பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் 6900 சிபிஐ வழக்குகள் பற்றிய விவரங்கள் தற்சமயம் வெளியாகிறது. பொதுவாக எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை சங்கடப்படுத்த சர்ச்சைக்குரிய விஷயங்களை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது வழக்கம்தான். சில சமயம் நீதிமன்றங்கள் கூட சில வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
சிபிஐ என்பது மாநிலங்களின் விசாரணை அமைப்பு போல் அதுவும் ஒரு விசாரணை அமைப்பு அவ்வளவுதான். அதற்கென்று விசேஷ அதிகாரங்கள் எல்லாம் எதுவும் கிடையாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு விசாரணை அமைப்பு சிபிஐ.
சிபிஐ ஆளும் தரப்பு அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துகிறது என்று விமர்சனம் நீண்ட நாட்களாக இருக்கிறது. அது உண்மையும் கூட. அதனால் தான் ஜெயலலிதா சிபிஐ என்பது வானத்திலிருந்து வந்ததா ? அதுவும் ஒரு விசாரணை அமைப்பு அவ்வளவுதான் என்று கருத்து சொல்லி இருந்தார்.
சிபிஐ விசாரணை என்பது ஆரம்பத்தில் பரபரப்பாக பேசப்படும். ஆனால், நீதிமன்றத்தில் சிபிஐ எத்தனை பேருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறது என்று கேட்டால் அது பெரிய அளவு இல்லை என்பது தான் உண்மை. காரணம் சிபிஐ வழக்கு என்பது அரசியல் காரணங்களுக்காக அல்லது அரசியல் நிர்பந்தத்துக்காக சிபிஐ இந்த வழக்குகளை விசாரிக்கிறது என்பது தான். சிபிஐயில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்கள் 581. இரண்டு ஆண்டுகள் நிலுவையில் இருக்கும் மனுக்கள் 2554. இரண்டு முதல் ஐந்தாண்டு வரை நிலுவையில் உள்ள மனுக்கள் 2,17,215. முதல் 20 ஆண்டுகள் நிலுவையில் இருக்கும் மனுக்கள் 1138 என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
எனவே அரசியல் கட்சிகள் சிபிஐ என்ற பொய்மான் பார்வையை விலக்கி மாநில விசாரணை அமைப்புகள் எல்லா வழக்குகளும் விசாரித்து தண்டனை வாங்கித் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. அதுதான் உண்மையான நீதி.
Leave a comment
Upload