தொடர்கள்
அனுபவம்
ரயில் ஏறி போனாலும் துயில் எழாத மதுப் பிரியர் - மாலா ஶ்ரீ

20240710071754324.jpeg

உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னூர் அருகே அடம்பூர் ரயில்வே கிராசிங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன் அதிகாலை வேகமாக வந்த ரயில் ஒரு ஆள் மேல் மோதியிருக்க வாய்ப்பு உள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு அந்த ரயிலின் லோகோ பைலட் புகார் அளித்துள்ளார்.

உடனே ஸ்பாட்டுக்கு விரைந்தனர் ரயில்வே போலீஸ்.

அதிர்ச்சி.

அங்கு ரயில் தண்டவாளங்களுக்கு இடையே ஒரு வாலிபர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்நபரை தூக்கத்தில் இருந்து எழுப்பி விசாரித்தனர். விசாரணையில், அவர் முதல் நாள் இரவு ரயில் தண்டவாளம் என்பதை அறியாமல் படுத்து தூங்கியதாகவும் குடித்திருப்பதாகவும் உளறிக் கொட்டியிருக்கிறார்.

அவர்மீது முசோரி எக்ஸ்பிரஸ் கடந்து சென்றும்எ வ்வித சேதமும் ஏற்படாமல் ஏற்படாமல் உயிர் பிழைத்திருப்பதை கண்டு ரயில்வே அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் ஏக ஆச்சரியம்.

உ.பி. காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘‘ரயில் தண்டவாளங்களுக்கு இடையே மதுபோதையில் தூங்கியவர் பகதூர் எனத் தெரியவந்தது. அவரை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளோம். அவர்மீது முசோரி எக்ஸ்பிரஸ் உள்ட பல்வேறு ரயில்கள் கடந்து சென்றும், அவர் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

அந்த குடிகாரனுக்கு இறைவன் வேறு ஏதோ பெரிய வேலை வைத்திருக்கிறான் போலும்.