தொடர்கள்
கவர் ஸ்டோரி
தேன் உறிஞ்சும் அதிசய விநாயகர்!! - மீனாசேகர்.

Honey-sucking miracle Ganesha!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வடமேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள மண்ணியாற்றங் கரையில் அமைந்துள்ளது திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை சமேத சாட்சிநாதசுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் தேனபிஷேகப்பெருமான் எனப் போற்றப்படும் பிரளயம் காத்த விநாயகர் இங்கு தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.
இந்த விநாயகருக்கு ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் இரவு முதல் விடிய விடிய தேனால் அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்யும் தேன் முழுவதையும் இந்த விநாயகர் உறிஞ்சி விடுவார். அதனால் இவரைத் தேன் உறிஞ்சும் விநாயகர் என்றும்,"தேன் குடிக்கும் பிள்ளையார்" அழைக்கிறார்கள்.

​ Honey-sucking miracle Ganesha!! ​

ஸ்தல புராணம்:
கிருதயுக முடிவில் உண்டான பிரளயத்திலிருந்து திருப்புறம்பியம் தலத்தைக் காக்கும் பொறுப்பை விநாயகரிடம் ஒப்படைத்தார் சிவபெருமான். தந்தையின் ஆணையை ஏற்ற விநாயகர், ஓங்காரத்தைப் பிரயோகம் செய்து ஏழு கடலின் ஆக்ரோஷத்தையும் ஒரு கிணற்றில் அடக்கி, பிரளயத்தில் இருந்து இந்தத் தலத்தை அழியாமல் பாதுகாத்தார். (அந்தக் கிணறு ஸப்தசாகரகூபம் (ஏழு கடல் கிணறு) என்று வழங்கப்பட்டு, இன்றும் கோயில் தீர்த்தமான பிரம்மதீர்த்தத்தின் கிழக்கே காணப்படுகிறது)

Honey-sucking miracle Ganesha!!

இத்தலத்தைக் காத்த விநாயக பெருமானுக்கு வருணபகவான் அந்த நேரத்தில் கடலிலிருந்து கிடைத்த கடல் பொருட்களான சங்கு, நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல் நுரை ஆகியவற்றால் பிரதிஷ்டை செய்து, பிரளயம் காத்த விநாயகர் என்று பெயரிட்டு வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம்.

Honey-sucking miracle Ganesha!!

விநாயக சதுர்த்தியன்று தேன் அபிஷேகம்:
இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்திக்கு முந்தைய நாள் மாலை 6:30 மணிக்கு தொடங்கப்படும் அபிஷேகம் விடிய விடிய நடைபெறும்.. . இதைத் தவிர மற்ற நாள்களில் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. தேன் கெட்டியான திரவம். எதன் மேல் வைத்தாலும் தேன் உறிஞ்சப்பட மாட்டாது. ஆனால், இங்கு மட்டும் தேனை முழுவதும் விநாயகர் ஈர்த்துக் கொள்ளும் அற்புதம் நடக்கிறது.

Honey-sucking miracle Ganesha!!

இந்த சிறப்பு அபிஷேகத்திற்குக் கிட்டத்தட்ட 100 கிலோ தேன் பயன்படுத்தப்படும். அன்று இரவு அபிஷேகம் செய்யப்படும் தேனானது, விநாயகர் உறிஞ்சப்படுவதும், அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியாய் காட்சி தருவதும் இன்றும் நிகழ்ந்துவருகிறது. தேன் ஒரு சொட்டு கூடத் திருமேனியை விட்டுக் கீழே வராது. அனைத்து தேனும் விநாயகர் திருமேனியால் உறிஞ்சப்படுவது அதிசயமாகும். இதனால் இவரைத் தேன் உறிஞ்சும் விநாயகர் என்பார்கள். மற்றும் இந்த விநாயகர், தேன் அபிஷேகப் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார்.

Honey-sucking miracle Ganesha!!

கும்பகோணத்திலிருந்து இக்கோயிலுக்குச் செல்ல நகரப் பேருந்து வசதிகள் உண்டு. குறிப்பாக விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் மாலை முதல் விடியவிடிய சிறப்புப் பேருந்துகள் இயங்கும்.

விநாயகர் சதுர்த்தியன்று இந்த விநாயகரை வழிபட்டால்
சர்வ சங்கடங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

விகடகவி வாசகர்கள் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் !!

​ Honey-sucking miracle Ganesha!!

https://youtu.be/Asrjc96O4TM?si=iUEnMxtcc9vDsoGH

https://youtu.be/Lt131Zshg5c?si=ds7e9egLJ5PA2w1L