கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ சிவன் சார் வந்தார்.
2025 ஆம் வருடம் சிவன் சார் பக்தர்களுக்கு மிகவும் அனுகிரஹமான வருடம். ஏற்கனவே நாம் ஸ்ரீ சிவன் சருக்காக உருவாகி வரும் ஸ்ரீ சிவன் சார் யோகசபை பற்றி எழுதியிருந்தோம் . அதன் தொடர்ச்சியாக அது சம்பந்தப்பட்ட மேலுமொரு அனுகிரக தகவல்.
ஸ்ரீ சிவன் சாரின் உற்சவர் விக்கிரகம் மட்டுமே போதும் என்ற எண்ணத்தில் இருந்த அனைவருக்கும் காஞ்சியில் உள்ள ஒரு ஸ்வாமிகளின் எண்ணத்தில் நர்மதை நதியில் உள்ள பாண கல்லில் உருவான ஸ்ரீ சிவன் சாரின் மூலவர் உருவாகி வந்தடைந்துள்ளது.
சாத்தியமே இல்லாத ஒரு விஷயம் எப்படி சாத்தியமானது என்று ஸ்ரீ சிவராமன் மாமா விவரிக்க கேட்போம்.
பெப்ரவரி மேடம் 2ஆம் தேதி நம் தரிசனத்துக்கு தயாராகிறது சிவன் சாரின் யோகசபை
Leave a comment
Upload