தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 11 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250030112148962.jpg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீ சிவன் சார் யோக சபை, நங்கநல்லூர்

சென்னையில் அதிகம் கோயில்களை கொண்ட இடம் நங்கநல்லூர் என்றால் மிகை ஆகாது. நங்கநல்லூரில் புதிதாக மேலும் ஒரு கோயில் உருவாகி வரும் பிப்ரவரி மேடம் 2ஆம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

ஆம் ஸ்ரீ கஞ்சி மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களுக்கான பிரமாண்ட கோயில் நங்கநல்லூர் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அருகில், ஸ்ரீ ராகவேந்திரர் கோயில் இருக்கும் அதே தெருவில் உருவைகியுள்ளது. ஸ்ரீ சிவன் சாருக்காக உருவாகும் முதல் கோயில் இது தான். இந்த கோயில் பற்றி பல பதிவுகளை நாம் உருகவும் நேரத்திலேயே பதிவு செய்திருந்தோம்.

பெரியவா புராணம் யூடூப் சானலில் https://www.youtube.com/@PeriyavaPuranam

அத்தனை நிகழ்வையும் நேரலையாக காணலாம்.

இனி நங்கநல்லூர் பக்கம் வரும் ஆன்மீக அன்பர்கள் ஸ்ரீ சிவன் சார் யோகசபை சென்று சாரின் அனுக்கிரஹம் பெறலாம்