காலை பால்காரருக்கு பணம் கொடுக்க சென்றபோது எதிரே நடைப்பயிற்சி போய்க் கொண்டிருந்த என் நண்பர் எதிரே வந்தார். அப்போது அவர் "நம் ஆட்களுக்கு இப்போது சமூகப் பொறுப்பு இல்லாமல் போய்விட்டது. முன்பெல்லாம் தெரு விளக்குகளின் மொத்த இணைப்பும் நகராட்சி அலுவலகத்தில் இருக்கும் அங்கு இருக்கும் ஊழியர் தெருவிளக்கு ஸ்விச் ஆன் செய்து காலைஆப் செய்வார். ஆனால் இப்போது நகராட்சி ஒவ்வொரு தெருவிலும் ஒரு விளக்கு கம்பத்தில் சுவிச்சை வைத்துவிட்டு தெருவில் உள்ளவர்கள் அதை செயல்படுத்த செய்து விட்டார்கள். ஆனால் தேவையற்ற நேரத்தில் விளக்கு எரிகிறது அதை கடந்து போகும் பொது மக்களும் அது பற்றி கவலைப்படாமல் போய்க்கொண்டு தான் இருக்கிறார்கள். நான் நடைப்பயிற்சி செய்யும் போது ஒவ்வொரு இடத்திலும் திருவிளக்குகளை அணைத்துக் கொண்டே வருகிறேன்.
இது எனக்கு ஒரு பழக்கம் ஆகிவிட்டது. இதில் சமயம் தெருக்களில் காலை 8 மணி வரை கூட தெரு விளக்குகள் அணைக்கப்படாமல் இருப்பதை பார்க்கிறேன். மின் கட்டணத்தை நகராட்சி தான் செலுத்த வேண்டும் தேவையற்ற மின் விளக்குகளால் மின் கட்டணம் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. அந்தக் கட்டணத்தை பொதுமக்களிடம் வரியாக வசூலித்து தான் நகராட்சி எதிர்கொள்ள வேண்டும் இதையெல்லாம் நமது மகாஜனங்கள் எப்போது தெரிந்து கொள்வார்கள் "என்று ஆதங்கப்பட்டார்.
Leave a comment
Upload