தொடர்கள்
கவர் ஸ்டோரி
இலங்கை விருப்பமில்லா திருப்பங்கள் 1 - ஸ்வேதா அப்புதாஸ்

புதிய அதிபர் அனுரா குமரா திசநாயகே

யாருமே நினைக்காத அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் இலங்கை வாசிகள் .

20240825193600297.jpg

நல்லதோ கெட்டதோ எப்பொழுதுமே உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு செயல் படும் நாடாக உருவாகிவிட்டது இலங்கை .

தற்போது நடந்து முடிந்த இலங்கை அதிபருக்கான தேர்தல் சற்றும் எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு புதிய அரசை உருவாக்கியுள்ளது என்பது அதிர்ச்சியான ஒன்று தான் .

நடந்து முடிந்த ஒன்பதாவது அதிபர் தேர்தலில் தங்களையே மிக பெரிய ஜாம்புவான்களாக கருதி வலம்வந்த ராஜபக்க்ஷே ,விக்ரமசிங்கே மற்றும் பிரேமதாசா சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இடது சாரிகளை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறார்கள் இலங்கை மக்கள் என்பதை மூக்கில் விரலை வைத்து பார்க்கிறார்கள் உலக தலைவர்கள் .

இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே , முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் மகன் நமல் ராஜபக்சே உள்பட 38 பேர் களத்தில் குதித்தனர் .

அதே சமயம் ரணில் விக்ரமசிங்கே , ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளராக எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே மூவருக்கும் தான் போட்டி நிலவியது .

21 ஆம் தேதி வாக்கு பதிவு முடிந்த கையோடு அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை துவங்கி நடக்க முன்னிலையில் அனுரா குமார திசநாயகே முன்னிலை வகித்தார் .

20240825195150376.jpg

ஆனால் வெற்றி பெற தேவையான ஐம்பது சதவிகத்திற்கு மேல் வாக்குகள் யாருக்கும் கிடைக்காத நிலையில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன .அதில் அனுரா குமரா திசநாயகே வெற்றி பெற்றுள்ளார் .

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மார்கிஸ்ட் லெனின் சித்தாந்த கட்சியான ஜனதா விமுக்தி பெறமுண மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்ட திசநாயகே 3 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .

20240825195218945.jpg

புதிய அதிபர் அனுரா குமரா திசநாயகே தேர்வு செய்யப்பட்டவுடன் நன்றி சொன்னது முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு தான்,

" எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியான முறையில் தேர்தலை முடித்து கொடுத்தமைக்கு நன்றி" என்று கூறியது அனைவரையும் ஈர்த்தது .திசநாயகே கொழும்பில் இருந்து நுறு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள அனுராதபுரத்தில் உள்ள தம்புத்தேகமா என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் .

அப்பா அரசு சர்வே அலுவலகத்தில் கடைநிலை ஊழியர் அம்மா குடும்பத்தலைவி மகனை கெலினியா பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டப்படிப்பு படிக்கவைத்தனர் .

கல்லூரி வாழ்க்கையில் இருந்தே அரசியல் டச் இருந்துள்ளது ஜே வி பி கட்சியில் இணைந்து அரசுக்கு எதிராக 1987 - 89 ஆம் வருடத்தில் அதிபர்கள் ஜெயவர்த்தனே மற்றும் பிரேமதாசாவுக்கு எதிராக குரல் கொடுத்தவர் .

1995 ஆம் வருடம் தேசிய மார்கிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உயர்ந்து பின் 1998 ஆம் ஆண்டு ஜே வி பி போலிட் பிரா அரசியல் பிரமுகராக உயர்ந்தார் .

2000 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார் திசநாயகே .

2002 ஆம் ஆண்டு சிங்கள தேசிய கட்சியுடன் இணைந்து தமிழ் ஈழம் எல் டி டி யிக்கும் பிரபாகரனுக்கு எதிர்ப்பு குரல் கொடுத்தவர் .

அரசியல் அமைப்பு விதி 9 படி புத்தர்கள் முக்கிய இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று அழுத்தமாக கூறினார் .

தமிழ் தேயிலை தொழிலார்களுக்கு இலங்கையில் வாழும் உரிமை மறுக்கப்பட வேண்டும் என்று கூறினவர் .

கச்சத்தீவை இந்தியாவுக்கு கொடுக்கக்கூடாது என்று உறுதியாக இருந்தவர் திசநாயகே .

மேலும் வடகிழக்கு தமிழ் மாநிலங்களுக்கு மாகாண அந்தஸ்து வழங்க கூடாது என்று ஒத்தைக்காலில் நின்று 1987 ஆம் ஆண்டு அன்றைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கையெழுத்திட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தவரும் இவரே !.

பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது குறித்து பேசியுள்ளார் புதிய அதிபர் திசநாயகே ," இலங்கை தனித்து எதையும் சாதிக்க முடியாது .

சர்வதேச ஒத்துழைப்பு இல்லாமல் எதுவுமே செய்யமுடியாது .நான் ஒன்றும் மந்திரவாதியில்லை நாட்டின் சாதாரண குடிமகன் என்னிடம் திறமைகளும் குறைகளும் உள்ளன .

என் மக்களின் திறமை அறிவாற்றலை பயன்படுத்தி சிறந்த முடிவுகளை எடுப்பதே என் பணி ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது என் பொறுப்பு " என்று தன்னடக்கத்துடன் பேசியுள்ளார் .

சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அமைச்சரவையில் வேளாண்மை துறை அமைச்சராக பணியாற்றியவர் திசநாயகே .

20240825195724243.jpg

தான் இலங்கையின் அதிபர் பொறுப்பை ஏற்றவுடன் தன் பழைய நிலைப்பாட்டை மாற்றிவருவதை இலங்கை உணரத்துவங்கியுள்ளது என்பது மறைமுக உண்மை .

தமிழர்களின் வாக்கு திசநாயகேவுக்கு கிடைக்காமல் போய்யுள்ளதால் ஏற்கனவே தமிழர்கள் மேல் வெறுப்பு இருந்தாலும் அதை மாற்றிக்கொள்வார் என்று கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள் .

நாட்டின் முதல் பெண்மணியாக மல்லிகா திசநாயகே வலம் வரப்போகிறார் .

இவர்களுக்கு இரண்டு புதல்வர்கள் .

திசநாயகே சற்று நம்முர் திருமா போல தெரிகிறார் !.

காம்பரேட் திசநாயகே இந்தியா மற்றும் சீனாவுடன் சான்விஜ்யாக மாற மாட்டேன் " என்று கூறியுள்ளார் .

உலகமே இலங்கையை உற்று பார்த்து கொண்டிருக்க சீனா காம்பரேட் அதிபர் அனுரா குமார திசநாயகே வை நம்ம ஆள் என்று அரவணைக்க தயாராகியுள்ளதாம் .

ஏற்கனவே இலங்கை இந்திய பெருங்கடலில் ஹம்பன்டோட துறைமுகத்தை தன் வசம் வைத்துக்கொண்டு உலகத்தின் படுபிசி கப்பல்தளமாக மாற்றி ஆசியா ஐரோப்பா வை வியாபார போக்குவரத்துக்கு இணைத்து வைத்துள்ளது சீனா .

இதை புதிய காம்பரேட் அதிபர் எப்படி கையாள போகிறார் என்பது கேள்வி குறி ?.