தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

202493008595536.jpeg

தீபாவளி வாழ்த்து தெரிவித்த உதயநிதி.

ஏன் என்ன ஆச்சு ? யாராவது பயமுறுத்திட்டாங்களா !!

கூட்டணியில் சேர்வதற்கு ஆட்சியில் பங்கு நடிகர் விஜய் அறிவிப்பு.

இது ஏதோ தூண்டில் போடுற மாதிரி இருக்கு !!

சென்னையில் மழையை கணிக்க 68 கோடியில் புது தொழில்நுட்பம் நீர்வளத் துறை செயலாளர் தகவல்.

சாலையில் எங்கெங்கே பள்ளம் பார்த்துப் போகணும்னு கண்டுபிடிக்க ஏதாவது தொழில்நுட்பம் இருக்கா அத முதல்ல அறிமுகப்படுத்துங்கள் !!

தமிழகத்தை காக்கும் காவல் தெய்வமான முதல்வர் ஸ்டாலின் சென்னை மக்கள் பாதுகாத்து விட்டார். சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராஜ் சேகரன் பேச்சு.

கூட்டணிக் கட்சிகளை முதல்வர் புகழ் பாடுவது பற்றி ஒரு போட்டியே வைக்கலாம் !!

எடப்பாடி பழனிச்சாமி இனிமேல் கனவில் தான் முதல்வராக முடியும். 2026-ல் எங்கள் ஆட்சி தான் அமையும் டிடிவி தினகரன்.

தலைவரே இதுவும் கனவில் தானே !!

தேசிய அளவில் அதிக விபத்துக்கள் அதிக தற்கொலைகள் அதிக மனநல பாதிப்புகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது டாக்டர் ராமதாஸ்.

புள்ளி விவரம் எல்லாம் சரிதான் கட்சி வளரலையே !!

ஊதியம் போல உதவித்தொகை தரும் அரசு உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்.

அப்ப இனிமே ஓட்டுக்கு பணம் தர மாட்டீங்களா !!

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் பிரதமருக்கு முதல்வர் நன்றி.

ஆனா முதல்வர் இந்த நன்றி செய்தி முரசொலியில் காணோம் !!

பழனிச்சாமிக்கு வேறு வேலை இல்லை முதல்வர் எரிச்சல்.

உங்களை எரிச்சல் பண்ணுகிறார் போல் கேள்வி கேட்கிறார் தெரியுது !!

கல்லூரி பல்கலைக்கழகங்களில் அதிகரிக்கும் சங்கீகள் நடமாட்டம் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்.

உங்கள் கட்சியில் குடும்ப நடமாட்டம் என்று ஒரு பேச்சு வருது பாத்துக்கோங்க !!

ஸ்டாலின் மனைவி, சபரீசன், உதயநிதி ஸ்டாலின் என தமிழகத்துக்கு நான்கு முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி.

அப்போ உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் கிடையாதா ?

என் தேர்தல் அரசியல் பயணத்தில் வயநாடு மக்களாகிய நீங்கள் தான் என் வழிகாட்டி மற்றும் ஆசான் பிரியங்கா காந்தி.

அதாவது எப்படியாவது பாராளுமன்ற வாசலில் கொண்டு போய் விட சொல்றாங்க சிஸ்டர் !!

மதுவிலக்கு மாநில அரசு மட்டும் செய்ய முடியாது செல்வப் பெருந்தகை.

அப்புறம் மாநில உரிமையை பறிக்குது மத்திய அரசுன்னு புகார் சொல்லக்கூடாது ?

கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் சொல்ல வேண்டியது அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

ஆமா ஒன்னும் அவசரம் இல்லை !!

சாம்சங் விவகாரத்தில் சமூக தீர்வு முதல்வருக்கு கூட்டணி கட்சித் தலைவர் நன்றி.

அப்புறம் போய் வெளியில மாத்தி பேசக்கூடாது !!

சமூக நீதிப் பார்வை போன்ற விஜய் செல்லும் பாதை சரியானது திருமாவளவன்.

அனேகமா அண்ணன் பாதை மாற தயாராயிட்டார் போல தெரியுது !!

திராவிட நல் திருநாடு என்றால் உங்கள் நாக்கு தீட்டாகுமா ?

சனாதனம் என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிடுமா என்று பதிலுக்கு அவங்க கேட்டா முதல்வரே !!

முதலில் நடிகனாக பின்னர் வெற்றி பெற்ற நடிகனாக மாறினேன். இப்போது பொறுப்பான தலைவனாக மாறியிருக்கிறேன் நடிகர் விஜய் பேச்சு.

அண்ணா ரசிகர்கள் தான் தலைவன்னு சொல்றாங்க மக்கள் இன்னும் சொல்லல !!

அரசியலில் தியாகத்துக்கு இடமில்லை அகிலேஷ் யாதவ்.

உண்மைய சொல்றாராம் !!

நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு இந்திய ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி.

போர் வேண்டாம் அமைதி தான் வேண்டும் என்கிறார் பிரதமர் அப்புறம் எப்படி இது?

பொய்யான ஆரியம், திராவிடம் கோட்பாடு பரப்புவதை நிறுத்தும்படி உத்தரவிட முடியாது ஹை கோர்ட் கைவிரிப்பு.

ஆமா அவங்களே போர் அடிச்சு நிறுத்தினால் தான் உண்டு !!

தமிழக கவர்னராக ரவியே தொடர வேண்டும் எச்.ராஜா

ஆமாமா அப்பதான் அரசியல் பரபரப்பா இருக்கும் !!