தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20241120173826925.jpeg

மக்களவை சுமுகமாக நடக்க அனுமதிப்போம் ராகுல் காந்தி.

நடக்க விடாமல் கலாட்டா செய்வது அவர்தான் என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார்.

விரைவில் திமுக ஃபைல்ஸ் 3 வெளியிடப்படும் அண்ணாமலை அறிவிப்பு.

ஏற்கனவே ரெண்டு வெளியிட்டும் ஒன்னும் நடக்கல, இப்போ இது தேவையா தலைவரே ?

அதிக மழை பெய்தாலும் திமுக அரசு சமாளிக்கும் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்.

போர் கால நடவடிக்கை மக்கள் மகிழ்ச்சி இப்படி சொல்லி சமாளிப்பதை தான் சொல்றார் !!

மகா கும்பமேளாவில் சாதி வேறுபாடுகள் மறைந்துவிடும் பிரதமர் மோடி.

அதனால்தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தேவையில்லை என்று சொல்கிறார் பிரதமர்.

மகாராஷ்டிராவில் 39 அமைச்சர்கள் பதவி ஏற்பு.

இலாகா சண்டை தான் அடுத்த காட்சி.

அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் எடப்பாடி உறுதி.

தலைவர் சும்மா சொல்லிக்கிட்டு இருப்பாரு இப்படித்தான், ஆனா ஒன்னும் நடக்காது !!

விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து விலகினார் ஆதவ் அர்ஜுனா.

வேற கட்சியில் அவருக்கு டிமாண்ட் ஜாஸ்தி ஆயிடுச்சு !!

முதல்வர் ஸ்டாலின் கூட்டணியை அரவணைத்து செல்கிறார் திருமாவளவன்.

ஆனால், ஆட்சியில் மட்டும் பங்கு தர மாட்டார் அப்படித்தானே !!

நேரு ,இந்திரா மீது நிர்மலா சீதாராமன் பாய்ச்சல்.

அம்மையார் வந்து ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாரு போல தெரியுது !!

தமிழகத்திற்கு தனி நெடுஞ்சாலை ஆணையம் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்.

ஒன்னு ,ரெண்டு ஒப்புதலும் தருவார் போல் தெரிகிறது.

திமுக ஆட்சி அகற்ற ஒருமித்த கூட்டணி வேண்டும் நடிகை கஸ்தூரி கருத்து.

அடுத்த அரெஸ்ட்டுக்கு ஆயத்தம் மாதிரி தெரியுது !!

பாஜக முத்திரை பதிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்.

டெபாசிட் வாங்குவதிலா இருக்கும் !!

இந்திய அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கில் லஞ்சம் அமெரிக்க நிறுவனங்கள் வழங்கியது அம்பலம்.

அதிகாரிகளுக்கு உலகம் முழுவதும் கிளைகள் இருக்கிறது போல் தெரிகிறது !!

நீங்களா எங்களுக்கு அரசியலமைப்பு சட்டம் பற்றி பாடம் நடத்துவது ?நிர்மலா சீதாராமனுக்கு மல்லிகார்ஜுன கார்கே கேள்வி.

நீங்கதான் எப்பவும் அரசியலமைப்பு சட்டம் புத்தகம் கையுமா தான் இருக்கீங்க ? மேடம் அதை மறந்துட்டாங்க போலதெரியுது !!

நேரு எழுதிய கடிதங்களை கொடுங்க ராகுலுக்கு மத்திய அரசு கோரிக்கை.

அதுல என்ன அரசியல் தெரியலையே !!

அரைத்த மாவையே அரைக்க வேண்டாம் புதிதாக முயற்சி செய்ய வேண்டும் உத்தவ் சிவசேனாவுக்கு ஒரிஜினல் சிவசேனா கோரிக்கை.

ரொம்ப புளிச்சு போய் இருக்கும் போல தெரியுது !!

என்னை விமர்சிப்பவர்கள் உண்மையான குறி திமுகவாக இருக்கிறது.

அப்புறம் எதுக்கு பதில் சொல்றீங்க ?