தொடர்கள்
கதை
தெரியாத தேசத்தில்..... சுஶ்ரீ

20240626225148572.png

சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட், டெர்மினல் 2,

கேட் நம்பர் 23 A.கேபின் லக்கேஜை கால்இடுக்கில் வச்சிட்டு

அந்த வரிசை கட்டி இருந்த இருக்கைகளின் ஒன்றில் அமர்ந்திருந்தேன்.லண்டன் போற பிரிட்டிஷ் ஏர்வேஸ் பிளைட்டுக்காக

காத்திருந்தேன்.இன்னும் குறைஞ்சது ஒண்ணரை மணி நேரம் ஆகுமாம்,கூடவே ஆனாலும் ஆகும், பிளைட்டில் ஏதோ சின்ன கோளாரு சரி பண்ணிட்டிருக்காங்க.

சீட் பெல்ட் போட்டுக்க டிங்னு தலைக்கு மேல விளக்கு எச்சரித்தது.

நிறைய தடவை பிளைட்ல போயிருக்கேன், சுலபமா மாட்டிட்டேன், பக்கத்துல இருந்த முதியவருக்கும் உதவி பண்ணினேன்.முதலில் ரன்வேல மெதுவா ஓடி ஒரு முனையில் நின்றது BA பிளேன்.மெதுவா ஆரம்பிச்ச என்ஜின் சத்தம் அடிபட்ட சிங்கமாய் கர்ஜித்தது, தரையை கிழித்துக் கொண்டு படு வேகமாய் அந்த ஓடுபாதையில் ஓட்டம் ஜிவ்வ்வ்

மெதுவா மேலே மேலேனு எழும்பி அமைதியாய் 30 ஆயிரம் அடி உயரத்தில் மிதந்தது.விமான பணிப் பெண் கொடுத்த ரெண்டு லார்ஜ் பெக்கார்டி ரம், கண்ணை அழுத்தி மயக்க நிலைக்கு தள்ளியது.

திடீர்னு பிளைட் நிலைகுலைந்த ஊஞ்சலாய் இரு புறம் ஆடியது.வேகமாய் மூக்கை கீழே செலுத்தி பாய்ந்தது மலைச்சிகரங்களின் இடையே பயணிகள் அலறினார்கள்

அபாயத்தை பூரா உணரும் முன் பிளைட் தலைகுப்பற சிதறி விழுந்தோம் பல சடலங்களாய், சிலர் ஊனமடைந்துனு நினைக்கறேன்.நான் விழுந்தது ஒரு பள்ளத்தாக்கின் இடையில் ஒரு ராட்சச மரத்தின் பிரம்மாண்ட கிளை ஒன்றில்.

பயப்படாம இறங்குனு அந்த நீல கோலிக் கண் தேவனா,தேவதையா தெரியலை என்னை கை பிடித்து இறக்கி விட்டது.சமதளம் வந்தவுடன் என்னைப் பார்த்துக் கொண்டேன், பல இடங்களில் சிராய்ப்பு எரிச்சல்

சீரியசா எதுவும் தெரியலை எல்லா உருப்புகளும் முழுசாவே இருந்தது.

என்னை இறக்கி விட்டவனைப்(வளைப்) பார்த்து கேட்டேன், இது எந்த பிரதேசம், நீ என்ன செய்கிறாய் இந்த நடுக் காட்டில்.

ஒரு புன்னகை போல ஒரு வெளிச்சம் அந்த மொழுக் முகத்தில்.

இது பூலோகத்தின் பெல்ஜியம் பகுதி மலைக் காடு. நாங்கள் ஒரு வேலையாக 320 வருஷமா இங்கே இருக்கோம்.அந்த பெரும் பறக்கும்

எந்திரத்தில் இருந்து நீ விழுவதை பார்த்து உன்னை காப்பாற்றினேன்.

நான் 32ஒய்எக்ஸ். என் கூட்டாளிகள் உன்னைப் பாத்தால் மகிழ்வார்கள்.

நான் புரியாமல் விழித்தேன், ஏதோ மென்டல் கிட்ட மாட்டிட்டோமோனு பயமா இருந்தது.விறுக் என கைகள் போல நீண்ட ஒன்று இன் இடுப்பை இடுக்கி போல பற்றி தூக்கியது, இத்தனை விரல்களா இதுதான் பேயா?ஐந்தே நிமிடத்தில் ஒரு பரந்த மைதானம், நடுவே சர்க்கஸ் டெண்ட் போல படு வெண்மையில் ஒரு இடம், மிருதுவாக உள்ளே சென்று இறக்கியது. தலைவன் போன்ற ஒருவன் ஏதோ கேட்டான்,அதில் 32ஒய்எக்ஸ்னு சொன்னது புரிந்தது.

அந்த 32ஒய்எக்ஸ் பதிலுக்கு ஏதோ பறபறபறனு சொல்ல அந்த தலைவன் தன் முகத்தில் இருந்த வாய் போன்ற குழியை திறந்து வினோத சத்தம் எழுப்பினான்(னது) சுற்றி இருந்த ஒரு 11 ம் அதே மாதிரி செய்ய சட்னு அமைதி. அந்த தலைமை ஒன்று இப்ப தமிழில் பேசியது, ஏய் மானிடா நீ எங்களை பார்த்ததை உன் சக மானிடர் யாருக்கும் சொல்லக் கூடாது.சொன்னால் எங்களுக்கு இடைஞ்சல் வரும், எங்கள் 320வருட உழைப்பு வீணாகி விடும்.இன்னும் ஒரு 123 வருட கடின உழைப்பில் இந்த எல்லா கிரகங்களையும் இணைத்து ஆட்சியை பிடிப்போம்.

உன் போன்ற அல்ப ஜந்துக்களால் எங்கள் முயற்சி கெடக் கூடாது.

நண்பர் 32ஒய்எக்ஸிடம் சொல்கிறோம் உன்னை உன் இடத்தில் விட்டுவிடச் சொல்கிறோம். அமைதி காக்கணும் சரியா?

நீங்கல்லாம் யாரு என்ன செய்யப் போறீங்க,உலகப் போருக்கு ஏதும் திட்டம் தீட்டுகிறீர்களா.

மீண்டும் அந்த தலைவன் தன் முகத்தில் இருந்த வாய் போன்ற குழியை திறந்த வினோத சத்தம் எழுப்பினான்(னது) சுற்றி இருந்த மற்ற 11 ம் அதே மாதிரி செய்தது ஒரு கிலியை கிளப்பியது.

நண்பா எங்கள் திட்டம் போரல்ல கிரகங்களை இணைப்பது, இதெல்லாம் உனக்குப் புரியாது, நீ உன் கிரகத்துக்கே போக விரும்பினால் கொண்டு சேர்க்கிறேன், இன்னும் 123 வருடம்தான்

அது வரை எங்களுக்கு இடைஞ்சல் தராதீர்கள்.டியர் 32ஒய்எக்ஸ்

இதை அவர்கள் கிரகத்தில் கிளம்பிய இடத்தில் சேர்த்து விடு.

என் முதுகில் ஏதோ ஊர்வது போல குறுகுறுப்பு 32ஓய்எக்ஸ் என் முதுகை காந்தமாய் ஆகர்ஷித்தது.

தலைக்கு மேல் ஒலி பெருக்கி அலறியது, லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பயணிகளை போர்டிங் செய்ய அழைக்கிறது. கேட் நம்பர் 23 A இப்போது திறக்கப் பட்டுள்ளது,எதிர் பாராத தாமதத்திற்கு மன்னிக்கவும்.

எழுந்து வரிசையில் நின்றேன் இவ்வளவு நேரம் வெறும் கனவா?

இல்லையே நான் அப்படித் தூங்கற ஆள் இல்லையே…….