இன்று மதியம் எனது பேரன்களை பள்ளியில் இருந்து அழைத்து வரும் டூட்டி இருந்தது. அவர்களை அழைத்து வர சென்ற போது பள்ளியில் மாடிப்படி வாசலில் காத்திருந்தேன். அப்போது ஒருவர் குழந்தைகளை அழைத்துச் செல்ல மாடிப்படி ஏறும் போது மாடிப்படி அருகே இருந்த ஒரு ஆசிரியை "உங்கள் பையன் கீழே வருவான் நீங்கள் இங்கேயே இருங்கள் என்றார்.
அதேபோல் ஒரு மாணவனை டேய் ஓடாதடா என்றார். அப்போது அந்த ஆசிரியை பார்த்து நீங்களே குழந்தைகளை வாடா போடா என்று மரியாதை இல்லாமல் அழைக்கிறீர்கள், அதேதான் அவர்கள் பழக்கமாக இருக்கும்.
நீங்கள் ஒருமையில் அழைப்பதற்கு பதில் அவர்களை வாங்க போங்க என்று அழைக்க ஆரம்பித்தால் அவர்களும் அதைப் பின்பற்றுவார்கள் "என்று அந்த ஆசிரியைக்கு அவர் ஆலோசனை சொல்ல அவர் ஒரு மாதிரி சுதாரித்துக் கொண்டு நீங்கள் சொன்ன யோசனை இன்று முதல் நான் பின்பற்றுகிறேன் என்றார்.
Leave a comment
Upload