்கள். எழிலரசனை அங்கிருந்து தூக்கிவிட்டு கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கிவிட்டார்கள். திமுகவை பொறுத்தவரை நிர்வாகத்தில் இன்னும் நிறைய மாற்றங்கள் வரும் மூத்த தலைவர்களின் மாவட்டங்கள் பிரிக்கப்படும் வேலை நடந்து வருகிறது. விரைவில் அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கும். பொன்முடி மாவட்டத்தை இரண்டாக தெரிவித்த போது பொன்முடி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது இன்னும் நிறைய மாற்றம் வரும் இது எல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள இப்போதே பக்குவப்பட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி சிபாரிசு என்ற போதே இதை வைத்து உங்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு பெறலாம் என்று கனவு காணாதீர்கள். நான் தேவைப்பட்டால் துணை முதல்வர் பதவி மட்டுமல்ல அமைச்சர் பதவியில் இருந்தும் உதயநிதியை நீக்கிவிடுவேன். இதை என் மகனிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் கூட நிறைய புதுமுகங்களுக்கு தான் வாய்ப்பு என்ற பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது " என்றார் விகடகவியார்.
திமுக அதிரடி மாற்றங்களுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
அதிமுகவில் அது இன்று வரை இழப்பறியாகத்தான் இருக்கிறது. இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்பது தான் எடப்பாடி திட்டம். அதை மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை அதற்குப் பிறகு தங்களுக்கான முக்கியத்துவம் குறைந்து விடுமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள். அவர்களை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைக்கும் பணியில் எடப்பாடி ஈடுபட்டிருக்கிறார். முதல் கட்டமாக வேலுமணியிடம் ஒப்புதல் வாங்கி இருக்கிறார் "என்றார் விகட கவியார். இதேபோல் மாவட்டச் செயலாளருடன் நடந்த காணொளி மீட்டிங்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் யார் யார் என்ன வேலை பார்க்கிறார்கள் போன்ற ரகசியங்களை எல்லாம் போட்டு உடைத்து விட்டார் எடப்பாடி குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் நீங்கள் உள்ளூர் அமைச்சர் நேருவுடன் சேர்ந்து கொண்டு என்னென்ன செய்கிறீர்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும், நீங்களாக திருந்துங்கள், இல்லையென்றால் என் நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் எடப்பாடி.
"சரி அடுத்த செய்திக்கு வாருங்கள்" என்றோம்
பாட்டாளி மக்கள் கட்சி நாங்கள் தற்சமயம் பாஜக கூட்டணியில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பக்கம் வருவதற்கான வாய்ப்பு தற்சமயம் பிரகாசமாக இருக்கு தொடங்கி இருக்கிறது அதனால் தான் தற்சமயம் திமுகவுடன் சேர்ந்து பாஜக மத்திய அரசையும் விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கிறார் அன்புமணி ராமதாஸ் என்றார்.
தற்சமயம் விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனா கை ஓங்கி இருக்கிறது. நாம் தனித்துப் போட்டி என்பதெல்லாம் இப்போது சரிவராது கட்சிகள் பிரிந்து தேர்தலை சந்தித்தால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும். அதன் பிறகு நமது கட்சியே காணாமல் போக்கி விடுவார்கள். அதிமுக கூட்டணியில் நாம் சேருவோம் அதுதான் நல்லது என்று மூளை சலவை செய்யும் வேலையை தொடங்கி இருக்கிறார்.
ஆதவ் அர்ஜுனா. விஜயும் இப்போது யோசிக்கிறார் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்.
Leave a comment
Upload