தொடர்கள்
ஆன்மீகம்
பூச்சுட்டல் தினம் தினம் திவ்ய அனுபவம் - 04 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240703082251260.jpg

தமிழ் மொழியை பல்லாயிரம் காலமாக வாழ்விக்க பல விஷயங்கள் உதவியுள்ளது. அதில் முக்கியமானது ஆழ்வார்கள் அருளிய ஸ்ரீ திவ்ய பிரபந்தம். கவசம் கனெக்ட் யூடுப் சேனலில் தினமும் ஒரு பாசுரம் என அடுத்து 4000 நாட்களுக்கு நம்மை தமிழுயிலும், பக்தியிலும், ஆன்மீகத்திலும் ஈடுபடுத்த டாக்டர் வெங்கடேஷ் வழங்கும் அந்த தினந்தோறும் பிரபந்தம் காணொளிகளை தொகுத்து உங்களுக்கு வழங்குவதில் விகடகவி மகிழ்ச்சி கொள்கிறது.

பூச்சூட்டல் பாசுரங்கள்.

பெரியாழ்வார் இரண்டாம் பத்து.. 7-ம் திருமொழி பூச்சூட்டல் பாசுரம் 1

ஆனிரை மேய்க்க நீ போதி

அருமருந்தாவதறியாய்

கானகம் எல்லாம் திரிந்து

உன் கரிய திருமேனி வாட

பானையில் பாலைப் பருகிப்

பற்றாதார் எல்லாம் சிரிப்ப

தேனில் இனிய பிரானே

செண்பகப் பூச் சூட்ட வாராய்

இந்த ஈரேழு உலகங்களும் நன்மை பெறுவதற்காக வந்து அவதரித்த கிருஷ்ணா பூச்சூட்டவா...

பெரியாழ்வார் இரண்டாம் பத்து.. 7-ம் திருமொழி பூச்சூட்டல் பாசுரம் 2

கருவுடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஓக்கும் கண்கள் உருவுடையாய் உலகேழும் உண்டாக வந்து பிறந்தாய் திருவுடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூச் சூட்ட வாராய். - பெரியாவாழ்வார் திருவடிகளே சரணம்

பெரியாழ்வார் இரண்டாம் பத்து.. 7-ம் திருமொழி பூச்சூட்டல் பாசுரம் 3

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு கச்சொடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கடத்தெந்தாய் பச்சைத் தமனகத்தோடு பாதிரிப் பூச் சூட்ட வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2-7-4 பூச்சூட்டல் 4-ம் பாசுரம்

தெருவின் கண் நின்றிள ஆய்ச்சி மார்களைத் தீமை செய்யாதே மருவும் தமனகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற புருவம் கருங்குழல் நெற்றி பொலிந்த முகிற் கன்று போலே உருவம் அழகிய நம்பீ! உகந்திவை சூட்ட நீ வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2-7-5 பூச்சூட்டல் 5ம் பாசுரம்

புள்ளினை வாய் பிளந்திட்டாய்!* பொரு கரியின் கொம்பொசித்தாய்!* கள்ள அரக்கியை மூக்கொடு* காவலனைத் தலை கொண்டாய்!* அள்ளி நீ வெண்ணெய் விழுங்க* அஞ்சாதடியேன் அடித்தேன்* தெள்ளிய நீரில் எழுந்த* செங்கழுநீர் சூட்ட வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2-7-6 பூச்சூட்டல் 6ம் பாசுரம் எருதுகளோடு பொருதி* ஏதும் உலோபாய் காண் நம்பி!* கருதிய தீமைகள் செய்து* கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்!* தெருவின் கண் தீமைகள் செய்து* சிக்கென மல்லர்களோடு* பொருது வருகின்ற பொன்னே* புன்னைப் பூச் சூட்ட வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2-7-7 பூச்சூட்டல் 7ம் பாசுரம்

குடங்கள் எடுத்தேற விட்டுக்* கூத்தாட வல்ல எம் கோவே!* மடங்கொள் மதிமுகத்தாரை* மால்செய்ய வல்ல என் மைந்தா!* இடந்திட்டிரணியன் நெஞ்சை* இரு பிளவாக முன் கீண்டாய்!* குடந்தைக் கிடந்த எம் கோவே!* குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2.7.8-ம் பாசுரம்

சீமாலிகன் அவனோடு* தோழமை கொள்ளவும் வல்லாய்!* சாமாறவனை நீ எண்ணிச்* சக்கரத்தால் தலை கொண்டாய்!* ஆமாறறியும் பிரானே!* அணி அரங்கத்தே கிடந்தாய்!* ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!* இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2.7.9-ம் பாசுரம்

அண்டத்தமரர்கள் சூழ* அத்தாணியுள் அங்கிருந்தாய்!* தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்!* தூமலராள் மணவாளா!* உண்டிட்டுலகினை ஏழும்* ஓர் ஆலிலையில் துயில் கொண்டாய்!* கண்டுநான் உன்னை உகக்கக்* கருமுகைப் பூச் சூட்ட வாராய்..

பெரியாழ்வார் திருமொழி 2.7.10-ம் பாசுரம்

'செண்பக மல்லிகையோடு* செங்கழுநீர் இருவாட்சி* எண் பகர் பூவும் கொணர்ந்தேன்* இன்றிவை சூட்ட வா என்று* மண் பகர் கொண்டானை* ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்த இம் மாலை* பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன்* பட்டர்பிரான் சொன்ன பத்தே.