தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 095 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240702100904954.jpg

ஸ்ரீ மகா பெரியவா மற்றும் அவரது பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்து வந்தோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்.

ஏக்கர்ட் டொள்ளே

மௌனமே சிறந்த உரையாடல். திரு பால் பிரண்டன் அவர்கள் ஸ்ரீ ரமணரை சந்தித்த நிகழ்வை அவரது புத்தகத்தில் எழுதியிருந்தார் அதனை சொற்பொழிவாக அளித்துள்ளார் திரு ஏக்கர்ட் டொள்ளே . கண்டங்கள் தாண்டி , ஜாதி, மதம், நாடுகள் தாண்டி தன் பக்தர்களை தனது கருணையால் ஈர்த்துள்ளார் ஸ்ரீ ரமண மஹரிஷி .

அமைதியாக ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரையை கேட்போம்.