அன்புள்ள பி சாய்ராம்,
தமிழ்நாடு அரசு நடத்தும் பிரத்யேக முதலீட்டு மாநாட்டில் உங்களை நாளை சந்திப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் டாக்டர் டி.ஆர்.பி. ராஜா, மாண்புமிகு தொழில்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து டாக்டர் கே. ஸ்ரீகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இடம்: டெரஸ் ரூம், ஃபேர்மாண்ட் ஹோட்டல் சான் பிரான்சிஸ்கோ - 950 மேசன் ஸ்ட்ரீட், சான் பிரான்சிஸ்கோ - கலிபோர்னியா 94108, அமெரிக்கா
தேதி: ஆகஸ்ட் 29 வியாழன்
செக்-இன் செய்ய மாலை 4.00 மணிக்கு வரவும். நிகழ்வு நேரம் 4:30 - 5:30 pm PST
தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மாநிலத்தின் தொலைநோக்குப் பார்வையைப் பற்றி விவாதிப்பதால், தமிழ்நாட்டின் மூத்த தலைவர்களுடன் ஈடுபட இந்த நிகழ்வு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. தொழில்துறைக்கும் அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பால் பகிரப்பட்ட செழிப்பை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளை தொழில்துறை அமைச்சர் ஆராய்வார்.
இந்த நிகழ்வில் நீங்கள் எங்களுடன் இணைந்து கொள்ள முடியும் என நம்புகிறோம்.
வாழ்த்துகள்,
மானசி தர்னே
www.indiaspora.org
என்ற அழைப்பிதழ் வர அன்று மாலை 4 மணிக்கு அங்கு ஆஜர் ஆகிவிட்டோம்.
இந்த முதலீட்டு மாநாட்டுக்கு முன் இது தொடர்பான ஒரு ஃப்ளாஷ்பேக் இதோ.
சென்னையில் கடந்த ஜனவரி 7 மற்றும் 8 தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்தில் அப்போது ஈடுப்பட்டுள்ள ஒன்பது வெளிநாட்டு கூட்டமைப்புகள் தவிர புதிதாக முப்பதுக்கும் மேலான வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கு கொண்டன. இந்த மாநாடு மூலம் ரூ. 60,000 கோடி பண மூதலீட்டை ( 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ) தமிழகம் பெறுவதற்கான வாய்ப்பு உருவானது.
இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவின் முக்கிய மாநிலங்களான சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் நோக்கம் அங்குள்ள தொழில் அதிபர்களிடம் ஆலோசனை செய்து மிகவும் நவீனமான தொழில் நுட்பத்திற்கான முதலீட்டை ஊக்குவித்து தமிழக முன்னேற்றத்தை விரைவாக்குவதாகும்.
அந்த வகையில் அமெரிக்கவில் சான்ஃப்ரான்ஸ்சிஸ்கோவில் நடந்த முதல் மாநாடு இது.
தமிழ்நாடு அரசுடன் இந்த கூட்டத்தை US INDIA STRATEGIC PARTNERSHIP FORUM ( USPB), INDIASPORA and AMERICAN TAMIL ENTREPRENEURS ASSOCIATION ( ATEA) போன்ற அமைப்புகள் பொறுப்பேற்று நடத்தியது.
தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் TRB ராஜா, தொழில்துறை செயலாளர் அருண் ராய், சான்பிரான்சிஸ்கோவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரி, டாக்டர் ஸ்ரீகர் ரெட்டி மூவரின் ஒருங்கிணைந்த முயற்சியில் இந்த கலந்தாய்வு கூட்ட ஏற்பாடுகள் மிகவும் சிறப்புடன் இருந்தது.
[TRB ராஜா பேசுகிறார்]
இந்த நிகழ்ச்சி சான்பிரான்சிஸ்கோ நகரின் பல முக்கிய சுற்றுலா தலங்களின் அருகே உள்ள Fairmont சொகுசு ஓட்டலில் நடந்தது. தொழிற்துறை செயலாளர் திரு. அருண் ராய் கூட்டத்தின் தொனியை தனது உரையில் ஏன் தமிழ்நாடு உலகளவில் முதலீட்டாளர்களின் விரும்பத்தக்க இடம் என்பதை விளக்கி துவக்கத்திலேயே பிரதிநிகளின் ஆவலை தூண்டினார். பின்னர் தமிழ்நாடு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் முன்னேற்றத்திற்க்கும் பெரும் பங்கு அளிப்பதால் அதை தெற்காசியாவின் நுழைவாயில் என பெருமிதமாக குறிப்பிட்டார். மின்னணுவியல், செமிகண்டக்டர்கள், மின்சார வாகன துணை பொருட்கள் போன்ற துறையில் தமிழ்நாட்டின் முன்னிலையை வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் திறன் மேம்பாட்டுக்கு பெருமளவில் கவனம் செலுத்தப்பட்டதால் எதிர்காலத்திற்கு தேவையான தொழில் நுட்ப பணியாளர்கள் சிறந்த அளவில் உள்ளனர் என்பதை உறுதிபடுத்தினார்.
USPF அமைப்பின் திரு. கவுரவ் வர்மா இந்தியாவின் இலக்கான ஐந்து டிரில்லியன் பொருளாதாரத்தை 2027க்குள் அடைய 11% GDP முன்னேற்றம் உடைய தமிழ்நாடு மிக துரிதமாக செயல்பட முடியும் என கூறினார். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்திய அமெரிக்க தொழில்வணிக கூட்டுறவுக்கான அடிப்படையாக விளங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
[USPFன் தலைவர் கவுரவ் வர்மா பேசுகிறார்]
INDIASPORA அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவரான திரு ரங்கசாமி இந்தியாவிற்கு அமெரிக்க முதலீட்டை ஈர்க்க பணிபுரிவதில் முக்கிய பங்கு வகிப்பவர். இந்த அமைப்பின் மூலம் உலகளாவிய இந்திய வம்சாவளியினரின் தனித்தனி அமைப்பு நிர்வாகிகளுக்கும் இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்கள், வல்லுநர்கள், அரசாங்க பிரதிநிதிகள் போன்றவர்களுக்கும் இடையே பாலமாக அமைந்து பொருளாதார வளர்ச்சிக்கு பணிபுரிவதாகும். தமிழ்நாட்டின் கல்வி முறை, வளர்ச்சி பெறும் தொழில் நுட்ப பெண்களின் பங்களிப்பு பற்றி ரங்கசாமி பெருமிதமாக கூறியதுடன் தமிழ்நாட்டின் மின்னணுவியல் மற்றும் SAAS (Software as a service) ]துறையில் முன்னேற்றம் வியக்கத்தக்கது என்றார்.
[INDIASPORA அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் ரங்கசாமி பேசுகிறார்]
சில கைதட்டல் சிதற, பின்னணியில் இருந்து தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்க பாதுகாப்பாளர்களோடு ஸ்டாலின் மன்றத்திற்கு வந்தார்.
[TRB ராஜா ஸ்டாலினை வரவேற்கிறார்]
பின்னர் தலைமை உரை ஆற்றிய முதல்வர் ஸ்டாலின் பெரிய அளவில் முதலீடு செய்ய தமிழ்நாட்டின் உள்ள நன்மைகளை விளக்கினார். தமிழ்நாட்டில் சுமூக தொழில்துறை சூழ்நிலை, திறமை கொண்ட தொழிலாளர்கள் என பலவற்றை குறிப்பிட்டு பேசினார்.
உரையின் துவக்கத்தில் தன்னை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக அறிமுகம் செய்து கொண்டு பின்னர் 75 ஆண்டு பாரம்பரிய மிக்க கட்சியின் தலைவர் என குறிப்பிட்டார். தனது கட்சி ஐந்து முறை மாநிலத்தை ஆட்சி புரிந்ததாகவும், தனது தந்தை நான்கு முறை முதல்வராக பணி புரிந்ததை நினைவு கூர்ந்தார். மூன்று முறை இந்தியாவின் ஆட்சி பொறுப்பை சிறுபான்மை அரசு ஆட்சி ஏற்க நேரிட்ட போது தங்களது கட்சி நிலையான பிரதமர் ஆட்சி அரசை வலுவுடன் ஆட்சி புரிய வழி வகுத்ததை பெருமிதத்துடன் கூறினார்.
[ஸ்டாலின் பேசுகிறார்]
மார்க் விட்மார், CEO of ‘FIRST SOLAR’ தனது உரையில் தங்களது நிறுவனம் தமிழ்நாட்டில் பெரிய அளவு Solar Panel உற்பத்தியை துவங்க காரணத்தை விளக்கினார். சென்னையில் தான் முதலமைச்சரிடம் இந்த உயரிய தொழில் நுட்ப ஆலையை பற்றி நிகழ்த்திய உரையாடலையும் நினைவு கூர்ந்தார்.
[மார்க் விட்மார் பேசுகிறார்]
கோலீன் மெக்லீன், CRO of ‘DIGITAL CONNEXION, தங்களது சென்னையில் துவங்க உள்ள மிக பெரிய அளவிலான data center பற்றி விரிவாக பேசினார். இந்த நிறுவனம் 100 MW அளவு மின்சாரம் தேவை கொண்டதாக பெரிய அளவிலான முயற்சியாகும். தமிழ்நாட்டின் இலக்கான 500MW திறனுடைய Data centreகள் 2027க்குள் அமைய இந்த புதிய அறிவிப்பு பெரும் துணையாக அமையும் என்றார் தொடர்ந்து.
சான்பிரான்சிஸ்கோ இந்திய தூதரக அதிகாரி, Dr ஸ்ரீகர் ரெட்டி தமிழ்நாடு முன்னோடியாக இருக்கும் தொழில்துறைகளைப் பற்றிக் குறிப்பிட்டார். இந்தியாவின் வாகன ஏற்றுமதியில் 70%, ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதி 30% , பொறியியல் உபகரணங்கள் என வரிசைப்படுத்திய தூதரக அதிகாரி மாநிலத்தை தோல் பொருட்களின் தலைநகரமாக கருதினார்.
நிகழ்வின் முடிவில் பெரும்பாலான பிரதிநிதிகள் தமிழ்நாட்டின் திறன் மற்றும் வாய்ப்புகளை பற்றி அறியும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் மன நிறைவு கொண்டு அமைச்சர் ராஜாவுடன் நேராக தொடர்பு கொண்டு பேசினர். கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் பலருடன் தொழில் நுட்பமாகவும், வர்த்தகரீதியாகவும் ஆர்வத்துடன் உரையாடியது குறிப்பிடத்தக்கது.
ராஜாவை நான் குறிப்பிட்டேன். ஆம், அன்றைய நிகழ்வு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் பிரமாண்ட நிகழ்ச்சி என்றே சொல்லலாம். அவர் ஒரு சிறந்த உரையை நிகழ்த்தினார் மற்றும் அனைவருடனும் அவரது தொடர்பு சுவாரஸ்யமாகவும் மிகவும் தகவலறிந்ததாகவும் இருந்தது. ஏனென்றால் சம்பிரதாயமான சந்திப்பிற்கு முன்னும் பின்னும் அவர் சுற்றிச் சென்று சுதந்திரமாகவும் அனைத்துத் தெளிவுடனும் பங்கேற்பாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டார். AI, லைஃப் சயின்ஸ், EV சுற்றுச்சூழல் அமைப்பு போன்றவற்றில் எழுப்பப்பட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் அவர் நம்பிக்கையுடன் பதிலளித்தார். அமைச்சரும் துறை செயலாளரும் மிகவும் சுதந்திரமாக அனைவருடனும் கலந்து கொண்டிருந்தனர்.
இன்றைய, ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த மூதலீட்டார்கள் சந்திப்பு தவிர கலிபோர்னியா மாநிலத்தில் இன்னோரு இடத்தில் 31 ஆம் தேதியும் பின்னர் செப்டம்பர் முதல் வாரம் சிகாகோ மாநிலத்தில் இந்திய வம்சாவளியுடன் ஒரு பெரிய நிகழ்வை நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டின் அந்நிய முதலீட்டுக்கு இந்த முயற்சி பெரிய அளவு உதவும் என்பது நிச்சயம்.
Leave a comment
Upload