தொடர்கள்
ஆன்மீகம்
பொன் மாணிக்கவேல் தலைமையில் ஆன்மீக கருத்தரங்கம் - புவனகிரி ஜெயபாலன்

20240627065713495.jpeg

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு இந்து ஆன்மீக அமைப்புகள், தஞ்சாவூர் குருதயாள் சர்மா திருமண மண்டபத்தில் நடந்தது அதில் ஓய்வு பெற்ற போலீஸ் ஜி. பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டு பேசும்போது ..

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆன்மீக அமைப்பாளர்கள், சிவனடியார்கள், முருக, வைணவ, வள்ளலார், ஐயப்ப, சாய்பாபா, அம்மன் சமண, பௌத்த பக்தர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது என்பதுதான் கூட்டத்தின் முக்கிய நோக்கம்.

இந்த அமைப்புக்கு தலைவர் கிடையாது, அந்தந்த மாவட்டங்களுக்கு அவரவர்கள் தான் பொறுப்பு அந்தந்த இயக்கங்களுக்கு அவர் வைத்திருக்கும் கொடி தானே தவிர இந்த அமைப்புக்கு என தனி கொடி கிடையாது என்று கூறி பல்வேறு தகவல்களை புள்ளிவிவரத்துடன் பதிவு செய்வதுடன் மத்திய மாநில அரசுகளுக்கு சில வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக அரசு இந்து கோயில்களை ஆக்கிரமிப்பு செய்து வருவதுடன் இந்த கோயில்களின் நிதிகளை முறைகேடு செய்கிறது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஆண்டு குற்றம் சாட்டி இருந்தார். இக்குற்றச்சாட்டை மு..ஸ்டாலின் பிரதமர் சொன்னது பொய் என்று கூறியிருப்பது உண்மை அல்ல என்று சொல்லி சில தகவல்களை சொன்னார் அவற்றின் சுருக்கம்....

20240627065742330.jpeg

தமிழகத்தில் உள்ள கோயில்களை நிர்வகிக்கும் அறநிலையத்துறை பல்வேறு முறைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் அதர்மக் காரியங்களில் ஈடுபட்டு அதிகப்படியான செலவு கணக்குகளை காண்பித்து கோயில்கள் மூலம் லாபம் ஈட்டுகின்றனர். இந்து கோயில்கள் வழிபாட்டுத்தலங்கள் என்பதை மறந்துவிட்டு 38,656 இந்து கோயில்களை முந்திய அரசும் இந்த அரசும் லாபம் ஈட்டி வருமானத்தை பெருக்குவதற்காக வியாபார ஸ்தலங்களாக மாற்றி விட்டனர்.

தமிழகத்தில் உள்ள 34,119 இந்து கோயில்களின் தினசரி வருமானம் சராசரி வெறும் 13 ரூபாயிலிருந்து 27 ரூபாய் தான் இந்த வருமானத்தை வைத்து மேற்படி கோயில்களில் தினமும் ஒரு விளக்கக் கூட ஏற்ற முடியாது இந்த நிலையில் மேற்படி கோயில்களில் முறைகேடு நடக்கிறது என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சொல்லி இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. தினமும் 13 ரூபாய் வரும் கோயில்களில் என்ன முறைகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த 34,119 இந்து கோயில்கள் மீது ஒவ்வொரு வருடமும் 200 ரூபாய் வரி வித்து வருகிறது என்பதுதான் உண்மை. தமிழ்நாட்டில் இந்து கோயில்களுக்கு மட்டும் வரி விதிக்கிரார்கள் பிற மத வழிபாட்டு தளங்களுக்கு வரி விதிப்பதில்லை இந்த கோயில்களின் வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு பல முறைகேடுகள் இந்து அறநிலைத்துறை செய்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள சைவ ,வைணவ மடங்களை முடக்கி மறைமுகமாக அழித்து மடங்களுக்கு சொந்தமான கோயில்களையும் நிலங்களையும் தனது பிடிக்குள் கொண்டு வர அரசு முயற்சி செய்கிறது. தற்போது அரசு கடந்த இரண்டு வருடத்தில் 11 இந்து மடங்களை அழித்துவிட்டது எனலாம். தமிழ்நாட்டில் தன்னிச்சையாக செயல்பட்டு வந்த மடங்களில் 45 சைவ மற்றும் வைணவ மடங்களை பல நிர்வாக தொல்லை கொடுத்து மறைமுகமாக அழித்தது மட்டுமல்லாமல் அவைகளுக்கு சொந்தமான 68 கோயில்களையும் அரசு தன் பிடியுள்ள கொண்டு வந்துள்ளது இவ்வளவு பெரிய அட்டூழிய அத்துமீறில் தமிழ்நாட்டில் உள்ள ஆறு கோடியே 31 லட்சம் இந்து மக்களில் பெரும்பாலோருக்கு தெரியாமல் இருக்கும்படி சாமத்திமாக இந்து அறநிலைத்துறை செயல்பட்டு வருகிறது எனலாம்.

இந்து மடங்கள் தங்களுடைய பணத்தில் 25 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்யக்கூடாது அப்படி செலவழிக்க வேண்டுமனால் அறநிலையத்துறை கமிஷனிடம் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் இந்து மடங்களுக்கு சொந்தமான பணத்தில் பல கோடி ரூபாய்களை எடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் விலை உயர்ந்த கார் மற்றும் வாகனங்களை வாங்கி உள்ளனர் இதை தங்கள் சொந்த உபயோகிக்கும் குழந்தைகளுக்கு பள்ளி கொண்டு போய் விட்டு அழைத்து வரவும் காய்கறிகள் வாங்கவும் சுற்றுப்பயணம் செய்யவும் இப்படி பல வேலைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர், கேட்டால் இந்து மடங்களுக்கும் அதனைச் சேர்ந்த கோயில்களுக்கும் சேவை செய்து வருகிறோம் என்று அறிக்கை தருகின்றனர்.

2020 ஆம் ஆண்டு இந்துக்கள் கோயில்கள் மீது மட்டும் இந்துக்கள் கோயில்கள் மீது மட்டும் 420 கோடியே 16 லட்சம் ரூபாய் வரி விதித்துள்ளது. இதன் மூலம் சராசரி ஒவ்வொரு மாதமும் 35 கோடி ரூபாய் அரசுக்கு போகிறது இது இல்லாமல் 2020 ஆம் ஆண்டிற்கான தணிக்கை வரி என 125 கோடியே 25 லட்ச ரூபாய் வசூலித்துள்ளது இந்த ஆண்டில் மட்டும் இந்து கோயில்களின் வருமானத்தில் 574 கோடியே 38 லட்சம் ரூபாய் வரி விதித்துள்ளது.

2021-ல் இந்து கோயில்கள் மீது 427 கோடியே 87 லட்ச ரூபாய் வருகைத்துள்ளது. சராசரி ஒவ்வொரு மாதமும் 35.65 கோடி இத்துடன் தணிக்கை வரி இந்த ஆண்டுக்கு ரூபாய் 228 கோடியே 75 லட்ச ரூபாய் மொத்தத்தில் 2021-ஆம் ஆண்டின் 656 கோடியே 62 ரூபாய் அரசு சூறையாடி இருக்கிறது. சில அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்த நினைவு நாளை முன்னிட்டு தமிழகத்தில் வருமானம் உள்ள கோயில்களில் நடத்தும் அன்னதானம் கோவில் பணத்தில் இதுதான் செலவிடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு வேறு மத வழிபாட்டுத் தலங்களிலும் இதுபோல் நடப்பதில்லை. ஆனால் இந்து கோயில்களில் மட்டும் நடத்துவது எந்த விதத்தில் நியாயம் இது போன்ற திட்டத்தை செயல்படுத்தக் கூடாது இதை நிறுத்த வேண்டும். அரசியல் தலைவர்களின் நினைவு நாட்களை அந்தந்த கட்சிகளின் தலைமையாளர்களுக்கு அவர்களது கட்சி நிதியில் நிதியிலிருந்தும் மற்றும் அவர் வீடுகளில் அவர்கள் சொந்த நிதியில் இருந்து கொண்டாடப்படுவதை யார் தடுக்க போகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 10,109 கோயில்கள் பூசாரி மற்றும் அர்ச்சகர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஊதியமாக 34 ரூபாய் மட்டும் கொடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு மூன்று டீ கூட குடிக்க முடியாத நிலை இதுதான் இது இந்த அரசின் உச்சகட்ட இந்து வெறுப்பின் உள்நோக்கம் நச்சுத்தன்மை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இவர்களுக்கு தரும் ஒரு நாள் ஊதியத்தை இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கோ இந்து அறநிலைத்துறை ஆணையருக்கோ அல்லது அவர்களது கார் ஓட்டுநர்களுக்கு கொடுக்க முடியுமா கொடுத்தால் அதை ஏற்றுக் கொண்டு பணி செய்வார்களா ?

10109 கோயில் பூசாரி மற்றும் அச்சகர்களுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு ரூபாய் 34 போல் பக்தர்கள் வழங்கும் நிதியை கொண்டு ஒரு கால பூஜை செய்யும் 2850 இந்து கோவில் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களும் பசி பட்டினியை பொருட்படுத்தாமல் கோயிலை விட்டு விடக்கூடாது என்ற வைராக்கியத்தில் இறை பணி செய்து வருகிறார்கள்.

கோயில்களுக்கு சென்று வரும் சிவனடியார்களுக்கும் வைணவ பக்தர்களுக்கும் காணிக்கை அதிகமாக கொடுத்து உதவுங்கள் அதுதான் அவர்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு அடிப்படை உதவி தவறினால் அவர்கள் கோயிலை விட்டு சென்று விடுவார்கள் அவர்களின் பரிதாப நிலை தொடர்ந்தால் கடந்த கால என் ஏழு வருட ஆய்வின்படி வரும் பத்து வருடத்திலிருந்து 15 வருடத்திற்குள் 26 ஆயிரம் இந்து கோவில் பூசாரிகளோ அச்சர்களோ இருக்க மாட்டார்கள் இது தமிழகத்தில் உள்ள அனைத்து இந்துக்களையும் பாதிக்கக்கூடிய அபாயகரமான ஒரு கொடூரமான நிலை. கிராம பூசாரி அச்சகர்கள் என்றால் இவ்வளவு இலக்கணமா இந்த முறையை மாற்றி ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 600 என நிர்ணயம் செய்து மாதம் ஒன்றுக்கு 18,000 கொடுக்க வேண்டும். 100 நாள் வேலைக்கு தற்போது ரூபாய் 300 எனக்கொடுக்கும் போது ஆன்மீக சுத்தியாக எதிர்பார்ப்பது எதுவும் இல்லாமல் தினமும் தெய்வப் பணி செய்யும் இவர்களுக்கு தரக்கூடாதா தந்தால் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை நாங்கள் எல்லா மதத்தினரையும் சமமாக நடத்துகிறோம் என்று பேசியும் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்து பறைசாற்றுக் கொள்கிற அரசு ஏழை பூசாரிகள் அர்ச்சகர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தலாமே இதற்கு இந்து அறநிலைத்துறை அலுவலர்கள் வாங்கும் ஊதியத்தில் 10% கூட இருக்காது. தமிழ்நாட்டில் உள்ள சமணக் கோயில்களிலும் தற்போதைய அரசு அத்துமீறல் செயல்பாட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட முயற்சி செய்ததனால் அவைகளும் மத சுதந்திரத்தை இழந்துள்ளன.

20240627065809164.jpeg

நூறு வருடங்களுக்கு மேற்பட்ட எந்த கோயிலையும் இந்து அறநிலைத்துறை தொடக்கூடாதுன்னு சட்டம் இருக்கிறது பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட உலகத் திருமேனி சாமி சிலைகள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. திருவெண்காடு கோயிலில் 35 விக்கிரகங்கள் காட்சி பொருளாக வைத்துள்ளனர்.

இவைகள் யாவும் ராஜராஜசோழன் காலதவை. தஞ்சாவூரில் இருந்து எடுக்கப்பட்ட 5032 சிலைகளும் காட்சி பொருளாகவே இருக்கிறது பல ஆண்டுகளுக்கு பிரகமிக்கப்பட்ட தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வைக்கப்பட்டுள்ள ராஜராஜ சோழன், லோகமாதா தேவி சிலைகள் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இவற்றை பாதுகாக்க கூடிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் வழிபாட்டுத்தலங்களுக்கு தெய்வீக விக்கிரங்களை கொண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல எதற்கெடுத்தாலும் ஹை கோர்ட் போக வேண்டிய நிலை அதுக்கு அப்புறம் எதற்கு இந்த அரசுக்கு இருக்கு தமிழகத்தில் இருந்து திருடு போன தொன்மையான உற்சவ திருமேனிகள் உலகின் பல இடங்களில் உள்ள அருங்காட்சியங்களில் உள்ளன அவற்றை மீட்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அவற்றை அந்தந்த கோயில்களுக்கு வழங்கி பூஜைகள் நடத்தி பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்றார்.

20240627065833544.jpeg

2012ல் வெளிநாட்டிலிருந்து 2276 சிலைகள் 1414 சிலைகளை திருப்பி கொடுத்துவிட்டனர் வாஷிங்டனில் இருக்கும் சிலைகளை அமெரிக்கா இந்திய நாட்டு கமிஷனரிடம் ஒப்படைத்து விட்டது. அதை தமிழ்நாட்டு அரசு கேட்டு வாங்கிக்கொண்டு வரலாமே கேட்கவில்லை என்ன காரணம் என்றால் கோயிலை வெறுக்கிறாங்க அர்ச்சகர்களை வெறுக்கிறாங்க பொதுவாக சொன்னால் மெஜாரிட்டியை வெறுக்கிறாங்க ஆனால் இதை இங்கு இதை மதிப்பதில்லை. புராதன கோயில்களை புதுப்பித்து குடமுழுக்கு செய்வதற்கு தமிழ்நாடு அரசின் இரண்டு துறை இருக்கு ஒன்று இந்து அறநிலைத்துறை மற்றொன்று தொல்லியல் துறை செய்யும் வேலையை சேர்த்து எடுத்துக் கொண்டு செயல்படுகிறது இப்படி செய்தால் ஊழல் வாய்ப்பு உண்டு இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் பழமையான சில கோயில்களை அறநிலையத்துறை சார்பில் புறநான்ப்பு செய்து வருகின்றனர் இதற்குரிய நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்து பணியை துரிதப்படுத்த வேண்டும் என்றால் மேடையில் பேசி அனைவரும் தங்கள் பகுதியில் நடந்த சம்பவங்களையும் அறநிலைத்துறை செய்து வருகின்ற அத்துமீறல்களையும் பல திருமேனி சிலைகளை அரசு சார்பில் கொண்டு போய் வைத்துக்கொண்டு பூஜை செய்யாமலும் பராமரிப்பு இல்லாமலும் இருப்பது எண்ணற்றவைகளாக சொன்னார்கள்.