தொடர்கள்
ஆன்மீகம்
தினம் தினம் திவ்ய அனுபவம் - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240827115254213.jpg

கோவில் திருவாய்மொழி தனியன்கள் - முதல் பகுதி

ப4க்தாம்ரு'தம் விச்வஜநாநுமோத3நம்

ஸர்வார்த்த2த3ம் ஸ்ரீசட2கோபவாங்மயம்

ஸஹஸ்ரசாகோ2பநிஷத்ஸமாக3மம்

நமாம்யஹம் த்3ராவிட3வேத3ஸாக3ரம்.

-நாதமுனிகள் அருளிச்செய்தது

திருவழுதி நாடென்றும் தென் குருகூர் என்றும், மருவினிய வண் பொருநல் என்றும், அரு மறைகள் அந்தாதி செய்தான் அடி இணையே எப்பொழுதும்,

சிந்தியாய் நெஞ்சே!. தெளிந்து.

- ஈச்வரமுனிகள் அருளிச்செய்தது

திருவாய்மொழி 1.1.1ஆம் பாசுரம்

உயர்வற உயர் நலம்

உடையவன் யவன் அவன்

மயர்வற மதி நலம்

அருளினன் யவன் அவன்

அயர்வறும் அமரர்கள்

அதிபதி யவன் அவன்

துயரறு சுடரடி

தொழுதெழென் மனனே!

-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி 1.1.1ஆம் பாசுரம்

உயர்வற உயர் நலம்

உடையவன் யவன் அவன்

மயர்வற மதி நலம்

அருளினன் யவன் அவன்

அயர்வறும் அமரர்கள்

அதிபதி யவன் அவன்

துயரறு சுடரடி

தொழுதெழென் மனனே!

-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி 1.1.2ஆம் பாசுரம்

மனன் அக மலம் அற

மலர் மிசை எழுதரும்

மனனுணர்வு வளவிலன்,

பொறியுணர்வவை இலன்

இனன் உணர் முழு நலம்

எதிர் நிகழ் கழிவினும்

இனன் இலன் எனன் உயிர்,

மிகுநரை இலனே.

-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி 1.1.3ஆம் பாசுரம்

இலன் அதுவுடையன் இது

என நினைவரியவன்

நிலனிடை விசும்பிடை

உருவினன் அருவினன்

புலனொடு புலன் அலன்

ஒழிவிலன் பரந்த

அந்நலன் உடை ஒருவனை

நணுகினம் நாமே

- நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி 1.1.4ஆம் பாசுரம்

நாம் அவன் இவன் உவன்

அவள் இவள் உவள் எவள்

தாம் அவர் இவர் உவர்

அதுவிதுவுஉதுவெது

வீம் அவை இவை உவை

அவை நலம் தீங்கவை

ஆம அவை ஆயவை

ஆய் நின்ற அவரே

-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி 1.1.5ஆம் பாசுரம்

அவரவர் தமதமது

அறிவறி வகைவகை

அவரவர் இறையவர்

என அடி அடைவர்கள்

அவரவர் இறையவர்

குறைவிலர், இறையவர்

அவரவர் விதிவழி

அடைய நின்றனரே.

-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி 1.1.6ஆம் பாசுரம்

நின்றனர் இருந்தனர்

கிடந்தனர் திரிந்தனர்

நின்றிலர் இருந்திலர்

கிடந்திலர் திரிந்திலர்

என்றும் ஓர் இயல்வினர்

என நினைவரியவர்

என்றும் ஓர் இயல்வொடு

நின்றவெந்திடரே.

-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்