நீலகிரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் தங்களின் பயணத்தை மேற்கொள்ள முதலில் விரும்புவது நீலகிரி மலை ரயில் பயணத்தை தான் .
ஒரு காலத்தில் படு ஈசியாக இந்த மலை ரயிலில் பயணித்துவிடலாம் .
தற்போது இந்த ரயிலில் பயணிப்பது என்பது குதிரை கொம்பாகிவிட்டது .
அதிலும் கோடை சீசன் நேரத்தில் இந்த ரயில் பயணம் என்பது சாத்தியகூறுல்ல!.
ஆன் லைன் முன் பதிவு வந்த பின் இரண்டு மாதங்களுக்கு முன்பே அனைத்து இருக்கைகளும் புக் ஆகிவிடுவது சகஜமாகிவிட்டது .
ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் பொது கம்பார்ட்மெண்டில் இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் தவிப்பதை தினமும் பார்க்கமுடிகிறது .
மலைகளின் அரசியின் ஆபரணம் மலை ரயில் 1899 ஆம் வருடம் ஜூன் 15 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு தன் முதல் பயணத்தை துவக்கியது .
ஸ்விஸ் பொறியாளர்களின் அறிய கண்டுபிடிப்பு நிலக்கரி நீராவி என்ஜின் ஜிக்கு புக்கு ஜிக்கு என்று மலையில் ஊர்ந்து வந்ததை பார்த்து ஆச்சிரிய பட்டார்கள் அன்றைய நீலகிரி வாசிகள் .
அதே போல 1908 ஆம் வருடம் ஊட்டி செயின்ட் மேரிஸ் ஹில் பகுதியில் கட்டப்பட்ட அழகான ரயில் நிலையத்திற்கு முதல் முறையாக மலை ரயில் வந்து சேர்ந்தது .
தன் 125 வருட பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த மலை ரயில் பயணத்தை முடிவுக்கு கொண்டுவரும் தென்னக ரயில்வே துறையின் கனவு பலிக்கவில்லை இது நாள் வரை .
இதற்கு முக்கிய காரணம் 2005 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரத்தை யுனெஸ்கோ வழங்கியது தான் .
முதன் முதலில் ஸ்விஸ் பொறியாளர்களால் பிரிட்டிஷ் மெட்ராஸ் ரயில்வே கம்பெனி உருவாக்கின மலை ரயில் இது .
இந்த மலை ரயில் பயணத்தில் 16 டனல்கள் , 200 வளைவுகள் , 257 பாலங்கள் இவைகளை கடந்து பயணிப்பது ஒரு த்ரில்லிங் அனுபவம் என்கின்றனர் .
ஒரு காலத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரண்டு ரயில்கள் தினமும் ஊட்டி வரை வந்து செல்லும் .
குன்னூரில் இருந்து ஊட்டிக்கும் ,ஊட்டியில் இருந்து குன்னூருக்கு தினமும் இரண்டு மணிக்கு ஒரு ரயில் என்று பயணித்த காலங்கள் உண்டு .
மீன் ரயில் , மெயில் ரயில் , கூட்ஸ் ரயில் , ஊட்டி குதிரை பந்தய குதிரைகள் வந்து செல்ல பிரேத்தியேக ரயில் பெட்டிகள் இருந்தன அதில் குதிரைகள் பயணித்து வந்து போவது அழகான காட்சியாக ஊட்டி சீசன் சமயத்தில் இருந்தது .
குன்னூரில் ஒரு ரயிலும் , ஊட்டியில் ஒரு ரயில் இரவில் தங்கும் .
காலை இரண்டு மார்கமாக அரசு ஊழியர்கள் , பணியாளர்கள் , கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இந்த ரயிலில் பயணிப்பார்கள் .
தற்போது எல்லாம் கனவாகிப்போய் ஊட்டி பாரம்பரிய ரயில்வே வளாகம் சின்னாபின்னமாகி ஒரு சிறிய மலை ரயில் நிலையம் எதோ பெரிய ரயில் ஜங்ஷன் போல மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மலை ரயிலின் என்ஜின்கள் பாரம்பரிய வரலாற்று சிறப்பு மிக்கவை .
ஆரம்பத்தில் 13 நிலக்கரி நீராவி என்ஜின்கள் மகாராணி போல மலைகளின் அரசியின் மேல் தவழ்ந்து பயணித்து கொண்டிருந்தன .
தற்போது 7டீசல் பயர் என்ஜின் , 2 நிலக்கரி பயர் என்ஜின்கள் மற்றும் 5 டீசல் என்ஜின் பயணத்தில் உள்ளது . மூன்று என்ஜின் பயணத்திற்கு ஏற்றதல்ல என்று ஊட்டி ரயில் நிலையத்திலும் , குன்னூர் ரயில் நிலையத்திலும் , கோவை ரயில் நிலையத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது .
ஊட்டியில் உள்ள என்ஜின் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது .
நீலகிரி மலை ரயில் உள்ளூர் வாசிகளுக்கும் மாணவர்களுக்கும் எட்டாத கனியாகிவிட்டது .
மாணவர்கள் நிஷாந்த் , ஹரிஷ் மற்றும் விஜி கூறும் போது , "எங்களை போல் ஏராளமான மாணவர்கள் உள்ளூர் மக்கள் இந்த ரயிலில் பயணித்ததில்லை .
125 வயதான மலை ரயில் பயணம் சூப்பர் என்று டிவி நியூஸில் தான் பார்க்கமுடிகிறது எங்களால் போக முடியவில்லை காரணம் டிக்கெட் விலை மிக அதிகம் . வெளிநாட்டினரும் , பணக்கார சுற்றுலா பயணிகள் மட்டும் தான் பயணிக்க முடிகிறது .
ரயில் நிலையத்தில் உள்ள மியூசியத்தை கூட எங்களால் பார்க்கமுடியவில்லை .
ரயில்வே துறை ஏன் இப்படி செய்துள்ளது .
ஒரு நாளைக்கு இரண்டு ரயில் தான் வருகிறது இதற்கு ஏன் இவ்ளோ பெரிய ரயில் நிலையம் .
எங்க ரயில் என்று இருந்தது இப்பொழுது யாரோ ரயிலாகிவிட்டது .
கனவில் தான் இந்த ரயிலில் நாங்கள் பயணிக்க முடியும் ". என்கின்றனர் .
மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயிலில் ஊட்டி வந்து இறங்கிய பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னதத் மற்றும் பீஸ் யிடம் பேசினோம் ,
" இந்த ரயில் பயணம் ரொம்ப த்ரில்லிங் அடர்த்தியான மலையில் ஊர்ந்து வந்தது . பிரிட்ஜ்களில் கடந்து வரும்பொழுது சற்று நடுக்கம்தான் !..ஒரு சூப்பர் அனுபவம்.ஆனால் ஒரு ஏமாற்றம் ஸ்டீம் என்ஜின் மிஸ்ஸிங் ஏன்" என்று கேட்டனர் .
Heritage steam chariot trust president நடராஜனை தொடர்பு கொண்டு பேசினோம் ,
" நீலகிரி மலை ரயில் உலக பிரசித்தி பெற்றது . யு கே யில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த அழகிய மலை ரயிலை கான்ட்ராக்ட்டில் லட்ச கணக்கில் பணம் கட்டி பயணிக்கின்றனர் .
பல வருடங்களாக கோடை மாதங்களில் சிறப்பு ரயில் ஏப்ரல் 15 முதல் ஜூலை மாதம் வரை தினமும் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கி வந்தனர் .
இந்த வருடம் கோடை சீசன் சிறப்பு ரயில் மார்ச் 28 முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை வாரத்திற்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமை இரண்டு நாட்களுக்கு மட்டும் இயக்க படுவது மிகுந்த ஏமாற்றமாக உள்ளது .
ஐம்பது பெட்டிகளும் 13 என்ஜின்கள் மற்றும் ஊழியர்கள் இருந்தும் ஏன் இப்படி இயக்குகிறது தென்னக ரயில்வே சேலம் டிவிஷன் என்று புரியவில்லை .
*37384 பழைய நிலக்கரி நீராவி என்ஜின்
*37400 முதல் இந்திய தயாரிப்பான நிலக்கரி நீராவி என்ஜின் குன்னூரில் அப்படியே மூன்று வருடமாக நின்று கொண்டிருப்பது எனோ ?!.
சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து குவியும் சீசனில் ரயில்வே நிர்வாகம் இப்படி செய்வதை யார் தட்டி கேட்பது என்கிறார் ..
மேலும் அவர் கூறுகிறார் நீலகிரி மக்களுக்கு தங்கள் மாவட்டத்தில் ரயில் வசதி உள்ளதா என்று தெரியுமா ?.
நீலகிரி எக்ஸ்பிரஸுக்கு சென்னை செல்ல டிக்கெட் பெற முடியுமா .
நீலகிரி குழந்தைகள் எப்போதாவது நீராவி பொழியும் என்ஜினை பார்த்துள்ளனரா மேலும் ஊட்டியிலிருந்து குன்னூருக்கு ரயில் இருப்பதே பலருக்கு தெரியாது பலர் மறந்தே விட்டனர் .
நீலகிரி மாணவர்களுக்கு மலை ரயிலில் எந்த தள்ளுபடி மற்றும் பாஸ் இல்லை .
பள்ளி மாணவர்கள் ரயில் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்த்ததில்லை .
இந்த ரயில் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமா ?.
ஏன் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒரே ஒரு ரயில் மட்டும் இயக்கப்படுகிறது .
நீலகிரி வாசிகளுக்கு சாதாரண ரயில் கட்டணத்தில் பயணிக்க டிக்கெட் வழங்கவேண்டும் .
நீலகிரி மலை ரயிலில் சென்னைக்கு நேரடி ஒற்றை முன்பதிவு வசதி செய்து கொடுக்கவேண்டும் .
வார இறுதி நாட்களில் மாணவர்கள் பயணிக்க கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் .
அனைத்து அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் தினம் பயணம்செய்ய சீசன் டிக்கெட் சாதாரண கட்டணத்தில் வழங்கி காலையும் மாலையும் பழைய படி ஊட்டியில் இருந்து ஒரு ரயிலும் குன்னூரில் இருந்து ஒரு ரயில் ஒரே நேரத்திற்கு புறப்பட செய்ய வேண்டும் .
ஊட்டி, குன்னூர் இடையே கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறார் நடராஜன் .
கடந்த நாற்பது வருடமாக மலை ரயிலின் ஓட்டத்திற்காக போராடிவரும் நடராஜன் " இந்த மலை ரயிலுடன் தான் என் இறுதி மூச்சி நிற்கும் " என்கிறார் சென்டிமெண்டாக .
எதைப்பற்றியும் கவலை படாத ரயில்வே நிர்வாகம் இந்த ஹெரிடேஜ் ரயிலையும் ரயில் நிலையங்கள் மற்றும் வளாகங்களை துஷ்ப்ரயோகம் செய்து கொண்டிருப்பதை கண்ணால் பார்க்க முடிகிறது .
இது வேதனையா சாதனையா என்பது புரியவில்லை ....
Leave a comment
Upload