தற்சமயம் மின்னஞ்சல் மூலமாக விமானங்கள் பள்ளிக்கூடங்கள் கேளிக்கை விடுதிகள் பெரிய ஹோட்டல்கள் இவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கை வருவது வழக்கமாகிவிட்டது. ஒரே நாளில் 95 மிரட்டல் எச்சரிக்கை விமானங்களுக்கு வந்திருக்கிறது.
அதாவது அக்டோபர் 14 முதல் பத்து நாட்களில் 250 விமானங்களுக்கு மிரட்டல் எச்சரிக்கை வந்திருக்கின்றன. இவை அனைத்தும் எக்ஸ் சமூக வலைதளம் வாயிலாக வந்துள்ளன. சமூக வலைதளம் என்பது பொதுமக்கள் பயன்பாட்டில் சற்று அதிகமாகவே இருக்கிறது என்பது உண்மை. எனவே இது போன்ற மிரட்டல்களை மூடி மறைக்க முடியாது. எனவே விமானத்தில் பயணம் செய்ய பொதுமக்கள் யோசிக்கிறார்கள். இதனால் விமான நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பண இழப்பும் ஏற்படுகிறது.
இந்த மிரட்டல்கள் எல்லாம் எக்ஸ் வலைத்தளம் சஸ்பெண்ட் செய்த வலைதள கணக்குகளில் இருந்து தான் பெரும்பாலும் வந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இப்போ இவற்றை சட்டரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். சிலரை கைது செய்து இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரையும் கைது செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு இது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை தருவதுடன் இவர்கள் பின்னணியில் இருப்பது யார் என்பதையும் அரசு கண்டுபிடித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Leave a comment
Upload