தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20241127171203351.jpeg

ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி ரத்து.

இனிமே எட்டாங்கிளாஸ் பாஸ்னு பெருமையா சொல்ல முடியாது போல இருக்கு !!

வன்முறையை பரப்பும் முயற்சிகளால் வேதனை பிரதமர் மோடி.

பாராளுமன்றத்தில் நடந்ததை பற்றி பேசுறாரு போல தெரியுது !!

எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள உத்திரவாதம் இல்லை தொல்.திருமா கருத்து.

அது தொகுதி பங்கீடு உத்திரவாதத்தை பொருத்துன்னு சொல்றார் !!

அம்பேத்கரை அவமதித்ததற்காக மன்னிப்பு கேளுங்கள் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக வலியுறுத்தல்.

அவங்க உங்களை மன்னிப்பு கேட்க சொல்றாங்க மொத்தத்தில் அம்பேத்கர் பாவம் !!

எம் பிகள் தள்ளுமுள்ளு பாதுகாப்பில் குறைபாடில்லை சி.ஐ.எஸ்ஃ எப் விளக்கம்.

கரெக்டு தான் !!

வன்னியர் என்பதால் தான் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி தரப்படவில்லை டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு.

துணைமுதல்வர் பதவிக்கு இட ஒதுக்கீடு கேட்கிறார் மருத்துவர் அய்யா !!

ஸ்டாலினே வனவாசம் செல்ல தயாராக இருங்கள் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார்.

இதுக்கு திமுக ஐடி விங் பதில் சொல்லிடும் !!

பிரதமர் உள்துறை அமைச்சருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு.

ஆனாலும் அவருக்கு பதவி நீட்டிப்பு ஏன் தர மாட்டேங்கிறாங்க ?

மக்களவையில் குறைகளை கூறினால் மத்திய அரசு கேட்பதில்லை காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத் குற்றச்சாட்டு.

அதாவது பாராளுமன்றத்தில் பேசினாராம் !!

சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்.

அவர் இன்னொரு வழக்கில் ஏற்கனவே கைது பண்ணியாச்சு !!

மத்திய பட்ஜெட் தயாரிப்பு குறித்து பொருளாதார வல்லுனர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை.

வரிக்கு வரி ஆலோசனை பண்ணி இருப்பாங்க !!

எம்ஜிஆர் உடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவதா அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கேள்வி.

உங்களுக்கே பாவம் எம்ஜிஆர் எப்பவாவது தான் நினைவுக்கு வராரு !!

திமுக கூட்டணிக்கு எதிராக தவறான கணிப்பு முதல்வர் ஸ்டாலின்.

உங்க கணிப்பு வாக்காளர்களுக்கு கூடுதல் கவனிப்பு போதும் என்பது தான தலைவரே !!

மீண்டும் தமிழகம் நோக்கி திரும்பும் புயல் சின்னம்.

அதிகாரிகளே புதுசா எதாவது சொல்லுங்க !!

தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு டிஜிபி உத்தரவு.

இத்தனை நாளா துப்பாக்கி எடுத்துக்கிட்டு போலேன்னு அவரே சொல்றாரு !!

ஆண்டுக்கு நூறு நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்.

100 நாள் வெளிநடப்பு சாதனைக்கு முயற்சி பண்றார் போல தெரியுது !!

பாப்கானுக்கு ஜிஎஸ்டி நிர்மலா சீதாராமன் விளக்கம்.

பாப்கான் சாப்பிடல போதுமா !!

200 தொகுதிகளுக்கு மேல் நாம் வெற்றி பெறுவோம் துணை முதல்வர் உதயநிதி பேச்சு.

என்ன கொஞ்சம் கூடுதலா செலவாகும் !!