தொடர்கள்
கதை
அயல் நாட்டுப் படிப்பு. ஆனந்த் ஶ்ரீநிவாஸ்.

20250101105256118.jpeg

அன்று என் ஃபோன் வாட்ஸ்அப் காலில் சுதர்சன் வந்ததும் சுசிலா பதறிப் போய் ,”என்ன சுந்து 10நாளாகப் பேசலை? எனக்குக் கவலையாப் போச்சு “என்றாள். வழக்கமா ஒவ்வொரு வாரம் சனி இரவு 10 மணிக்கு வாட்ஸ்அப் காலில் வருவான் .அவன் அம்மாவிடம் அதிக நேரமும் .பின் அக்காவிடமும் ஒரு நிமிஷம் பேசுவான். கடைசியில் என் கிட்ட ஒரு வார்த்தை பேசுவான். . பாட்டியை பற்றி விசாரிக்க மாட்டான். “இல்லம்மா !அது வந்து கொஞ்சம் பிஸி அதான்.” எப்போதும் கலகலவென்று பேசுபவன் அவன் முக வாட்டதைப் பார்த்த போது கவலையாகத் தெரிந்தது. சுசி பதட்டத்துடன் மீண்டும் கேட்டாள்.

எப்போதும் கேட்கும் கேள்வி தான்” சாப்பிட்டையா? ஏதாவது வேணும்ன்னா சொல்லு. ரெடி மிக் ஸ் , ஸ்நாக்ஸ் பார்சல் அனுப்பறேன்”. “இல்லம்மா வேணும்ன்னா சொல்றேன்”. “ வந்து ஆறு மாசம் ஆச்சு ஆனா எனக்கு இன்னும் ஸ்காலர்ஷிப் கிடைக்கல. இந்த நாட்டு லாங்குவேஜ் தெரியல.” “ரூம் வாடகை சாப்பாட்டுச் செலவு இதர செலவு எல்லாம் மாசம் ஒரு லட்சம் ஆகுது. எனக்குப் பயமா இருக்கு. “ “என்ன குழந்தை மாதிரி ஃபீல் பன்றே? அப்பா எப்படியாவது செகண்ட் இயர் செலவுக்குப் பணம் அனுப்புவார் “ “நீ கவலைப் படாதே. பார்ட் டைம் ஜாப் கிடைக்கலன்னு வருத்த படாதே?” “நேரம் வரும் போது எல்லாம் கிடைக்கும் “ என்று சமாதான படுத்தினாள்..

ஒவ்வொரு முறையும் அவன் புலம்புவான். சுசிலாவும் சரி நானும் சரி சமாதானப் படுத்துவோம். ஏற்கனவே எம் எஸ் படிப்புக்காக அந்த நாட்டுக்கு டிகிரி முடித்தவுடன் கிளம்பி போனவன் எம்.எஸ் முடித்து ஆறு மாதம் வேலைக்கு அலைந்த வனுக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை. அது அவனது துரதிருஷ்டம் என்றே சொல்லவேண்டும். இந்தியா திரும்பிய அவன் போன இடமெல்லாம் ஒங்க படிப்பு பாலிமர் பற்றியது ஓவர் குவாலிபிகேஷன். இந்தியாவில் கிடைக்காது பாரின் முயற்சி பண்ணுங்க அங்கே தான் ஒங்க படிப்புக்கு மெரிட் . எந்த டயர் கம்பனி போனாலும் இதே பேச்சு தான். தான் படிச்ச படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்க வில்லை. கிடைத்த வேலை எதுவாகச் செய்த போதும் அவனுக்குள் மனக்குறை இருக்கவே செய்தது நாம் எல்லோர் போல நன்கு தான் படித்தோம்.

ஆனாலும் சொற்ப சம்பளம். இதில் வாழக்கை சக்கரம் எப்படி ஒட்ட முடியும்?. பாட்டி மட்டும் “ சுதர்சன் நம்பிக்கையை இழக்காதே. வேற்று நாட்டு மொழிகளான சீனா,ஜெர்மன்,ஜப்பான் மொழி ஓய்வு நேரத்தில் கத்துக்கோ அது எப்படியும் ஒரு நாள் உபயோகமா இருக்கும் என்பார்.”

ஆனால் அதை அவன் பொருட்படுத்தாமல் இருந்தான். ஆனால் அவன் அக்காவோ பாட்டி பேச்சைக்கேட்டு பாட்டியின் பண உதவியோடு ஜப்பான் மொழி கற்றுக்கொண்டு மேன் மேலும் தன் திறமையை வளர்த்துக்கொண்டு இன்று ஜப்பான் ஐ டி நிறுவனத்தில் நல்ல வேலை நல்ல.சம்பளம்.

நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்தவனுக்கு மீண்டும் பாரின் போக ஒரு வாய்ப்பு கிடைச்சது. “இப்ப லேட்டஸ்ட் ட்ரெண்ட் டிஜிட்டல் மீடியா படிப்பு .ஒனக்கு அதில் எம்.எஸ் படிப்பு நிச்சயம் வேலை கிடைக்கும். என்று நண்பர்கள் ஆசையைத் தூண்டிவிட்டு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனி கிளம்பி போயிருந்தான். . பாட்டி தன் பென்ஷன் பணதில். தன் செலவை பார்த்துக்கொள்வார். தன் அனுபவதினால் பாட்டி அடிக்கடி பழமொழி சொல்லி புரிய வைப்பார்.. சுசிலா எதையும் அதிகமா செலவு செய்தாலோ, அல்லது பிறருக்கு உதவி செய்தலோ தன் சக்திக்கு மீறி செய்யும் போதெல்லாம் பாட்டி அதற்கு ஆற்றில் போட்டாலும் அளந்து போடணும் என்பார். ஆனால் அதைச் சுசிலா கேட்பதில்லை. அந்தப் பழமொழி கூற்றுக்குத் தகுந்த படி பாட்டி சொல் கேட்பது தன் பையனும் பேத்தியும் மட்டுமே என்பதில் பாட்டிக்குச் சந்தோசம்.

மறு மாதமே சுதர்சன் ஃபோன் செய்து தன்னால் தொடர்ந்து படிக்க முடியல.மேலும் இந்த நாட்டின் மொழி கத்துக்காதது தனக்கு ஒரு பின்னடைவு. தேவையில்லாமல் அப்பா பணத்தைச் செலவு செய்து வேலையும் கிடைக்காமல் போனால் என்ன செய்வது?. வேலை உரிமை கூட இந்த நாட்டுக் குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை . எனவே இன்னும் 20நாளில் ஊர் வந்து ஏதாவது பிசினஸ் செய்யப்போகிறேன். என்று சொல்லிவிட்டு வாட்ஸ்அப் பை கட் செய்தான்..

சுசிலாவுக்கு மட்டும் வருத்தம் அதிகம் இருந்தது. இந்தப் பிள்ளைக்கு ஒரு நல்ல காலம் பிறந்து இன்னும் ஒரு வருஷத்துல நல்ல வேலை கிடைக்கும்னு ஜோசியர் சொன்னதினல் தானே அவனே செலவு செஞ்சு படிக்க அனுப்பினோம். இப்படிச் செஞ்சுட்டானே ? புலம்பி தவித்தாள். “இத பாரு சுசிலா வசுவையையும் சுதர்ஷனையும் நீ தான் பெத்த . இரண்டு பேரையும் என்ஜினீயரிங் படிக்க வைச்ச. ஆனா வசு படிக்கிற காலத்தில் ஒழுங்கா படிச்சு நான் சொன்னதைக் கேட்டா.” ஆனா நீயும் சுதர்சனம் என்னை ஏளனம் செஞ்சுக்கிங்க. கிராமத்திலே ஒரு பழமொழி பழக்கத்தில் இருக்கும். “உழுகிற நாள்ல ஊர் சுத்திட்டு அறுக்கிற நாள்ல அருவா எடுத்துகிட்டு வந்தாற் போல” எவ்வளவு தடவை நானும் வசுவும் சுதர்சன் கிட்ட அயல் நாட்டு மொழி கத்துக்கோ பின்னாடி பிரயோசனம் படும்ன்னு. கேட்டானா அவன்?. இப்ப புலம்பி பிரயோசமில்லை. ஜோசியர் நல்லது தான் சொல்லி இருக்கார். பருவத்திலேயே பயிர் செய்யணும் . அப்ப தான் அறுவடை பண்ண முடியும். சுசீலாவின் ஆத்திரம் அடங்கியது. பாட்டியின் அறிவுரை புரிந்தது. பாட்டியின் அனுபவம் பேசியது.படிப்பு