தொடர்கள்
கவர் ஸ்டோரி
  திமுக  vs திருமா- விகடகவியார்

20240827171229731.jpg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் "திடீர் மழை உடம்புக்கு ஆகாது இஞ்சி டீ சாப்பிடுங்க "என்று ஆபீஸ் பையன் கொண்டு வந்து வைத்தார்.

டீயை உறிஞ்சி விட்டு "திருமாவளவனை கூட்டணியில் வைத்துக் கொள்வார்களா என்பது இப்போதைக்கு சந்தேகம் தான் "என்று ஆரம்பித்தார் விகடகவியார்".

நான் திமுக கூட்டணி விட்டு போக மாட்டேன் "என்று அடிக்கடி திருமா சொல்கிறாரே" என்று நாம் கேட்டபோது "அவர்தான் சொல்கிறார் திமுக சொல்லவில்லையே "என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்.

"விடுதலை சிறுத்தை கட்சிகளில் 10க்கும் மேற்பட்ட துணைப் பொதுச் செயலாளர் இருக்கிறார்கள்.

20240827171330840.jpg

ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தை கட்சியின் ரிசர்வ் வங்கி அவர்தான் கட்சிக்கு நிறைய பணம் செலவு செய்கிறார். அவருக்காக தான் சென்ற பாராளுமன்ற தேர்தலில் ஒரு பொது தொகுதி கேட்டு மல்லு கட்டினார் திருமாவளவன். ஆனால், கிடைக்கவில்லை.

ஆதவ் அர்ஜுனா அதில் முதல் படி மது ஒழிப்பு மாநாடு.

20240827171616922.jpg

அடுத்து விடுதலை சிறுத்தை கட்சி இல்லாமல் வட மாவட்டங்களில் திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது என்ற கருத்து சினிமாவில் இருந்து நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் துணை முதல்வர் ஆகலாம்.

ஆனால் 40 வருடங்களாக அரசியல் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வராக கூடாதா என்று அனல் பறக்க தந்த பேட்டி தான் இப்போது திமுகவை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது.

இந்த பேட்டியை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் டென்ஷனாகி கூட்டணிக் கட்சிகளுடன் பேசும் ஏ.வா. வேலுவை தொடர்பு கொண்டு அவர் என்ன கூட்டணியில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாரா கூட்டணியில் இருக்க வேண்டுமென்றால் ஆதவ் அர்ஜுனா இருக்க கூடாது இதுதான் நமது இறுதி முடிவு என்பதை கண்டிப்பாக சொல்லி விடுங்கள் என்று ஆவேசப்பட்டு இருக்கிறார். அதன் பிறகு ஆ. ராசாவை தொடர்பு கொண்டு இதற்கு நீங்கள் தகுந்த பதில் தாருங்கள் என்று சொல்லி இருக்கிறார் ஸ்டாலின்.

சத்தியமங்கலத்தில் இருந்த ஆ.ராசா எழுச்சித் தமிழர் திருமாவளவன் என்று ஆரம்பித்து அந்தக் கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஒருவர் போதுமான அரசியல் புரிதல் இல்லாமல் பேசுவது கூட்டணி அரணுக்கும் அரசியல் அறத்துக்கும் ஏற்புடையது அல்ல. இந்த கருத்தைத் திருமாவளவன் ஏற்க மாட்டார் ஏற்கக் கூடாது அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று பேட்டி தந்தார் ஆ.ராசா.

ஆதவ் அர்ஜுனா உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு அரசியல் தான் இப்போதைய ட்ரெண்டிங் அது தான் நமக்கு வாக்கு வங்கியை தரும் நாம் இல்லாமல் அவர்கள் ஜெயிக்க முடியாது. நாம் சட்டமன்றத் தேர்தலின் போது அதிக தொகுதிகள் வாங்க இதுதான் சரியான வழி என்று திருமாவளவனை கிட்டத்தட்ட மூளை சலவை செய்திருக்கிறார் என்கிறார்கள் அவரது கட்சியினர்.

இத்தனைக்கும் விடுதலை சிறுத்தை கட்சியில் சேர்வதற்கு முன்பு சபரீசன் , உதயநிதி ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர் ஆதவ் அர்ஜுனா.

அதேசமயம் வேறு யாரோ தூண்டுதலின் பேரில் விடுதலை சிறுத்தை கட்சி நமக்கு எதிரான வேலையில் ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் முதலமைச்சருக்கு வரத் தொடங்கி இருக்கிறது. அது பற்றியும் விசாரிக்க சொல்லியிருக்கிறார் என்ற விகடகவியாரிடம்….

20240827171728799.jpg

நிர்மலா சீதாராமன் தந்த விருந்து பற்றிய செய்தியை நீங்கள் இன்னும் விசாரிக்க வில்லையா? என்று கேட்டதும் நம்மை முறைத்துப் பார்த்த செப்டம்பர் 21ஆம் தேதி காலை ஒன்பதரை மணிக்கு சென்னை இந்தியன் பேங்க் கெஸ்ட் ஹவுஸ் எம் ஆர் சி நகரில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை அழைத்துப் பேசினார் நிர்மலா சீதாராமன். இந்த கூட்டத்துக்கு அண்ணாமலை ஆதரவு கரு.நாகராஜன் திருப்பதி நாராயணன் ஆகியோருக்கு அழைப்பு இல்லை. அவர்கள் அனைவருடன் காலை உணவு சாப்பிட்ட நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக நிலவரம் தமிழக அரசியல் பற்றி எல்லோர் கருத்தையும் கேட்டு தெரிந்து கொண்டார்.

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர்கள் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், துணைத் தலைவர் பால் கனகராஜ் ஆகியோர்.

2024082717211012.jpeg

இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தது பாஜகவில் கே. டி. ராகவன் தான். அவர்தான் இவர்களை தொடர்பு கொண்டு பைனான்ஸ் மினிஸ்டர் உங்களிடம் மனம் விட்டு பேச விரும்புகிறார் வாருங்கள் என்று அழைத்திருக்கிறார். என்று சொல்ல

"கட்சியின் புது ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா கூட அழைக்கப்படவில்லையாமே ? என்று நாம் கேட்டதும் அது பற்றி அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், நமக்குத் தெரியாமல் ஏதோ நடக்கிறது என்று லண்டனில் இருந்து அண்ணாமலை முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு என்ன பேசினார்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் நிர்மலா சீதாராமன் தனக்கு சரி இல்லை என்பதை தெரிந்து கொண்டு விட்டார் அண்ணாமலை என்று விகடகவியார் சொன்னதும்

தேசிய அரசியல் செய்தி எதுவும் இல்லையா என்று நாம் கேட்க காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராகுல்காந்தி மீது கோபித்துக் கொண்டு தனி கட்சி தொடங்கினார்.

காஷ்மீரில் தன் செல்வாக்கை நிரூபிக்கலாம் என்று நினைத்தார். காஷ்மீரில் இப்போது தேர்தல் நடக்கிறது. இவரை நம்பி வந்தவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை காரணம் வெற்றி பெற மாட்டோம் என்பதுதான். எனவே பேசாமல் கடையை மூடிவிட்டு மீண்டும் காங்கிரசுக்கு செல்லலாம் என்று அங்கு பேச்சுவார்த்தை நடத்த அவர் நமக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டார் ராகுல்காந்தி என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்.